Published:Updated:

ஜன்னல்

ஜன்னல்

ஜன்னல்

ஜன்னல்

Published:Updated:

''நண்பனுக்குச் சமர்ப்பணம்!''

ஜன்னல்

''எல்லாப் புகழும் என் நண்பன் ஜி.வி.பிரகாஷ§க்கே!'' நெகிழ்கிறார் என்.ஆர்.ரஹ்நந்தன். மண் மன இசையால் ஆழ்மனம் தொட்ட 'தென்மேற்குப் பருவக் காற்று’ இசையமைப்பாளர். ''மியூஸிக் ட்ரூப்ல பாடிய ஆர்வத்தில் இசைக் கல்லூரியில் சேரலாம்னு மதுரையில இருந்து கிளம்பி 94-ல் சென்னை வந்தேன். ஆனா, சென்னையின் முகம் வேறு மாதிரி இருந்தது. சொந்த முயற்சியில் கர்னாடிக், இந்துஸ்தானி, பியானோலாம் கத்துக்கிட்டு, குறும்படங்கள், விளம்பரப் படங்களுக்கு மியூஸிக் பண்ணிக்கிட்டிருந்தப்ப, ஜி.வி.பிரகாஷ் அறிமுகம் கிடைச்சது. 'வெயில்’ படத்தில் என்னை உதவி இசையமைப்பாளராகச் சேர்த்துக்கிட்டார். இசை சம்பந்தமான எல்லாமே ஒரு நண்பனாக இருந்து எனக்கு கத்துக் கொடுத்தார். ஜி.வி.பிரகாஷ் இல்லைன்னா, நான் இல்லவே இல்லை!'' என்று பணிந்து பேசுகிறார் ரஹ்நந்தன்!

ராச தந்திரம்!

ஜன்னல்

ரெய்டு, விசாரணை போன்ற சமிக்ஞைகள் உணர்த்தும் 'புயலை’ யூகிக்க முடியாதவரா ராசா! 'தைராய்டு’ சம்பந்தமான பிரச்னை என்று சொல்லி தனியார் மருத்துவமனையில் ஆஜர் ஆவதற்கான முஸ்தீபுகளை முடுக்கி விட்டிருக்கிறாராம். '24 மணி நேர மருத்துவர் கண்காணிப்பு, தினமும் பிரஷர், ஷ§கர் பரிசோதனைகள் அவசியம்’ என்றெல்லாம் மருத்துவச் சான்றிதழ்கள் தயார் ஆகிறதாம். 'சகுனம்’ பார்த்து மருத்துவமனையில் சேர்ந்தால், அடுத்த இரண்டு மாதத்துக்கு சாரை யாரும் அசைச்சுக்க முடியாதாம்!

''நான் கர்ப்பம் இல்லப்பா!''

ஜன்னல்

'சிறந்த நகைச்சுவை நடிகை’ எனக் கடந்த வருடம் ஐந்து விருதுகளைக் குவித்த சந்தோஷத்தில் ஆர்த்தி, கொஞ்சமே கொஞ்சம் எடை போட்டுவிட, 'அம்மணி கர்ப்பமாக இருக்கிறார்’ என்று யாரோ செய்தி பரப்பிவிட்டார்கள். விஷயம் உண்மை என நினைத்து ஸ்வீட், பூ சகிதம் வரும் உறவினர்களுக்குப் பதில் கூற முடியாமல் தவித்துக்கொண்டு இருக்கிறார் திருமதி. ஆர்த்தி கணேஷ்கர். 'எதுவும் நல்லதுன்னா நானே கூப்பிட்டுச் சொல்றேங்க!’ என்று சமாதானப்படுத்தி அனுப்பிக்கொண்டு இருக்கிறார் வீட்டுக்கு வரும் விருந்தாளிகளை. பிரபலம்னாலே பிராப்ளம் தானே!

ரஞ்சிதா ரிட்டர்ன்ஸ்!

ஜன்னல்

பெங்களூரில் இருந்து 50 கி.மீ. தாண்டி காமாக்ஷி பாளையாவின் கல்யாண மண்டபம் ஒன்றில் ரஞ்சிதா பிரஸ் மீட். இன்னோவா காரில் நித்தியின் பக்தகோடிகள் சூழ வந்து இறங்கியவரிடம் முதல் கேள்வியே, 'நீங்களும், நித்தியானந்தாவும் படுக்கையறையில் இருக்கும் வீடியோ பற்றி?’ என எகிறி அடித்தது பிரஸ். பதறிப்போய், 'அதெல்லாம் முழுப் பொய்!’ என்றார். 'சி.டி-யைப்பற்றி எதுவும் தெரியாது. ஆனால், அதில் இருப்பது நான் இல்லை! எட்டு மாதங்கள் நித்தியானந்தாவின் பக்தையாக இருந்தேன். இப்போதும் பக்தைதான். இனியும் இருப்பேன். எனக்காக 24 மணி நேரமும் ஆசிரமத்தின் கதவுகள் திறந்திருக்கும். ஏனென்றால், நான் அவரின் திவீர பக்தை!’ என்றவரிடம், 'அவரும் உங்களின் தீவிர ரசிகராமே!’ என்று கேட்டார் ஒரு நிருபர். 'என் 'நாடோடித் தென்றல்’ படம் அவருக்கு ரொம்பவும் பிடிக்கும்னு சொல்லி இருக்கார்!’ என்று ஒருவாறாகச் சமாளித்தார்!

டைக்குத் தடை!

ஜன்னல்

சமீபத்தில் தலை முடிக்கு டை அடித்துக் கொண்டார் ஜெயலலிதா. அதோடு சில நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டார். ஆனால், சில நாட்களிலேயே திடீர் அலர்ஜியால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். 'டைதான் காரணம். இனிமேல் டை அடிக்காதீர்கள்!’ என்று மருத்துவர்களின் பரிந்துரைக்கு ஏற்ப, 'டை’க்கு தடை விதித்துவிட்டார் ஜெ!

இதைப் படிக்காதீங்க...

 'திருமணமானாலும் பரவாயில்லை!’ என சீரியலில் வெறித் தனமாகக் காதலிக்கும் ஸ்வர நடிகை, நிஜத்திலும் செல்போன் காதல் கடலை போட்டு இயக்குநர்களை டார்ச்சர் செய் கிறாராம். போனில் மட்டும் நிறுத்திக் கொண்டால் பரவாயில்லையே, தியேட் டரில் பக்கத்தில் இருப்பது யார் என்று கூடப் பார்க்காமல், தனது காதல் விளக் குக்கு ரொமான்ஸ் எண்ணெய் ஊற்றி அருகில் இருப்பவர்களைப் படம் பார்க்கவிடுவது இல்லையாம் ஸ்வரம்!

 'சினிமா ஒரு டைரக்டர் மீடியம். இயக்குநர்தான் கேப்டன்!’ என்ற நிலை டி.வி சீரியல்களில் அப்படியே உல்டா. மொக்கைக் காரணங்களுக்காக இயக்குநர்கள் கடாசப்படுவது எல்லாம் இங்கு சர்வ சாதாரணம். கடந்த ஒரு சில வாரங்களில் மட்டும் நான்கு சீரியல் இயக்குநர்கள் மாற்றப்பட்டு இருக்கிறார் கள். 'உறவுகள்’ இயக்கி வந்த ஹரி இடத்தில் இப்போது பாலாஜி, 'தங்கம்’ இதயத்துல்லாவுக்குப் பதில் நக்கீரன், 'இளவரசி’ சந்தானம் இடத்தில் ரத்தினம், 'செல்லமே’ விக்கிரமாதித்ய னுக்குப் பதில் சி.ஜே.பாஸ்கர். ஆன் ஸ்க்ரீனில் பெண்கள் அழ, ஆஃப் ஸ்க்ரீனில் ஆண்கள் அழுகிறார்கள்!

 'ஆளும் கட்சிக்கு நெருக்கமானவர்கள்’ என அ.தி.மு.க. நினைக்கும் .ஜி.பி. லத்திகா சரண், உளவுத் துறை கூடுதல் டி.ஜி.பி. ஜாஃபர் சேட், தென் மண்டல ஐ.ஜி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோரைத் தேர்தல் நேரத்தில் மாற்ற வேண்டும் என தேர்தல் கமிஷ னிடம் மனு கொடுக்கும் யோசனையில் இறங்கியிருக்கிறதாம்!

 தமிழக கவர்னர் பர்னாலாவின் பதவிக் காலம் ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது. புதிய கவர்னருக்கான போட்டியில் இரண்டு பெயர்கள் அடிபடு கின்றன. ஒருவர், மகாத்மா காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி. ஏற்கெனவே மேற்கு வங்க மாநில கவர்னராக இருந்த இவர், தற்போது சென்னை திருவான்மியூரில் வசிக்கிறார். இன்னொருவர், எம்.கே.நாராயணன். இவர் தற்போது மேற்கு வங்க மாநில கவர்னராக இருக்கிறார்!

ஜன்னல்