Published:Updated:

“அடுத்த தேர்தலில் பா.ஜ.க. ஜெயிக்காது!”

“அடுத்த தேர்தலில் பா.ஜ.க. ஜெயிக்காது!”
பிரீமியம் ஸ்டோரி
News
“அடுத்த தேர்தலில் பா.ஜ.க. ஜெயிக்காது!”

“அடுத்த தேர்தலில் பா.ஜ.க. ஜெயிக்காது!”

ழல் ஒழிப்புப்போராளி, ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் நிறுவனர், வழக்கறிஞர், சூழலியல் செயற்பாட்டாளர், முன்னாள் அமைச்சர் சாந்தி பூசனின் மகன் எனப் பல முக்கிய அடையாளங்கள் பிரசாந்த் பூசனுக்கு உண்டு.  அண்மையில் ஒரு நிகழ்வுக்காக சென்னை வந்திருந்தவரைச் சந்தித்தேன். 

“அடுத்த தேர்தலில் பா.ஜ.க. ஜெயிக்காது!”

“நாட்டில் எந்தப் பிரச்னை நிகழ்ந்தாலும் அதில் நீங்கள் லைம்லைட்டில் இருக்கிறீர்கள். அண்மையில் அர்பன் நக்சல் பரபரப்பு...”

“2009-ல் கார்ப்பரேட்டுகளுக்குக் கனிம வளங்கள் நிறைந்த மலைப்பகுதிகளைத் தாரைவார்க்க அன்றைய அரசாங்கம் தொடங்கியதுதான் ‘ஆபரேஷன் பச்சை வேட்டை.’  மாவோயிஸ்ட்கள் அதிகம் இருந்த ஒடிசா, ஜார்கண்டு உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நக்சல்களுக்கு எதிரான செயல்பாட்டைத் தொடங்கியிருந்தது. அரசால் பயிற்சி அளிக்கப்பட்ட சல்வா ஜுடும் எனப்படும் நக்சல் எதிர்ப்புக் குழுவினர் அந்த மாநிலங்களில் 3000-த்துக்கும் மேற்பட்ட கிராமத்தவர்களை அழித்தார்கள். வெறும் ஒரு சதவிகித மாவோயிஸ்ட்களுக்காக 99 சதவிகித மக்கள் தாக்கப்பட்டார்கள். அப்போது அதனை நாங்கள் எதிர்த்தோம். அன்றைய அரசாங்கம் எங்களை நக்சல் ஆதரவாளர்கள் என்று குற்றம்சாட்டியது.அதனால் இந்த அர்பன் நக்சல் குற்றச்சாட்டு எனக்கொன்றும் புதிதில்லை.”

“ஒரு முன்னணி வழக்கறிஞராக ‘அர்பன் நக்சல்’ என்று குற்றஞ்சாட்டப்படுவது அவமதிப்பு என்று நீங்கள் கருதவில்லையா?”
 
“துரதிஷ்டவசமாக பாரதிய ஜனதா கட்சியும் ஆர்.எஸ்.எஸ்ஸும் அவர்களை நம்பிப்பிழைக்கும் கார்ப்பரேட்டுகளும் மனிதத்தன்மையற்ற செயல்பாடுகளை எதிர்க்கும் எவரையும் அர்பன் நக்சல்கள் என்கிறார்கள். அதனால் நான் அர்பன் நக்சலாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்.”

“சமூகவலைதளங்களில் அரசுக்கு எதிராகப் போராடுவது என்பது ட்ரெண்டாகி வருகிறது. அந்த வரிசையில், `என் பிரதமர் திருடன்’ என்கிற வாசகங்கள் தற்போது தென்படுகின்றன. பிரதமரை இப்படிக் குறிப்பிடுவதுதான் ஜனநாயகமா?”


“(ஆவேசத்துடன்...) முன்வைக்கப்படும் உண்மைகள் ஒருவரைத் திருடன் என்று குறிப்பிட்டால் அவரைத் திருடன் என்றுதானே சொல்லியாக வேண்டும். கௌரி லங்கேஷ் கொலையைக் கொண்டாடியதாகக் கூறப்படும் நபர் ட்விட்டரில் பிரதமருடனான புகைப்படத்தை வெளியிடுகிறார். ஒருவகையில் மோடியே இத்தனை வன்முறையாளர்களையும் ஊக்குவிப்பவராக இருக்கிறார். துளியும் நேர்மையற்ற, வெறுப்பை புரமோட் செய்யும் பிரதமர் இந்திய வரலாற்றிலேயே இவர் மட்டும்தான்.”
 
“அத்தனை செயற்பாட்டாளர்களும் மோடியையும் பா.ஜ.க-வையும் மட்டுமே தாக்குவதாகவும் காங்கிரஸ் இடதுசாரிகளின் தூண்டுதலால் இது நடப்பதாகவும் கூறப்படுகிறதே?”

“இல்லையே! ஆபரேஷன் கிரீன் ஹன்ட்டைத் தொடங்கியது காங்கிரஸ்தான். அதே காங்கிரஸ் ஆட்சியில் நடந்த நிலக்கரி பேர ஊழலையும் , 2ஜி அலைக்கற்றை பேர ஊழலையும் நான்தான் வெளிக்கொண்டு வந்தேன்.”

“ரஃபேல் ஊழலைப் பொறுத்த வரை காங்கிரஸ் ஏற்படுத்திய பழியைத்தான் தற்போது பாரதிய ஜனதா கட்சி சுமந்துகொண்டிருப்பதாகக் கூறுகிறார்களே?


2012-ல் பிரெஞ்சு அரசின் ‘தஸ்ஸால்ட்’ நிறுவனம் முகேஷ் அம்பானியுடன்தான் முதலில் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதற்கு முதலில் பரிந்துரைத்த காங்கிரஸ் கட்சி பிறகு அந்தத் திட்டத்தை நிறுத்திவைத்தது. அதன்பிறகு ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம்தான் தஸ்ஸால்ட் நிறுவனத்துடன் கைகோப்பதாக இருந்தது. அதை மாற்றி அனில் அம்பானியுடனான பார்ட்னர்ஷிப்புக்குத் தற்போதைய மோடி அரசுதான் பரிந்துரைத்தது. எனவே மோடி அரசுதான் இதில் முதன்மைக் குற்றவாளி!”

“இதே பாரதிய ஜனதா கட்சிதான்  2019 தேர்தல் வெற்றிக்குப் பிறகு அடுத்த 50 ஆண்டுகள் அவர்களுடைய ஆட்சி மட்டுமே இருக்கும் என்று அதீத நம்பிக்கையுடன் கூறிவருகிறார்களே?”

“இத்தனை ஊழல்களையும் இத்தனை குற்றங்களையும் பார்த்த பிறகுமா அவர்கள் சொல்லுவதை நம்புகிறீர்கள். Mark my words! வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அவர்கள் 150 சீட்டுகளைக்கூடத் தாண்ட மாட்டார்கள்.”

ஐஸ்வர்யா 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz