பறவைகளின் விருப்பம் கூண்டுகள் அல்ல... சுதந்திர வானம்! அப்படிச் சுதந்திரமாகப் பறந்து சாதித்த தேவதைகளுக்கு, அந்தச் சுதந்திரப் பறவையின் வடிவிலேயே விருதுகள் அளித்து அங்கீகரிக்கிறது அவள் விகடன். இரு கைகளும் இரண்டு சிறகுகளாகி ஒரு பெண் பறக்க எத்தனிப்பதாக வடிவமைக்கப்பட்டிருந்த அவள் விகடன் விருது, இதையே குறியீடாகக் கொண்டிருந்தது. கடந்த நவம்பர் 24-ம் தேதி, சென்னை நந்தம்பாக்கம் டிரேட் சென்டரில் உற்சாகமும் உத்வேகமும் பொங்க நடந்து முடிந்த அவள் விகடன் இரண்டாவது ஆண்டு விருது விழாவின் தொகுப்பு இங்கே!

நிகழ்ச்சித் தொகுப் பாளர்கள் `லவ் குரு’ ராஜவேலும் அபிராமியும் அனைவரையும் வரவேற்க, மாலை 5 மணிக்குத் தொடங்கியது கோலாகலம்.

* ‘செயல் புயல்’ விருதினை வழங்க சீமான் மேடையேறினர். சீமானிடம், ‘`அண்மைக்காலமாக திரைப்படங்களுக்கு நிறைய எதிர்ப்புகள் கிளம்புகிறதே?’’ எனத் தொகுப்பாளர் ராஜவேல் கேட்க, ‘`அலை இல்லா கடலில் மாலுமி உருவாக முடியாது. படங்களுக்கு எதிர்ப்புகள் வரும்போது, நல்ல படங்கள் வெளிவருவதற்கான தருணமாக அது இருக்கும்’’ என்றார் சீமான். `செயல்புயல்' விருதினைப் பெற்றுக்கொண்ட ஐ.டி தொழிற்சங்கத்தின் செயற்பாட்டாளர் வசுமதி, ‘`2010-2015 வரையில் மட்டும் 58,000 ஐ.டி தொழிலாளர்கள் இந்தியா முழுக்கத் தற்கொலை செய்துகிட்டாங்க. அரசியல் கொள்கை விளைவால் அதிகம் பாதிக்கப்படுவது ஐ.டி தொழிலாளர்கள்தான். இப்படியான நெருக்கடியான வேலைக்கு இடையிலேயும், ஜல்லிக்கட்டு, நீட் எதிர்ப்பு, கஜா நிவாரணம்வரை களத்தில் நிற்கிறார்கள் அவர்கள்’’ என்றார்.

* ‘இலக்கியச் செல்வி’ விருதினை குட்டி ரேவதிக்கு வழங்கினார், அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன். குட்டி ரேவதி பேசும்போது, “கடந்த மூன்றாண்டுகளில் 80-க்கும் மேலான ஆணவக்கொலைகள் அரங்கேறியுள்ளன. இனி அதுபோல நடக்கக் கூடாது” என்றார் சமூக அக்கறையோடு.

* சின்னப்பொண்ணு, வேல்முருகன், மதிச்சயம் பாலா, செந்தில், ராஜலட்சுமி, ஆன்டனிதாசன் என நாட்டுப்புற இசைக் கலைஞர்கள் அனைவரும் மேடையேறி, ‘கலை நாயகி’ விருதினை டாக்டர் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணனுக்கு அளித்தனர். மேடையில், ‘கஜா ஒரு பேய்’ என்ற பாடலைப் பாடிய விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் தம்பதி, “உலகின் தொன்மையான இசை, தமிழிசையான யாழ். இன்றும் கேரளா வயநாடு பகுதியில் யாழ் வாசிக்கும் தமிழ்ப் பாணர்கள் உள்ளனர். யாழ் ராகத்தை உயிர்ப்பிக்கணும்” என்றபோது, முடிவில்லாத அவர்களின் கலைத் தேடல் ஆச்சர்யப்படுத்தியது.

* அபர்ணா கிருஷ்ணனுக்கு ‘சேவை தேவதை’ விருது வழங்க மேடையேறினர் சீமான் மற்றும் இயக்குநர் கோபி நயினார். ‘`நடப்புக் கல்வி குறித்த உங்கள் பார்வை..?'’ என்று இயக்குநர் கோபி நயினாரிடம் கேள்வி முன்வைக்கப்பட, ‘`ஒரு சமூகம் விடுதலையடைய, கல்வி முதன்மையான பங்கு வகிக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இன்றைய கல்விமுறையோ மக்களை மேலும் பின்னுக்குத் தள்ளிச்செல்கிறது. சுயசிந்தனை இல்லாத குழந்தையை இது வளர்க்கிறது. தன் தாய்மொழி பற்றிப் பேசாத எந்தக் கல்வியும் கல்வி கிடையாது. அயல்மொழி என்பது குழந்தைமீது செலுத்துகிற வன்முறை” என்றார். விருதினைப் பெற்றுக்கொண்ட அபர்ணா, ‘`தொடர்ந்து மாற்றுவழிகள் மூலம் கிராமங்களை முன்னேற்றுவோம்” என்றார் பெருமிதத்தோடு.

* சீரியஸாகப் போய்க்கொண்டிருந்த நிகழ்ச்சியில், ‘சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே' என்ற பாடல் ஒலிக்கப்பட, அரங்கம் ஆர்ப்பரித்தது. வெள்ளை உடையில், தனது டிரேட் மார்க் புன்னகையோடு மேடை ஏறினார் நடிகை ஜோதிகா. “எப்படி மேம் இவ்ளோ அழகா இருக்கீங்க?” என்று தொகுப்பாளர் அபிராமி கேட்க, “என் கணவர் என்னை ஹேப்பியா வெச்சிருக்கார்’’ என்று ஜோ சொல்ல, அரங்கில் விசில். ‘ஹெலோ’ என்று ‘காற்றின் மொழி’ பேசிய ஜோ, ‘`என்னுடைய சமீபத்திய படங்களில் பெண்களின் உலகம் குறித்துப் பேசப்படுவதா சொல்றாங்க. பெண்ணைப் பெருமைப்படுத்துகிற படங்களில் நடிக்கணும்னு நினைச்சுதான் தேர்வு செய்றேன். இந்தப் படங்களை எல்லாம் எடுக்குறது ஆண்கள் என்பதில் கூடுதல் ஹேப்பி’’ என்றார்.

அந்த நேரத்தில், ‘`நம் அடுத்த விருதினைப் பெற வருபவர், மணல் மாஃபியாக்களை எதிர்த்துச் செயல்பட்டு உயிர் தப்பியவர்; தர்மபுரியில் கலெக்டராக இருந்தபோது பெண் கல்விக்காக அரும்பாடுபட்டவர்; 2015 வெள்ளத்தின் களப் போராளி’’ என்ற அறிமுகத்தோடு, ‘மாண்புமிகு அதிகாரி' விருது பெற அமுதா ஐ.ஏ.எஸ்ஸை மேடைக்கு அழைத்தார் ராஜவேல்.

“13 வயதில் ஐ.ஏ.எஸ் ஆகணும்னு கனவு கண்டேன். 23 வயதில் ஐ.ஏ.எஸ் ஆனேன். சர்வீஸை ஆரம்பிச்சு 25 வருஷங்களாச்சு. எப்போதும் சரியானதைச் செய்யணும்; அதைத் தைரியமாகச் செய்யணும்’’ என்று அமுதா சொல்ல, அரங்கமே அதைத் தாரக மந்திரமாக எடுத்துக்கொண்டது. மைக் பிடித்த ஜோ, “என் லைஃப்ல எனக்கு மூணு பேரு இன்ஸ்பிரேஷன். என் அம்மா, அம்மு (ஜெயலலிதாம்மா), அடுத்து அமுதா மேம்’’ என்றபடியே அமுதா ஐ.ஏ.எஸ் காலில் விழ, மொத்த அரங்கமும் அன்பாச்சர்யத்தில் நெகிழ்ந்தது.

* விகடனுக்கும் அந்தப் போராளிக்கும் ஒரே வயது... 92 வயது. ஆம்... ‘தமிழன்னை விருது பெற கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் மேடைக்கு வந்த தருணம் அது.

70 ஆண்டுக்கால களப் போராட்டம், ‘லஃப்டி’ எனும் உழவனின் நில உரிமை இயக்கச் செயல்பாடுகள் என உலகின் மூத்த செயற்பாட்டாளரான கிருஷ்ணம்மாளுக்கு, ‘இந்து’ ராம் மற்றும் நடிகை ரேவதி விருது வழங்கிக் கௌரவப்படுத்த... அரங்கமே எழுந்து நின்று மரியாதை செலுத்தியது. ‘`மதுரையின் முதல் பெண் பட்டதாரி ஆனேன். சேவைதான் வாழ்க்கைனு முடிவு பண்ணினதும், என் கல்விச் சான்றிதழ்களை எல்லாம் நெருப்பிலே போட்டேன். அந்த நேரத்துல முதல்மந்திரி காமராஜர்கிட்ட இருந்து வேலைக்கு ஆர்டர் வந்தது. அதையும் கிழிச்சு நெருப்பிலே போட்டேன். காசியில் வினோபா பாவேவைச் சந்தித்தேன்; ‘பூமிதான இயக்கம்’ செயல்பாடு ஆரம்பமானது.

1968-ல் வெண்மணியில குழந்தைகள் உள்பட 44 பேரை ஒரே குடிசையில் வெச்சுக் கொளுத்தினப்போ, கொதிச்சுப்போயிட்டேன். குன்றக்குடி அடிகளாரைத் தொடர்பு கொண்டோம். அதைத் தொடர்ந்துதான் ‘லஃப்டி’ இயக்கத்தை நிறுவினோம்.ரெண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வீடுகளைக் கட்டித் தந்தோம். கஜா புயல் கலைச்சுப் போட்டிருக்கிறதைச் சரி செய்ய, 500 தன்னார்வலர்கள் வேணும், 5,000 வீடுகள் கட்டித் தரணும். எனக்கு இப்போ வயோதிகத்தால் கால் கை எல்லாம் நடுங்குது. இருந்தாலும் பார்த்துக்கலாம். என் கையைப் பிடிச்சிட்டு யார் வர்றீங்களோ வாங்க... நிச்சயம் நாம வெற்றி பெறுவோம்’’ என்று அவர் முழங்கியபோது, கரவொலி அடங்க நெடு நேரமானது. நரம்பு முறுக்கேறிய தருணத்தில் மைக் பிடித்த `இந்து’ என்.ராம், “அம்மா, சுதந்திர இயக்கத்தின் ஃபுட் சோல்ஜர் (foot soldier). அவரின் சாதனைகள் பல. மதர் தெரசாபோல, உண்மையான ஹீரோயின் இவர்தான்’’ என்றவர், பத்திரிகை உலகம் குறித்துப் பேசுகையில், ‘`இப்போது விகடன் ஆழமா, தொழில்நுட்ப ரீதியில் செய்திகள் பண்றாங்க. இதேபோல தமிழ்நாட்டின் போராட்டங்கள் பற்றியும் தொடர்ந்து செய்திகளைத் தரணும்’’ என்றார் குருவின் வழிகாட்டலாக. நடிகை ரேவதி, “அம்மா எவ்ளோ தெளிவா, அழகா, கோவையா பேசுறாங்க. கிரேட்!” என்றார் ஆச்சர்யம் குறையாமல்.

* ‘சேவை தேவதை’ விருதினை நீதிபதி கிருபாகரன் மற்றும் திரைக்கலைஞர் ரோகிணி வழங்க, டாகடர் மல்லிகா திருவதனன் பெற்றுக்கொண்டார். ‘`கேன்சர், சரி பண்ணக்கூடிய பிரச்னைதான். முக்கியத் தேவை... தைரியம்’’ என்றார் நம்பிக்கையுடன். டாக்டர் மல்லிகா திருவதனனுக்கு விருது வழங்கிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், ‘இரண்டாம் வகுப்புக்குட்பட்ட மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது’ என்று, தான் வழங்கிய தீர்ப்புக்குப் பின்னிருக்கும் காரணம் மற்றும் இன்றைய கல்வி முறையால் மாணவர்கள் எதிர்கொள்ளும் உளவியல் சிக்கல்கள் குறித்து அழுத்தமாகக் கூறினார்.

* ‘கல்வி தேவதைகள்' விருது வழங்க இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி பிரகாஷ், ஓவியர் டிராட்ஸ்கி மருது, பேச்சாளர் பாரதி பாஸ்கர் ஆகியோர் மேடையேறினர். ‘`இன்றைக்கும் குழந்தைகளை டாக்டர் ஆக்கணும், இன்ஜினீயர் ஆக்கணும்னுதான் பெற்றோர்கள் நினைக்கிறாங்க. இன்றைய கல்வி சுமையாதான் இருக்கு. இந்தச் சூழலை மாத்தணும்; கல்வி முறை மாறணும்” என்றார் பாரதி பாஸ்கர். டிராட்ஸ்கி மருது, “பாடத்திட்டக் குழுவில் நானும் இருக்கேன். எனக்குச் சிறு வயதில் கணக்கு என்றாலே பயம். உண்மையைச் சொல்லணும்னா அதுக்கு பயந்துதான் ஓவியன் ஆனேன். இன்றைக்குக் கணக்குன்னா பயம்னு சொல்ற மாதிரி இல்லாம மாற்றுக்கல்வி முறையை வளர்க்க முயல்கிறோம். பாடத்திட்டங்களில் நிறைய சித்திரங்களைச் சேர்க்கிறோம்” என்றார். திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ‘குழந்தைகளைக் கொண்டாடுவோம் குழு’வுக்குக் ‘கல்வி தேவதைகள்' அங்கீகாரம் வழங்கப்பட, அந்தக் குழுவினர்,

“ `குழந்தைகள் வெற்றுத்தாள்கள். நாமதான் எழுதுறோம்; நாமதான் செதுக்கறோம்’ என்ற அதிகார அடுக்குகள் ஆசிரியர்கள் மண்டைக்குள் இருக்கிறவரை நாம சிறந்த ஆசிரியராக இருக்க முடியாது. சமத்துவச் சிந்தனைக்கு நாம் மாறணும்’’ என்றனர் புன்னகையோடு.

* ‘பசுமைப் பெண்’ விருது பெற்ற சித்தம்மா, ‘`அய்யா நம்மாழ்வார் ஆலோசனை யோடுதான் ஒற்றை நாற்று நடவுக்கு மாறினேன். இன்னிக்கு என்னுடன் பலர் இணைந்திருக்காங்க’’ என்றவருக்கு, நடிகைகள் விஜி சந்திரசேகர் மற்றும் குட்டி பத்மினி விருது வழங்கினார்கள். ‘`இப்படி ஓர் அற்புதமான விவசாயத்தைச் செய்யும் சித்தம்மாதான் உண்மையான அழகி’’ என்ற விஜி சந்திரசேகர், தான் இயற்கை விவசாயம் செய்துவரும் அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார்.

* ‘லிட்டில் சாம்பியன்’ விருது பெற்ற வலு தூக்கும் வீராங்கனை ஆஷிகாவுக்கு விருது வழங்கினார், பி.ஜே.பி-யின் தமிழகப் பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன். “ஒரு குறிப்பிட்ட விளையாட்டுக்கு மட்டுமல்லாமல், எல்லா விளையாட்டுகளுக்கும் ஸ்பான்சர்ஸ் கிடைக்கணும். திறமையாளர்களுக்கு அரசு நிச்சயம் உதவும்’’ என்றார் நம்பிக்கை கொடுத்து.

* ‘சில்வர் ஸ்க்ரீன் குயின்’ விருதினை கீர்த்தி சுரேஷுக்கு வழங்க மேடையேறினர் நடிகைகள் மீனா, சிம்ரன் மற்றும் ஜெமினி கணேசன் மகள் சாமுண்டீஸ்வரி. மேடையே கலர்ஃபுல்லாக மாற, “ ‘நடிகையர்திலக'த்தில் சாவித்திரியம்மா கதாபாத்திரத்தில் நடித்தது எனது பாக்கியம். விருதுகள் மூலம் பெண்களை அவள் விகடன் என்கரேஜ் செய்றதுக்கு என்னுடைய நன்றிகள். இப்படியான மேடைக்கு வரும்போதுதான் சினிமா தாண்டி ஓர் உலகம் இருக்குறது தெரியுது” என்றார் கீர்த்தி. “பெண்களைச் சுதந்திரமாகப் பறக்கவிடணும். அவங்க நல்லா பறக்கணும்’’ என்றார் சாமுண்டீஸ்வரி. பிறகு, மேடையில் ப்ளே செய்யப்பட்ட ‘சர்கார்’ திரைப்பட ‘ஓ.எம்.ஜி’ பாடலுக்கு கீர்த்தியும், ‘முத்து’ திரைப்பட ‘தில்லானா தில்லானா’ பாடலுக்கு மீனாவும், ‘ஆல்தோட்ட பூபதி நானடா’ பாடலுக்கு சிம்ரனும் ஸ்டெப்ஸ் போட, அடி தூள்!

* ‘எவர்கிரீன் நாயகி’ விருதினை த்ரிஷாவின் சார்பாகப் பெற்றுக்கொண்டார் அவர் அம்மா உமா. இந்த விருதினை வழங்கினார்கள் சிம்ரனும் மீனாவும். ‘`ஜோடி படத்தில் ஒரு டூர் போல நினைச்சுதான் த்ரிஷா போனார். உண்மையில் அவர் முதல் படம் என்றால் அது 2002-ல் வெளியான `மவுனம் பேசியதே’தான்’’ என்றார் உமா.

* ‘குணச்சித்திர நாயகி’ விருதினைப் பெற மேடையேறிய ஈஸ்வரி ராவ், ‘காலா’ வசனத்தைப் பேசி சில நொடிகள் ‘செல்வி’யாக மாறியபோது, விழாவின் எனர்ஜியே வேற லெவலானது. அவருக்கு விருதளிக்க இயக்குநர் பா.இரஞ்சித் உள்ளிட்ட ‘காலா’ டீம் மற்றும் நடிகை அர்ச்சனா மற்றும் நடிகை ரேவதி மேடையேறி சர்ப்ரைஸ் கொடுக்க, ‘`இது ‘காலா’வுக்குக் கிடைத்த முதல் விருது. மகிழ்ச்சி!” என்றார் ஈஸ்வரி ராவ் நெகிழ்ச்சியுடன். பா.இரஞ்சித், “என் அம்மாதான் என்னுடைய வலிமையான பெண் கதாபாத்திரங்களுக்கு இன்ஸ்பிரேஷன். என் ஹீரோயின்களின் ரெட்டை மூக்குத்திக்கும் அவங்களே காரணம். கிராமங்களில் பெண் தெய்வங்களுக்குத்தான் எல்லோரும் பயப்படுவாங்க. அவங்கதான் எப்பவும் பவர்ஃபுல்’’ என்றார்.

அர்ச்சனாவின் பேச்சு உருக்கமாக இருந்தது. “எந்த ரோல் கொடுத்தாலும் அதை மிகுந்த மரியாதையோடு, கண்களில் ஒற்றிக்கொண்டு, பயபக்தியோடு வேலையை ஆரம்பிப்பார். வாழ்க்கையில் பல கஷ்டங்களைப் பார்த்துவிட்டுத் திரும்பியவர் ஈஸ்வரி ராவ். அவருக்கு இந்த விருது பொருத்தமானது” எனக் கலங்கிய கண்களோடு முடித்தார். ஈஸ்வரி ராவ் கண்களும் கலங்கியிருந்தன.

* பவுர்ஃபுல் விருது தருணம்... ராதிகாவுக்குத் ‘திரைத் தாரகை’ விருதினை வழங்க சரத்குமார், பாக்யராஜ், பூர்ணிமா, நடிகை அம்பிகா மேடையேறினர். பாக்யராஜ், “ ‘கிழக்கே போகும் ரயில்’ டப்பிங் அப்போ, ஹீரோயினுக்கு யாரையாச்சும் டப்பிங் பேசவைக்கலாம்னு டைரக்டர் பாரதிராஜா சார் சொல்ல, நான் விடாப்பிடியா, ‘ராதிகாவே பேசட்டும், இந்த வாய்ஸ் நல்லாருக்கும்’னு சொன்னேன். பிறகு அந்த வாய்ஸ் தமிழ்நாட்டில் வென்றது... நின்றது’’ என்றார். சரத்குமார் பேசும்போது, “ஆணாதிக்கம் நிறைந்த சினிமா இண்டஸ்ட்ரியில ராதிகா 40 ஆண்டுகளாக வெற்றிகரமா நிற்க, அவரின் கடின உழைப்புதான் காரணம். ஒரு சீனில் இயக்குநரோடு ராதிகாவுக்குப் பிரச்னை. நான் என்னன்னு கேட்டேன். ‘கணவன், மனைவியை அறைகிற சீன். இதுக்காகத்தான் நான் காத்திருந்தேன்னு மனைவி சொல்லணுமாம். நான் மறுத்துட்டேன். அப்படிப் பேசினா, அதன்மூலம் பெண்களுக்கு நான் என்ன சொல்லப் போறேன்?’னு கேட்டாங்க. அதுதான் ராதிகா’’ என்றார் பெருமையுடன். சின்னத்திரை நடிகர்கள் பப்லு மற்றும் வேணு அரவிந்த், “தமிழ் டெலிவிஷன்ல எப்பவும் ‘தல’ ராதிகாதான்’’ என்றனர் குரு வணக்கமாக.

* ‘சூப்பர் சாம்பியன்ஸ்’ விருதினை தமிழ்நாடு ஜூனியர் பெண்கள் கால்பந்து அணிக்கு வழங்கினார்கள், வெளிவரவிருக்கும் ‘கனா’ திரைப்பட இயக்குநர் அருண்ராஜா மற்றும் நடிகை நந்திதா. பயிற்சியாளர் கோகிலா, ‘`இங்க நிறைய குழந்தைகளுக்கு ஃபுட்பால் பூட் வாங்கக்கூட முடியலை. அவங்கதான் இன்னிக்கு நேஷனல்ஸ்ல வெற்றி பெற்று வந்திருக்காங்க’’ என்றார் பெருமிதத்துடன். அருண்ராஜா, “இப்படிக் கஷ்டப்பட்டு சாதித்த இந்தக் கால்பந்தாட்ட பிள்ளைகளின் கதை போன்றதுதான், என்னுடைய ‘கனா’ படம்’’ என்றார்.

* ‘பெஸ்ட் மாம்’ விருதினை, மிஸ் இந்தியா அனுகீர்த்தி வாஸின் அம்மா சலீனாவுக்கு வழங்கினார், த்ரிஷாவின் அம்மா உமா. சலீனாவுக்கு சர்ப்ரைஸாக வீடியோ மூலம் மேடையில் வாழ்த்தி நன்றி சொன்னார் மகள் அனுகீர்த்தி. ஆனந்தக் கண்ணீருடன் சலீனா, ‘`மாடலிங் துறையைத் தேர்ந்தெடுத்தப்போ, எப்பவும் நான் உனக்கு சப்போர்ட்டா இருப்பேன்னு சொன்னேன். என் மகள் தொடர்ந்து சாதிச்சிட்டிருக்கா’’ என்றார்.

* ‘புதுமைப் பெண்’ விருது, பாடி பில்டிங்கில் சர்வதேச அளவிலான வெற்றியாளர் ரூபி பியூட்டிக்கு. நடிகர் நகுல், நடிகை அம்பிகா மற்றும் ‘கடைக்குட்டி சிங்கம்’ தீபா ஆகியோர் அவருக்கு விருது வழங்கினர். தீபா பேசும்போது, ``இதுக்கு முன்னாடி என்னை எங்கப்பா பார்த்துக்கிட்டாக; இப்போ என் கணவர் பார்த்துக்குறாரு; நாளைக்கு என் புள்ளைக பார்த்துப்பாக. ஆனா, என்னை மாதிரி இல்லாம, இங்கே இத்தனை பொண்ணுங்க இவ்ளோ சாதிச்சு விருது வாங்குறதைப் பார்க்கும்போது சந்தோஷமா இருக்கு” என்று வெள்ளந்தியாகப் பேசி அனைவரின் மனதையும் அள்ளினார். ரூபி பேசியபோது, ‘`நான் ‘மிஸ் இந்தியா’ வென்றப்போ, அந்த நியூஸ் படிச்சுட்டு என் நம்பரைத் தேடி வாங்கி என்னைப் பாராட்டினவங்க அம்பிகா மேம்’’ என்றார் அவருக்கு நன்றி தெரிவித்து. ‘`நல்ல விஷயம் எங்கிருந்தாலும் தேடிப்போய் பாராட்டணும். அதைத்தானே செய்தேன்” என்றார் நடிகை அம்பிகா.

* ‘இரும்புப் பெண்மணி’ விருதினை விகடன் குழும நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசனிடமிருந்து பெற்றார், டாக்டர் பிரேமா தன்ராஜ். ‘`எங்கம்மா என்னிடம், ‘நீ உன்னை யாரோடும் கம்பேர் செய்யாதே... அவரவருக்கான தனித்திறமை அவரவருக்கு உண்டு’ என்று சொல்வார். அதையேதான் தீக்காயம்பட்டவங்களுக்கு நான் சொல்றேன். அழகு மனசுல இருக்கு. முகத்தில் இல்லை. என்னால முடியும்னா எல்லோராலயும் முடியும்’’ என்றார் அசல் பொலிவோடு.

* விருது என்பது கொண்டாடி கௌரவிப்பது மட்டுமல்ல... நாளைய சாதனையாளர்களை ஊக்கப்படுத்தி உந்தித் தள்ளுவதும்தான் என்ற தங்கள் விருது விழாக்களின் நோக்கத்தைப் பேசிய விகடன் குழும எம்.டி சீனிவாசன், “இந்த விருதுகள் மற்றவர்களையும் சாதிக்கத் தூண்டணும்னு கருதி அதை விழாவாக நடத்துறோம். டாக்டர் பிரேமா தன்ராஜ் போன்ற முன்மாதிரிகளை வரவேற்கும் விழா இது’’ என்றார்,

* ‘பிசினஸ் திலகம்’ விருதினைச் சின்னத்திரை டார்லிங் வாணி போஜனும், காஸ்ட்யூம் டிசைனர் வாசுகி பாஸ்கரும் வழங்க, மலர்விழி பெற்றுக்கொண்டார். காஸ்ட்யூம் டிசைனர் வாசுகி பாஸ்கரிடம் பிளேசர் எந்த ஹீரோவுக்குப் பொருத்தமாக இருக்கும் என்று தொகுப்பாளர் கேட்க... ‘தல’ என்று சொல்ல, கைத்தட்டலால் அரங்கம் அதிர்ந்தது. அடுத்ததாக வாணி போஜனிடம் ``உங்கள் அழகான கூந்தலுக்கு என்ன காரணம்?’’ என்று கேட்டதும் ``எங்க ஊரு ஊட்டி. அதுவும் ஒரு காரணம்’’ என்றார்.

* ‘வைரல் ஸ்டார்’ விருதினை `ஆர்ஜே’ ராகவிக்கு, `ஆர்ஜே’ ரியோ மற்றும் `ஆர்ஜே’ ஷா வழங்கினர். பின்னர் மூவரும் இணைந்து மேடையைத் தங்கள் ஸ்டைலில் கலகல வென்றாக்கினர். “விகடன் பல வரலாற்றுச் சாதனைகள் செய்தவர்கள். இன்று யூடியூப், வெப்சைட்னு டிஜிட்டல் பிளாட்ஃபார்ம்ல உள்ளவங்களையும் அங்கீகரித்து அழகு பார்க்குறாங்க. ரொம்ப நன்றி” என்றார் ராகவி.

ஜிமிக்கி கம்மல்... ஜிமிக்கி கம்மல்!

அவள் விருதுக்கு வந்திருந்த திரைப்பிரபலங்களின் கண்கள் விழாவை ரசித்திருக்க, நம் புகைப்படக்காரர் ரசித்து எடுத்தது அவர்கள் அணிந்து வந்த கம்மல் மற்றும் ஜிமிக்கியை.

படங்கள் : சு.குமரேசன்

* ‘சாகச மங்கை’ விருதுக்கு உரிய ரூபா அழகிரிசாமி நிகழ்வுக்கு வர இயலாததால், அவர் அப்பா அழகிரிசாமி, ரியோ மற்றும் சின்னத்திரை நடிகை வித்யாவிடம் இருந்து விருதினைப் பெற்றுக்கொண்டார். ‘`கடற்படை ஆண்களுக்கானது என்பதை உடைத்தெறிந்து இன்று அதில் இடம்பெற்றுள்ளார் என் மகள்’’ என்றார் பெருமிதத்தோடு.

* கர்னாடக இசைப் பாடகி அருணா சாய்ராமுக்கு, ‘கலை நாயகி’ விருதினை வழங்கினர் பரதநாட்டியக் கலைஞர்களான தனஞ்செயன் - சாந்தா தனஞ்செயன் தம்பதி. “பாம்பேயில இருந்தப்போகூட தவறாம விகடன் வாங்கிப் படிப்பேன். சின்ன வயசுல, விகடன்ல பாஸ்போர்ட் சைஸ் அளவிலாவது என் போட்டோ வராதான்னு பலமுறை ஏக்கப்பட்டிருக்கேன். இன்னிக்கு விகடன் ஸ்டேஜ்ல நான் விருது வாங்குறது மறக்க முடியாத அனுபவம்’’ என்றார் அருணா சாய்ராம், மகிழ்ச்சியின் உச்சத்தில். பிறகு ‘மாடுமேய்க்கும் கண்ணா' பாடலை அவர் பாட, அதற்கேற்ப நடனமாடினர் தனஞ்செயன் - சாந்தா தனஞ்செயன். ‘அபிநயத்தின் மூலமே உங்க மனைவிக்கு புரபோஸ் பண்ணுங்க' எனத் தொகுப்பாளர் கேட்க, அதை செய்துகாட்டி அசத்தினார் சீனியர் கலைஞர்!

ஒவ்வொருவரின் வெற்றியும், ஒரு நாட்டின் வெற்றிக்கான வேர் என்பதை விருது பெற்ற இந்தத் தேவதைகளின் சாதனைகள் உணர்த்தின. இந்த வேர்களைப் பார்த்து உத்வேகம் பெற்றன, நாளைய சாதனை மலர்கள்!

- சே.த.இளங்கோவன், படங்கள் : விகடன் டீம்

* திருநங்கைகளுக்காகக் களப்பணிகள் பலவற்றைச் செய்துவரும் பிரியா பாபுவுக்கு, ‘செயல் புயல்’ விருதை, பிரபல புகைப்படக் கலைஞர் ஜி.வெங்கட்ராம் மற்றும் ஃபேஷன் டிசைனர் டினா வின்சென்ட், நடிகை பிரியா பவானி சங்கர் ஆகியோர் இணைந்து வழங்கினர். முன்னதாக, பிரியா பாபுவுக்கு சிறு வயதிலிருந்தே புகைப்படங்கள் எடுத்துக்கொள்வதிலும், மாடர்னாக உடுத்துவதிலும் இருந்த ஆர்வத்தையும் ஏக்கத்தையும் பல்ஸ் பிடித்த விகடன், அதை டினாவின் ஸ்டைலிங் மற்றும் வெங்கட்ராமின் போட்டோஷூட் மூலம் பிரியாவுக்கு நிறைவேற்றிக் கொடுத்தது. அந்த நிகழ்ச்சியின் வீடியோ மேக்கிங் மேடையில் ஒளிபரப்பப்பட, அந்த போட்டோஷூட் ஆல்பத்தை சர்ப்ரைஸ் கிஃப்ட்டாக பிரியா பாபுவுக்கு வழங்கினார் வெங்கட்ராம். இருவருக்கும் பூரிப்புடன் நன்றி தெரிவித்த பிரியா பாபு, ‘` ‘அவள்’ என்பது திருநங்கையையும் உள்ளடக்கியது என்று உணர்த்தியிருக்கிற இந்த மேடைக்கு நன்றி’’என்றார்.