“உங்களை, உங்கள் பணியை இப்படி மொத்தமாக இருட்டடிப்பு செய்து விட்டார்களே? உங்களுக்கு வருத்தமாக இல்லையா? கோபம் வரவில்லையா?” என்ற என் கேள்விக்கு பொறுமையாக அவரிடமிருந்து பதில் வருகிறது. “வருத்தம்தான். அப்போது நான் வெறும் ஆராய்ச்சி மாணவி மட்டுமே. நான் முதன்முதலில் சென்டினலீஸ் மக்களுடன் தொடர்பு ஏற்படுத்தியதை அரசுக்குக்கூடத் தெரியப்படுத்தவில்லை அப்போது இருந்த உயர் அதிகாரிகள். தங்கள் புகைப்படங்களைப் பத்திரிகைகளில் போட்டுக்கொண்டு, அரசிடம் பரிசும் பதவி உயர்வும் வாங்கிக் கொண்டார்கள்.

அதுபற்றி கவலைகொள்ளாமல், நான் எங்கு இருக்கிறேனோ அங்கு என்னால் முடிந்ததைச் செய்கிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறேன். 30 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்தாலும் இந்த விருதுகளும் பாராட்டுகளும் நிறைவாக இருக்கின்றன. இவற்றைவிட, அந்த மக்களையே அதிகம் நேசிக்கிறேன்” என்று கூறுகிறார் மதுமாலா.

சமீபத்தில் அமெரிக்க மிஷனரியான ஜான் ஆலன் ஷாவைக் கொடூரமாகக் கொன்று அரைகுறையாகப் புதைத்து வைத்த பழங்குடி இனம்தான் அந்தமானின் வட சென்டினல் தீவில் வசிக்கும் சென்டினலீஸ் மக்கள். இவர்களை முதன்முதலில் வெகு நெருக்கத்தில் சந்தித்து உரையாடிய மானுடவியலாளர் மதுமாலா சட்டோப்பாத்யாய். இனி அந்தமான் காடுகளில் ஒரு வித்தியாச பயணம், மதுவுடன்…

ஆண்களே நுழையத் தயங்கும் துறை மானுடவியல். அதை நீங்கள் தேர்ந்தெடுக்க காரணம்?

நான் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, கொல்கத்தாவின் ‘ஆனந்த பசார் பத்திரிகா’ நாளிதழில்,

அந்தமானின் ஓங்கி பழங்குடியினக் குடும்பத்தில் குழந்தை பிறந்த தாக வாசித்தேன். என் தந்தையிடம் அடுத்த விடுமுறைக்கு அந்தமான் சென்று அவர்களைச் சந்திக்க வேண்டும் என்று என்றேன். பழங்குடியினரை எளிதில் சந்திக்க முடியாது; ஆராய்ச்சியாளரால் மட்டுமே முடியும் என்று அவர் சொல்ல, என் மனதில் அது பதிந்து போனது. கல்லூரி சேரும் நேரம் தோழிகள் பாட்டனி, கெமிஸ்ட்ரி என்று தேர்ந்தெடுக்க, அதன் பின்னர்தான் பழங்குடி மக்கள் பற்றிய படிப்பின் பெயரை டிக்ஷனரியில் நான் தேடினேன். ஓங்கி மக்களிடம் செல்ல `ஆந்த்ரபாலஜி' படிப்புதான் ஒரே வழி என்பதையும் உணர்ந்தேன்.

முதுகலை பட்டம் பெற்றபின், ஆந்த்ரபாலஜிக்கல் சர்வே ஆஃப் இந்தியாவில் (ஏ.எஸ்.ஐ) ஆராய்ச்சி மாணவியாகச் சேர்ந்தேன். 1989 மே மாதம் முதல் 1996-ம் ஆண்டு வரை நான் ரிசர்ச் அசோஸியேட். கிரேட் அந்தமானீஸ், ஓங்கி, ஷாம்பென்ஸ், நிக்கொபாரீஸ், ஜாரவா, சென்டினலீஸ் என்று அந்தமானின் ஆறு முக்கிய பழங்குடியினர் பற்றியும் ஆராய்ந்தேன். என் ஆய்வு அவர்கள் உடல்நலம், டிமாக்ரஃபி என்ற வாழ்விடம், வாழும் முறை, மொழி பற்றியது. என் தீசிஸ் முழுவதையும் தொகுத்தே `கார் நிக்கோபார்' புத்தகத்தை வெளியிட்டேன்.

ஓங்கி மொழியைக் கற்றுக் கொண்டது உங்கள் உயிரைக் காப்பாற்றியது இல்லையா?

1991 ஜனவரி 4 அன்று சென்டினலீஸை முதன் முதலில் நாங்கள் பார்த்தோம். தேங்காய்களை எங்கள் போட்டில் இருந்து கடலில் வீசி, அவர்கள் பக்கம் தள்ளினோம். ஆண்கள் பாதுகாப்பான தொலைவில் நின்றபடி தேங்காய்களை எடுத்துக் கொண்டார்கள். சென்டினலீஸ் பெண்களோ கரையில் இருந்தபடி வேடிக்கை பார்த்தார்கள். தேங்காய்கள் தீர்ந்து போக, மீண்டும் மதியம் காய்களுடன் சென்றோம். இம்முறை அவர்கள் எங்களைக் கண்டதும் `நரியாலி ஜபா ஜபா…' என்று கத்தினார்கள். `இன்னும் தேங்காய் வேண்டும்' என்று ஊகித்தேன். இம்முறை ஆண்கள் அவர்களது சிறு படகில் எங்கள் போட் வரை வந்தார்கள். கடற்கரையில் இருந்த 20 வயது மதிக்கத்தக்க சென்டினலீஸ் இளைஞன் ஒருவன் என் மார்புக்கு நேராக அம்பைக் குறிவைத்தான். அப்போது அங்கு வேடிக்கை பார்த்தபடி நின்ற பெண்களில் ஒருவர் கைக்குழந்தையுடன் நிற்பதைப் பார்த்தேன். ஓங்கி மொழியில் `கைரி…கைரி இஷிரா… நரியாலி ஜபா ஜபா…' என்று கத்தினேன். ஓங்கி மொழியில் கைரி என்றால் அம்மா. `அம்மா, அம்மா...இங்கே வா… தேங்காய் வாங்கிக் கொள், வாங்கிக் கொள்' என்று பொருள்படும்படி நான் அப்படி கத்தியது என் உயிரைக் காப்பாற்றியது. ஓங்கி மொழி கிட்டத்தட்ட சென்டினலீசின் மொழியுடன் இயைந்திருக்க வேண்டும் என்பது என் கணிப்பு. அருகருகே இருக்கும் தீவுகள் என்பதாலும், அவை ஒரே தாய்மொழியில் இருந்து வந்திருக்கலாம் என்ற என் திடமான நம்பிக்கையும்தான் இப்போது நான் உயிரோடு இருக்கக் காரணம்!

கைக்குழந்தையுடன் நின்ற அந்தப் பெண் குறிபார்த்துக் கொண்டிருந்த இளைஞனை லேசாகத் தள்ளிவிட அம்பு, கடல் நீரில் விழுந்தது. அவர்கள் எங்கள் அணியில் யாரையும் ஒன்றும் செய்யவில்லை. `கைரி' (அம்மா) என்ற வார்த்தைக்கு அவ்வளவு மரியாதை. ஒரு பெண்ணாக அந்த இடத்தில் நான் இருந்ததால் மட்டுமே அந்தப் பெண் அவர்களைத் தடுத்தார் என்று நான் நினைக்கிறேன்.

பழங்குடியினரது மறு குடியமர்வு பற்றிய உங்கள் கருத்து?

அவர்களை அவர்கள் இயல்புடன் வாழ நாம் அவர்கள் இடத்திலேயே அனுமதிப்பது தான் நல்லது. நம் வாழ்வியல் முறைக்கு வருமாறு அவர்களை நிர்பந்திப்பது சரியல்ல. இப்படித்தான் கிரேட் அந்தமானீஸ் பழங்குடியினரை ஆங்கிலேயர் மறுகுடியமர்வு என்ற பெயரில், அவர்கள் வாழிடத்தில் இருந்து அப்படியே பிரித்து போர்ட் பிளேருக்குக் கொண்டுசென்றனர். 3,000 பேர் அப்படி கொண்டுவரப்பட்டதில், 1971-ல்
19 பேரே எஞ்சியிருந்தனர். நோய் அவர்களை அழித்துவிட்டது. பழங்குடியினரது ஜீன்களை நாங்கள் ‘பியூர் ஜீன்கள்’ என்று சொல்வோம். இயற்கையோடு இணைந்து வாழும் அவர்களுக்கு இங்குள்ள வெப்பநிலையோ, வாழும் சூழலோ ஏற்றுக் கொள்வதில்லை. எதிர்ப்பு சக்தி குறைவதால், நோய்களுக்கு எளிதில் பலியாகிறார்கள். ஏற்கனவே சொற்ப எண்ணிக்கையில் இருக்கும் சென்டினலீஸ் மக்களை நாம் தொடர்புகொள்வது அவர்களது கொலைக்கு சமம். 20-25 பேர் கொண்ட குழுக்களாக வாழும் அவர்கள் மொத்த எண்ணிக்கையே 100-க்குள்தான் இருக்கும்.

அமெரிக்கர் ஜான் ஆலன் ஷாவின் மரணம் துரதிர்ஷ்டவசமானது. எடுத்தவுடன் அந்த மக்கள் யாரையும் தாக்குவதில்லை. கைகளை அசைத்து, கத்தியை அல்லது அம்புகளைக் காட்டி ‘இங்கு வராதீர்கள்’ என்று எச்சரிக்கிறார்கள். அதை மீறிச் செல்வது மிகவும் ஆபத்தானது.

கொலை செய்யும் அளவுக்கு பழங்குடியினர் அத்தனை ஆக்ரோஷமானவர்களா?

கார் நிக்கோபார் தீவில் பாலூட்டும் தாயும் கைக்குழந்தையும் வசிக்கும் கடலோர சிறு குடிலுக்குப் பெயர் ‘பதி வாகினி’. கடற்கரை ஓரம் இருக்கும் பதி வாகினி ஒவ்வொன்றிலும் மூன்று அல்லது நான்கு பாலூட்டும் அம்மாக்களும் குழந்தைகளும், சில காலம் வசிப்பது அத்தீவின் பழங்குடியினரது வழக்கம். 2004 சுனாமிக்குப் பின், காரா எனப்படும் சென்ட்ரல் அடாப்ஷன் ரிசர்ச் ஏஜென்சி கார் நிக்கோபார் தீவுகளில் கடலால் அடித்துச் செல்லப்பட்ட பதி வாகினிகள் பற்றி கவலை கொண்டது. பதி வாகினிகளில் தங்கியிருந்த பழங்குடியினப் பெண்கள் கடலால் அடித்துச் செல்லப்பட்டு, குழந்தைகள் அநாதைகளாகி இருப்பார்கள் என்பது அவர்கள் கணிப்பு. அநாதைக் குழந்தைகளைத் தத்தெடுக்கலாம் என்று கள ஆய்வாளர்களை அனுப்பியது. அங்கு எந்தப் பிரச்னையும் இருக்காது என்பது எனக்குத் தெரியும்.

நான் கணித்தபடியே ஒரு குழந்தைகூட அங்கு அநாதையாக இல்லை. நாகரிகமே தெரியாதவர்கள், காட்டுமிராண்டிகள் என்று நாம் அவர்களை ஏளனம் செய்கிறோம். அவர்களோ சுனாமிக்கு அடுத்த கணமே, அநாதையான குழந்தைகளைத் தங்களுடைய குழந்தைகளாக, தங்களுக்குள் பிரித்து தத்தெடுத்துக் கொண்டுவிட்டார்கள்.

சுற்றுலா செல்பவர்களால் பாலியல் வன்புணர்வுக்கு ள்ளாகியோ, ஏமாற்றப்பட்டோ குழந்தை பெற்றுக்கொள்ளும் ஜாரவா இனப் பெண்களின் அண்ணன்களும் அப்பாக்களுமே அந்தக் குழந்தைகளுக்கு ‘அப்பா’. தாத்தாவும் தாய்மாமனும் ‘அப்பா’ என்ற இடத்தில் நின்று அந்தப் பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாக்கிறார்கள். அவர்களைப்போல அன்பும் ஒற்றுமையும், கூடி வாழும் தன்மையும் கொண்டவர்கள் வேறு யாருமில்லை.

பழங்குடியினப் பெண்கள் குறித்து?

எனக்கு அதிகம் புன்னகைக்கும் பழக்கம் இல்லை. ஜாரவாப் பெண்களுடன் நான் நெருங்கிப் பழக இந்த குணம்தான் காரணம். அவர்களைக் கண்டு நாம் சிரிக்காமல் இருந்தாலே அவர்கள் நம்மிடம் எளிதில் பழகி விடுவார்கள். அவர்கள் உடை இன்றி இருப்பது என்னை கொஞ்சமும் பாதிக்கவில்லை. அவர்களது வாழும் முறை அப்படி. அவர்கள் மனிதர்கள், அதிலும் பெண்கள் என்ற பரிவும் அன்பும் எனக்கு எப்போதும் உண்டு. எட்டு ஆண்டுகளுக்குப்பின் கார் நிக்கோபார் தீவுக்கு சென்றபோதுகூட, என்னை அடையாளம் கண்டுகொண்ட நிக்கோபாரினப் பெண்கள், `ஏ தோ ஹமாரி கர் கி பேட்டி ஹை' (இவர் எங்கள் வீட்டுப் பெண்) என்று சரியாக நினைவு கூர்ந்தார்கள்.

ஓங்கிப் பெண் ஒருவரது பிரசவத்தைக் காண நான் அனுமதிக்கப்பட்டேன். குத்தவைத்து அமர்ந்த நிலையில்தான் குழந்தையைப் பிரசவிக்கிறாள் ஓங்கிப் பெண். வயதில் மூத்த பெண்கள் துணைக்கு அமர்ந்திருக்கிறார்கள். தங்கள் வாயில் தண்ணீரை உறிஞ்சி, பிறந்த குழந்தை மீது துப்பிக் கழுவுகிறார்கள். அதே போல, ஜாரவா இனப் பெண்கள், தங்கள் குழந்தை தாய்ப்பாலுடன் திட உணவு உண்ணக்கூடிய பருவம் வந்ததும், தன் வாயில் உணவைச் சவைத்து, வாய் வழியாக குழந்தைக்கு அதை ஊட்டுகிறார்கள் (ப்ரீமாஸ்டிகேஷன்). மாதவிடாய் காலத்தில் தங்கள் குடில்களில் கொஞ்சம் கற்களைப் அடுக்கி, அதன் மீது குச்சிகளைக் கட்டி, இலை தழைகளைப் பரப்பி அமர்ந்து கொள்கிறார்கள். என்ன நடந்தாலும் அந்த இடத்தைவிட்டு நகர்வதில்லை பெண்கள். ரத்தப்போக்கை இலைகள் உறிஞ்சிக்கொள்கின்றன.

அடுத்து என்ன செய்யவிருக்கிறீர்கள்?

இப்போது சோஷியல் ஜஸ்டிஸ் துறையின் ஜாயின்ட் டைரக்டர் நான். திருமணம் செய்து கொள்ளவில்லை. பழங்குடியின மக்களை மீண்டும் சந்திக்க முடியவில்லையே என்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது. தன் தோழியாக, குடும்ப உறுப்பினராகப் பழங்குடியினர் ஏற்றுக் கொண்டது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம். அவர்களைப் பற்றிய என் ஆய்வுகளை இன்னும் விரிவாக எழுத வேண்டும். நேரு பிரதமராக இருந்தபோது, மத்தியப் பிரதேசம் பஸ்தார் மாவட்டத்தில் முரியா பழங்குடியினருடன் நெருங்கிய தொடர்பிலிருந்த வெரியர் எல்வின் என்ற ஆந்த்ரபாலஜிஸ்ட்டின் நட்பு அவருக்குக் கிடைத்தது. பழங்குடியினருக்கான நேருவின் பஞ்சசீலக் கொள்கையை வடிவமைத்தது எல்வின்தான். அது போலவே, ஆந்திரபாலஜிஸ்ட்டுகளுக்கு நேர்மையும் ஒரிஜினாலிட்டியும் மிகவும் முக்கியம். இன்னமும் 3-4 வருடங்கள்தான் எனக்குப் பணிக்காலம் எஞ்சியிருக்கிறது. பழங்குடியினர் குறித்த அரசின் ஆய்வுகளிலும், அவர்களுக்கான அரசு உதவித்திட்டப் பணிகளிலும் ஈடுபட ஆசையாக இருக்கிறது. வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் தீவுகளுக்குச் செல்வேன்.

வேலை முடித்து ஓரிடத்திலிருந்து அடுத்த இடத்துக்கு நான் செல்லும்போதெல்லாம் அந்தக் குழந்தைகள் என்னைச் சூழ்ந்து கொள்வார்கள். ‘மது… மிட்டாயி… மது மிட்டாயி...” என்று மிட்டாய் கேட்பார்கள். ‘மது யூ அவர் ஃப்ரெண்ட்’ என்று சொல்லித்தான் என்னை வழியனுப்புவார்கள் அந்தக் குழந்தைகளும், அவர்களின் பெற்றோரும்.

ஜான் ஆலன் ஷாவின் உடலைக் கைப்பற்ற வேண்டுமானால், அரசு தொடர்புகொள்ள வேண்டியது இந்தப் பெண்மணியைத்தான்.

சென்டினல் தீவுவாசி களுடனான நம் உறவுக்குப் பாலமாக இருப்பார் மதுமாலா. இத்தனை காலத்துக்குப் பின்னும் இந்தப் பெண்ணுக்குள் உயிர்ப்புடன் இருக்கிறது ஆதி குடிகளின் மேலான பேரன்பு.

- நிவேதிதா லூயிஸ்

குழந்தையின் வளர்ச்சியை அதிகரிக்க, உயரத்தை அதிகரிக்க, அறிவுத்திறனை அதிகரிக்க என ஏகப்பட்ட ஊட்டச்சத்து பானங்களின் விளம்பரங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகின்றன. இவையெல்லாம் குழந்தையின் ஹார்மோன் சுழற்சியில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவை என்பதால் இவற்றைத் தவிர்ப்பது நல்லது. மாறாக, வீட்டிலேயே செய்த சத்து மாவுக் கஞ்சி, பயறு உருண்டைகள் கொடுக்கலாம்.

தொகுப்பு : சு.சூர்யா கோமதி