சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

பொது வாழ்க்கை புதிரானது!

பொது வாழ்க்கை புதிரானது!
பிரீமியம் ஸ்டோரி
News
பொது வாழ்க்கை புதிரானது!

பொது வாழ்க்கை புதிரானது!

கீழக்காணும் அரசியல் கேள்விகளுக்குச் சரியான பதில் அளித்தால், நீங்கள் செம கில்லி என்று அர்த்தம்.

பொது வாழ்க்கை புதிரானது!

1. எம்.ஜி.ஆர். ஜெயலலிதா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் யார்?

A. மாதவன்  B. சின்ன எம்.ஜி.ஆர். C. பெரிய எம்.ஜி.ஆர்.

2. எம்.ஜி.ஆர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கியவர் யார்?

A. திருநாவுக்கரசர்     B. கு.ப. கிருஷ்ணன்

C. டொனால்ட் டிரம்ப்

3 டி.ராஜேந்தர் முதன்முதலில் தொடங்கிய அரசியல் கட்சியின் பெயர் என்ன?


A. தாயக மறுமலர்ச்சிக் கழகம்

B. புரட்சி எழுச்சிக் கழகம்

C. அனைத்திந்திய லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம்

4. டி.ஆர் கட்சியின் தாரக மந்திரம் எது?

A. தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை.

B. மனித வாழ்க்கையின் முடிவு ‘டண்டணக்கா’

C. ஒருவனே தேவன். மாதா, பிதா, குரு தெய்வம்

5  நடிகர் சிவாஜி தொடங்கிய கட்சியின் பெயர் என்ன?

A. தமிழக முன்னேற்ற முன்னணி

B. தமிழ்நாடு முன்னேற்ற முன்னணி

C. முன்னணி முன்னேற்றக் கழகம்

6 எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையில் மாதவன் என்ன பொறுப்பில் இருக்கிறார்?

A. பொருளாளர் B. கொ.ப.செ  C. அவருக்குப் பொறுப்பே கிடையாது.

7 சசிகலாவின் சகோதரர் திவாகரன் தொடங்கிய கட்சியின் பெயர் என்ன?


A. அக்கா முன்னேற்றக்கழகம்

B. அண்ணா திராவிடர் கழகம்

C. அம்மா திராவிடர் கழகம்

8. சசிகலா குடும்பத்தில் எத்தனை பேர் கட்சி ஆரம்பித்திருக்கிறார்கள்?

A. 3 பேர்     B. 4 பேர்

C. 112 பேர்

9. பாஸ் என்கிற பாஸ்கரன் ஆரம்பித்திருக்கும் கட்சியின் பெயர் என்ன?

A அண்ணா எம்.ஜி.ஆர் மக்கள் கழகம்

B எம்.ஜி.ஆர், மக்கள் கழகம்

C மன்னார்குடி மறுமலர்ச்சிக் கழகம்

சரியான விடைகள் :

1) A 2) A 3) A 4) C 5) A 6) C 7) B 8) A 9) A

எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி