Published:Updated:

நானே கேள்வி... நானே பதில்!

ஒரு ரூபா... ஒரு பைசா... எது அநியாயம்?

##~##

''பகவத் கீதையை முறையாகப் பின்பற்றுபவர்கள் யார்?''

 ''வேறு யார், வாக்காளர்கள்தான்! முன்னாள் முதல்வர் ஏமாற்றி ஓட்டு வாங்கினார். இந்நாள் முதல்வர் ஓட்டு வாங்கி ஏமாற்றினார். மக்கள் ஏமாந்து ஓட்டுப் போட்டார்கள்; ஓட்டுப் போட்டு ஏமாந்தார்கள். தொடர்ந்து பலனைக் கருதாமல் ஓட்டுப் போட்டு கடமையைச் செய்துகொண்டே இருக்கிறார்களே?!''

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

- எம்.சீத்தாராமன், டி.வாடிப்பட்டி.

''தமிழின் முதல் கடி ஜோக்?''

'' 'சுட்ட பழம் வேண்டுமா... சுடாத பழம் வேண்டுமா?’ என்று ஒளவையாரிடம் சிறுவன் முருகன் கேட்டது!''

- அலிமா, கடையநல்லூர்.

''இந்தியா முழுவதும் ஒவ்வொரு பிரச்னைக்கும் ஆளாளுக்கு மனு கொடுக்கும்போது மன்மோகன் சிங் என்ன நினைத்துக்கொள்வார்?''

''நம்ம கையில என்ன இருக்கு பாஸ்?''

- ஆர்.மணிமொழி, கும்பகோணம்.

நானே கேள்வி... நானே பதில்!

''முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கம்யூனிஸ்ட்டுகள்கூட மாநிலத்துக்கு ஒரு கொள்கையைக் கடைப்பிடிக்கிறார்களே... இவர்களை எல்லாம் கம்யூனிஸ்ட்டுகள் என்று சொன்னால், சே குவேராவை என்னவென்று சொல்வது?''

''அர்ஜென்டினாவில் பிறந்த சே குவேரா, கியூபாவில் புரட்சி நடத்தி... பொலிவியாவில் இறந்துபோனார். உலகம் முழுக்கப் புரட்சி நடக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட அந்த வரலாற்று நாயகன், உலகின் எல்லா நாடுகளையும் தன் தாயகமாகவே நேசித் தார். அவரது புகழ்மிக்க வரி இது: 'எனக்கு வேர்கள் கிடையாது. கால்கள்தான் உண்டு!’

சேவின் வார்த்தைகள்படி பார்த்தால், ஓர் உண்மையான கம்யூனிஸ்ட் டுக்கு உலகம் முழுவதுமே ஒரே நாடாகத் தெரிய வேண்டும். இவர்களுக்கு அப்படியா இருக்கிறது?''

- கே.சார்வாகன், சேலம்.

'' 'சுதாகரன் திருமணத்துக்கு நான் ஒரு பைசாகூடச் செலவு செய்யவில்லை’ என்று பெங்களூரு கோர்ட்டில் ஜெயலலிதா வாக்குமூலம் அளித்திருக்கிறாரே... என்ன அநியாயம் இது?''

''இதுல என்னங்க அநியாயத்தைக் கண்டுபுட்டீங்க? அவங்க மாசம் ஒரு ரூபா மட்டுமே சம்பளம் வாங்கினதை நம்புவீங்க... இப்ப இதை நம்ப மாட்டீங்களா? என்ன அநியாயங்க இது?''

- எம்.சுவேதா, கொடைக்கானல்.

நானே கேள்வி... நானே பதில்!