Published:Updated:

“கேள்விகள்தான் நம்மை உயர்த்தும்!” - மயில்சாமி அண்ணாதுரை

“கேள்விகள்தான் நம்மை உயர்த்தும்!” - மயில்சாமி அண்ணாதுரை
பிரீமியம் ஸ்டோரி
“கேள்விகள்தான் நம்மை உயர்த்தும்!” - மயில்சாமி அண்ணாதுரை

பேட்டி

நிலவுக்கு செயற்கைக்கோள் அனுப்பிய `சந்திரயான் திட்ட இயக்குநர்’ மயில்சாமி அண்ணாதுரை, சமீபத்தில் தேவகோட்டையில் உள்ள, சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுடன் கலந்துரையாடி,  விண்வெளித் துறை குறித்துப் பேசி அவர்களை ஊக்கப்படுத்தினார்.

“கேள்விகள்தான் நம்மை உயர்த்தும்!” - மயில்சாமி அண்ணாதுரை

``நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு உங்களில் ஒருவனாக, உங்களைப்போல இதே சூழ்நிலையில் அரசுப் பள்ளியில்தான் படித்தேன். நான் இரண்டாம் வகுப்பு படித்தபோது, இரண்டு ரூபாய் பென்சில் பரிசாக வாங்கியதும், என் அப்பா அடுத்தது என்ன? என்ற கேள்விதான் என்னை இந்த அளவுக்கு உயர்த்தியுள்ளது. பென்சிலில் ஆரம்பித்து பத்மஸ்ரீ பட்டம் பெற்றதற்கு பிறரிடம் நான் கேட்ட கேள்விகளும், பிறர் என்னிடம் கேட்ட கேள்விகளுமே எனது வளர்ச்சிக்குக் காரணம்.

“கேள்விகள்தான் நம்மை உயர்த்தும்!” - மயில்சாமி அண்ணாதுரை

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், `கேள்விகளைக் கேட்கும்போது அதற்குரிய பதிலாக நீ இருக்க வேண்டும்’ என்று எனக்கு ஆலோசனை வழங்கினார். அவரின் ஆலோசனையைக்  கடைப்பிடித்ததால் என்னால் பல செயற்கைக்கோள்களை உருவாக்க முடிந்தது. நீங்களும் கேள்விகளைக் கேட்பதுடன் அதன் பதில்களைத் தெரிந்துகொண்டு, உங்கள் வாழ்க்கையில் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்றார் மயில்சாமி.

“கேள்விகள்தான் நம்மை உயர்த்தும்!” - மயில்சாமி அண்ணாதுரை

மாணவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தவர், “செயற்கைக்கோள் பொதுவாக 17 நிமிடம் முதல் 20 நிமிடங்களுக்குள் அதன் சுற்றுப்பாதைக்குள் சென்றடைந்துவிடும். செயற்கைக்கோளின் எடை ஒரு கிலோகிராம் முதல் டன் கணக்கில் இருக்கும்! செயற்கைக்கோள் அனுப்பும்போது, அதன் பாகங்கள் ஒவ்வொரு இடத்திலும் பிரிந்து செல்லும். இதன்மூலம் அதன் எடை குறைந்து, வேகம் அதிகரிக்கும். படிப்படியாக ஒவ்வொரு பாகமாக அதன் உந்துதலை அதிகப்படுத்தி, விண்வெளியின் சுற்றுவட்டப் பாதைக்குள் சென்று விடும். எரிபொருள் குறைந்தாலோ, பழுதடைந்தாலோ அதன் செயல்பாடு குறைந்துவிடும்.

“கேள்விகள்தான் நம்மை உயர்த்தும்!” - மயில்சாமி அண்ணாதுரை

மக்களுக்கு உதவி செய்யவே செயற்கைக்கோள்களை விண்ணில் அனுப்பி பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. புயல், காற்றழுத்தம், காடுகளைப் பாதுகாத்தல், எல்லைப் பாதுகாப்பு எனப் பல விஷயங்களுக்காக ஆராய்ச்சி செய்கிறோம்.

“கேள்விகள்தான் நம்மை உயர்த்தும்!” - மயில்சாமி அண்ணாதுரை

மழை வரப்போவதையும் மழை நீர் எங்கு தேங்கும் என்பது குறித்தும் தொலை உணர்வு மையங்கள் மூலமாக நம்மால் சொல்லிவிட முடியும்” என்றவரிடம், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் குறித்துக் கேட்டபோது, ``விண்வெளிக்குச் செல்லும் வீரர்கள், நல்ல ஆரோக்கியமானவர்களாகப் பயிற்சி அளிக்கப்பட்டு அனுப்பப்படுவார்கள். ஒருவேளை விண்வெளிக்குச் சென்ற பிறகு உடல்நிலை பாதிப்பு அடைந்தால், அதற்கான மருந்துகளை கேப்ஸுல் வடிவில் எடுத்துச்செல்வார்கள். எனவே, அதனால் எந்த பாதிப்பும் வராது” என்றார். 

- ஞா.சக்திவேல் முருகன்