அந்த நாள் முதல் இந்த நாள் வரை... மிகப் பெரிய சந்தோஷம் முதல் தாங்கவே முடியாத துயரம் வரை... இதுவரை பேசாத விஷயங்களையும்கூட அவள் வாசகிகளோடு பகிர்கிறார் ‘சின்னக்குயில்’ சித்ரா.

மகள் நந்தனாவின் நினைவுகள் பற்றி...

- புனிதவதி கணேசன், வேலூர்

நந்தனாவுக்கு என் குரல் ரொம்பப் பிடிக்கும். நான் வீட்டில் பிராக்டீஸ் பண்ணும்போது பக்கத்துல உட்கார்ந்து ரசிப்பாள்; அடிக்கடி என்னைப் பாடச்சொல்லிக் கேட்பாள். தாலாட்டுப் பாடி அவளைத் தூங்க வைக்கணும். நான் பாடிய ‘எந்து பரஞ்சாலும்’ என்ற மலையாளப் பாடல், அம்மா - மகள் உறவை அழகா வெளிப்படுத்தும். அவளுக்காகவே அந்தப் பாடலை உருவாக்கினதா நினைச்சு, அதை அடிக்கடி என்னைப் பாடச் சொல்வா. என்னுடன் இசை நிகழ்ச்சிகளுக்கு வரும்போது இரவு நேரத்திலும் முழிச்சிட்டிருப்பா; மேடையில் இந்தப் பாடலை நான் பாடி முடிச்சதும் தூங்கிடுவா. 15 ஆண்டுகள் நான் தவமிருந்து பெற்ற குழந்தை; ஆசை ஆசையாக வளர்ந்த குழந்தை. என் உயிரே நந்தனாதான். அவளுடைய இழப்பால் உண்டான வலியும் சோகமும் என் வாழ்நாள் முழுக்க இருக்கும். ஆறாத வடு அது. அப்போ `இனி வாழ்க்கையில் எல்லாமே முடிஞ்சிடுச்சு; இசைப் பயணத்தையே நிறுத்திடலாம்’னு முடிவெடுத்தேன். அந்த மிகத் துயரமான மனநிலையிலிருந்து என்னை மீட்டெடுக்க குடும்பத்தினர், இசைத்துறையினர், நண்பர்கள்னு பலரும் ஆதரவா இருந்தாங்க. அவங்க எல்லோருக்கும் நன்றிக்கடன்பட்டிருக்கேன்.

மறக்க முடியாத ஒரு பாராட்டு?

- எல்.பிரபாவதி, செகந்திராபாத்

என் இளமைப் பருவத்தில் இந்திப் பாடல் களுக்குப் பெரும் வரவேற்பு இருந்தது. அப்போ, லதா மங்கேஷ்கர் அம்மாவின் குரலைக் கேட்கும்போதெல்லாம், அவரை ஒருமுறை நேரில் பார்க்க ஏங்குவேன். ஒரு ரெக்கார்டிங் தருணத்துல, ‘சீக்கிரம் பாடி முடிச்சுட்டு, ஒரு ஃபங்ஷனுக்குப் போகணும்’னு எஸ்.பி.பி சார் சொன்னார். ‘எங்கே சார்?’னு கேட்டேன். ‘லதாஜி சென்னைக்கு வந்திருக்காங்க. அவருடன் ஒரு நிகழ்ச்சியில் பாடப் போகணும்’னு சொன்னார். ‘லதா அம்மாவை நான் பார்த்ததேயில்லை. நானும் வர்றேன்’னு அவர்கிட்ட கேட்டேன். ‘சரி’ன்னு சொன்னவர், அந்த நிகழ்ச்சியில் லதா அம்மாவை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். ‘உங்க பாடல்களைக் கேட்டிருக்கேன்’னு லதாஜி சொன்னது சந்தோஷமா இருந்தது.

லதா அம்மாவின் 75-வது பிறந்தநாள் நிகழ்ச்சி மும்பையில் நடந்தது. அதில் பாட என்னை அழைச்சாங்க. நிகழ்ச்சிக்கு முந்தைய நாள் கனமழை பெய்ததால, சரியா ரிகர்சல் பண்ண முடியலை. அடுத்த நாள் நிகழ்ச்சியில் என்னை முதல் நபரா பாட அழைச்சுட்டாங்க. பயத்துடனேயே, லதா அம்மாவுக்குப் பிடித்த ‘ரசிக்கு பல்மா’ உட்பட அவர் பாடிய இரண்டு பாடல்களைப் பாடினேன்.

பிறகு அவரின் 80-வது பிறந்த நாளில் அவர் பாடிய பாடல்களை நான் பாடி பதிவுசெய்து, அந்த சி.டி-யை நானும் என் கணவரும் கிஃப்ட்டா அனுப்பி வெச்சோம். ஒருநாள் ஒரு போன்கால் வந்தது. ‘சித்ரா... திஸ் இஸ் லதா மங்கேஷ்கர்’னு இனிமையான குரல்ல அம்மா பேசினாங்க. இன்ப அதிர்ச்சியில் கொஞ்சநேரம் என்னால பேச முடியாம திக்குமுக்காடிப்போயிட்டேன். ‘நீங்க அனுப்பிய சி.டி கிடைச்சது. நன்றி. உங்க குரலும் பாடல்களும் நல்லா இருக்கு. வாழ்த்துகள்!’னு சொன்னாங்க. அந்தப் பாராட்டை மறக்கவே முடியாது.

மிகமிக பிஸியாக இருந்தபோது இழந்த விஷயங்கள்?

- கி.ஜெயமாலினி, மைசூரு

1985 - 2000-ம் ஆண்டு காலகட்டங்கள்ல ரொம்ப பிஸியாகப் பாடிட்டிருந்தேன். சினிமா பாடல் ரெக்கார்டிங்கோடு, நிறைய மேடை நிகழ்ச்சிகளிலும் பாடுவேன். காலையில் கிளம்பினால், இரவுதான் வீட்டுக்கு வருவேன். பல ஸ்டுடியோக்களில் மாறி மாறிப் பாடுவேன். பண்டிகைக் காலங்கள்ல கூட குடும்பத்தினருடன் செலவிட நேர மிருக்காது. அப்போ அதிகபட்சமாக ஒரே நாளில் 12 பாடல்களைப் பாடினேன். ரெக்கார்டிங் முடிச்சு, அப்படியே மேடை இசை நிகழ்ச்சிகளிலும் பாடப் போவேன். நேரமின்மையால், பெரும்பாலும் கார்லதான் சாப்பிடுவேன். சரியா சாப்பிட முடியாது; தூக்கம் இருக்காது. ‘சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்’னு என் அம்மா திட்டி னாங்க. அதுக்கு அப்புறம்தான் எனக்கான ஓய்வு நேரம் குறையாமப் பார்த்துக்கிட்டேன். பின்னணிப் பாடகியாகி 35 வருஷத்துக்கும் மேலாகுது. காலம் வேகமா ஓடிடுச்சு.

இளைய தலைமுறைப் பாடகிகளில் உங்களுக்குப் பிடித்தவர்கள்?

- தரணியா ராஜேஷ், ஒசூர்

ஸ்ரேயா கோஷல், ஸ்வேதா மோகன், சின்மயி உள்ளிட்ட பலர் சிறப்பாகப் பாடுகிறார்கள்.

ஏராளமான விருதுகள் பெற்றிருக்கிறீர்கள். அவை உங்களை எப்படி உற்சாகப்படுத்துகின்றன?

- கலைச்செல்வி ராதாகிருஷ்ணன், மதுரை

காலேஜ் படிக்கும்போதே புகழ், விருது, வருமானம்னு வளர்ச்சியடைய ஆரம்பிச் சுட்டேன். அந்த முதிர்ச்சியடையாத தருணத்தில், எப்படிப் பக்குவமா நடந்துக் கணும்னு என் அப்பா நிறைய ஆலோசனைகள் கொடுத்தார். குறிப்பா, ‘தலைக்கனம் வந்துட்டா நம்ம வாழ்க்கை நம் கையில் இருக்காது’னு அப்பா சொன்னதை என் மனசுல ஆழமா பதிய வெச்சுக்கிட்டேன். அதனால் இப்போவரை எந்தப் புகழையும் நான் பெரிசா எடுத்துக்கமாட்டேன். ‘பத்மஸ்ரீ’ விருது, ஆறுமுறை தேசிய விருதுகள், 30-க்கும் மேற்பட்ட பல மாநில அரசுகளின் விருதுகள்னு நிறைவான அங்கீகாரம் கிடைச்சிருக்கு. ஒரு விருது கிடைக்கிறப்போ ‘நமக்குப் பொறுப்பு கூடியிருக்கு’னு மட்டும்தான் நினைப்பேன்.

ஒருமுறை நான் பாடிய சில பாடல்களை எனக்கு ஒலிபரப்பி, ‘நீ பாடியதிலுள்ள தவறுகளைக் கண்டுபிடி’னு ராஜா சார் சொன்னார். எனக்குத் தெரிஞ்ச தவறுகளைச் சொன்னேன். எனக்குத் தெரியாத தவறுகள் சிலவற்றையும் சொல்லி, ‘இனி இந்தத் தவறுகள் வராம பார்த்துக்கிட்டா, உன் கரியர்ல சீக்கிரமே வளர்ச்சியடைய முடியும்’னு சொன்னார். பிறகு ரிலீஸாகும் என் ஒவ்வொரு பாடலையும் பலமுறை கேட்டு, தவறு இருந்தால் அவை மறுபடியும் வராம பார்த்துப்பேன். இப்படியான பயனுள்ள ஆலோசனைகள்தான், எனக்குப் பெரிய ஊக்கம்.

குரல் வளத்துக்கான சீக்ரெட்?

- உ.அபிராமி, சேரன்மாதேவி

ஸ்பெஷல் விஷயங்கள்னு எதுவுமில்லை. குரல்வளம் கடவுள் கொடுத்த கிஃப்ட். அதைச் சரியா கவனிச்சுக்கிறேன். பாட வந்த காலத்திலிருந்து இப்போவரை, வீட்டில் தனிமையில் பாடி பயிற்சி எடுப்பேன். குளிர்ச்சியான உணவுகளைத் தவிர்ப்பேன். காதுக்குள் குளிர்காற்று செல்லாமல் பார்த்துப் பேன். பருவநிலை மாறும்போது குரல்வளம் பாதிக்காத வகையில் முன்னெச்சரிக்கையுடன் இருப்பேன். சில நேரங்களில் வாய்ஸ் ரெஸ்ட் எடுப்பேன்.

சென்னைக்கு வந்து பாடிச்சென்ற காலத்தையும், சென்னையிலேயே நிரந்தரமாகக் குடியேறிய காலத்தையும் எப்படிப் பார்க்கிறீங்க?

- சிவகாமி சுந்தரம், சென்னை-17

1982-ம் ஆண்டு ஒரு ரெக்கார்டிங்குக்காக முதன்முதலாகச் சென்னை வந்தேன். அப்போ பெரும்பாலும் செம்மண் பாதைதான் இருக்கும். வயல்வெளிகள், மாடுகளை நிறைய பார்க்க முடியும். 1984-ம் ஆண்டுக்குப் பிறகு தமிழில் பிஸியானதால் சென்னையில் குடியேறி, நானும் சென்னைவாசியாகிட்டேன். இன்றைக்கு இருக்கிற கட்டட நெருக்கம், மக்கள் நெருக்கம், போக்குவரத்து நெரிசல் அப்போ இல்லை. இத்தகைய கால மாற்றங்கள் ரொம்ப வியப்பை உண்டாக்குது. முந்தைய பசுமை சென்னையை இன்னிக்குப் பார்க்க முடியாதது வருத்தமா இருக்கு.

மூன்று தலைமுறை பாடகர்களுடன் இணைந்து டூயட் பாடியிருக்கிறீர்கள்... உணர்ந்த வித்தியாசங்கள் என்ன?

- மாளவிகா வாசுதேவன், திருச்சூர்

டி.எம்.எஸ் சாருடன் ஒரு டூயட் பாடல்தான் பாடினேன். ஜேசுதாஸ் அண்ணன், எஸ்.பி.பி சார் ஆகியோருடன் நிறைய டூயட் பாடல்களைப் பாடியிருக்கேன். சீனியர் பாடகர்களுடன் பாடும்போது அவங்ககிட்ட இருந்து நிறைய பயனுள்ள விஷயங்களைக் கற்றுக்கொண்டேன்; அவங்களும் எனக்குக் கற்றுக்கொடுத்தாங்க.

என் காலத்தில் இசைத்துறைக்கு வந்த மனோ மற்றும் அதற்குப் பிறகு ஃபீல்டுக்கு வந்த ஜூனியர் பாடகர்களுடன் பாடும்போதெல்லாம் ஃப்ரெண்ட்லியா பாடுவேன். முதல் இரண்டு தலைமுறை பாடகர்களுடன் பாடிய காலத்தில், ரெண்டு பேரும் இணைந்து ஒரே நேரத்துலதான் பாடுவோம். அப்போ ஒருத்தர் தவறா பாடினாலும், மறுபடியும் முதல்ல இருந்து ரெண்டு பேரும் பாடணும். சிரமமானது என்றாலும், இந்த முறை ஆரோக்கியமானது. இன்றைக்கு ஆண், பெண் பாடகர்களைத் தனித்தனியே பாடவெச்சு, பிறகு டூயட்டாக மாத்திடுறாங்க. இதனால, இளம் பாடகர்களுடன் நேரடியாக இணைந்து பணியாற்றும் வாய்ப்பு அமையறதில்லை. அதனால் ஒருவர் மூலம் இன்னொருவர் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பும் இருப்பதில்லை. இதுதான் வருத்தத்தைக் கொடுக்குது.

நீங்கள் அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்கள்?

- ஜான்சி கண்ணன், கோவை

ஒவ்வொரு நாளும் அந்த நாளின் சூழலைப் பொறுத்து மனதில் சில பாடல்களை நினைப்பேன்; பாடுவேன். இன்னிக்கு, காரணம்னு எதுவும் இல்லாம ‘மனசுக்குள்ளே காதல் வந்தல்லோ’ பாடலை முணுமுணுத்தேன்!

உங்கள் சிரிப்பு மற்றவர்களை மகிழ்விக்கும். அதை யாரெல்லாம் உங்களிடம் சொல்லிக் கேட்டிருக்கிறீர்கள்?

- தேவிகா மணிமாறன், திருச்சி

(கலகலப்பாகச் சிரிக்கிறார்) என் உறவினர்களின் குழந்தைகள் பலரும் என் குழந்தைகள்போலத்தான். அவர்களுடன் நான் செலவிடுகிற நேரம் ஸ்பெஷலானது. அப்போது குழந்தைகள் என் சிரிப்பை அதிகம் ரசிப்பாங்க. ‘அம்மா, நீங்க சிரிக்கும்போது உங்க ரெண்டு கன்னத்திலும் குழி விழுவது அழகா இருக்குது’னு சொல்லுவாங்க. அதைக் கேட்டதும் இன்னும் கூடுதலா சிரிப்பேன். ஒருவேளை என் சிரிப்பு உங்களை மகிழ்வித்தால், கடவுளுக்கு நன்றி; உங்களுக்கும் நன்றி!

இசை தவிர, பிடித்த செயல்பாடுகள்?

- வி.கார்த்திகைச்செல்வி, அந்தியூர்

வீட்டு உள்கட்டமைப்பில் பெரிய ஆர்வம் உண்டு. எந்த இடத்தில் எந்தப் பொருள் இருந்தால் அழகா இருக்கும்னு என்னால் எளிதாகக் கணிக்க முடியும். என் வீட்டில் ஒவ்வொரு பொருளையும் பார்த்துப் பார்த்து அழகுபடுத்தி வைப்பேன். எனக்குத் தெரிஞ்சவங்களுக்கும் ஆலோசனை கொடுப்பேன். பிடித்த காமெடி, சென்டிமென்ட் சினிமாக்களை மட்டும் பார்ப்பேன். கேம் விளையாடுவேன். முன்பு நிறைய புத்தகங்கள் படிப்பேன். இப்போ அந்தப் பழக்கம் குறைஞ்சுடுச்சு. சீக்கிரமே வாசிப்புப் பழக்கத்தை அதிகப்படுத்தணும்.

டி.வி ரியாலிட்டி நிகழ்ச்சிகளின் நடுவர் பணி பற்றி...

- பாக்யாவதி சந்திரன், விழுப்புரம்

ஒரு மலையாள சேனலின் இசை நிகழ்ச்சியில்தான் என் நடுவர் பயணத்தைத் தொடங்கினேன். தமிழ் மற்றும் மலையாள சேனல் நிகழ்ச்சிகள்லதான் நடுவராக அதிகம் இருந்திருக்கேன். போட்டியாளர்களாக குட்டீஸ் கலக்கறாங்க. குழந்தைகள் சூழ் உலகத்துல இருக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கும். அந்த பாசிட்டிவ் எனர்ஜியால் என் பர்சனல் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியாக இயங்க முடிகிறது.

நடிப்பு வாய்ப்பு வந்திருக்கிறதா?

- சி.அம்சவேணி, நாமக்கல்

பல வாய்ப்புகள் வந்திருக்கு. நடிப்பில் எப்போதும் எனக்கு விருப்பம் இருந்ததில்லை. ஆனா, இரு தெலுங்குப் படங்கள்ல, பாடகி சித்ராவாகவே சில சீன்கள்ல நடிச்சிருக்கேன்.

எதிர்காலத்தில்..?

- லீலா ஜோசப், எர்ணாகுளம்

நான் கொஞ்சம் ஓவர் எமோஷனல் பர்சன். என் பிரச்னைகளை மட்டுமல்ல, மற்றவர்களின் கவலைகளையும் வலிகளையும் நினைச்சு வருந்துவேன்; கடவுள்கிட்ட வேண்டுவேன். முன்பே சொன்னதுபோல, ஒரு விஷயத்துக்குப் பெரிசா சந்தோஷப்படுவதற்குள் ஏதாவதொரு சோகம் என்னைத் தாக்கிடும். எதிர்காலம் குறித்து எந்த எதிர்பார்ப்பும் இல்லாம, என்னால் யாருக்கும் எந்தப் பிரச்னையும் வராம வாழ்ந்துகிட்டு இருக்கேன். இதுபோதும் எனக்கு. இப்போ சினிமா மற்றும் மேடை இசை நிகழ்ச்சிகள்ல பாடிக்கிட்டிருக்கேன். ஒரு ஸ்டுடியோ இருக்கு. அதை கணவர் விஜயஷங்கர் கவனிச்சுக்கிறார். நிறைய ஆல்பங்களை வெளியிட்டிருக்கோம். டிவோஷனல் ஆல்பங்களை அதிகம் வெளியிட ஆசை. அதற்கான பணிகள்ல கவனம் செலுத்தணும். வரக்கூடிய இன்ப துன்பங்கள் எதுவானாலும், அதை ஏற்றுக்கொள்ள என்னைத் தயார்படுத்திப்பேன். அதற்கான ஆற்றலைக் கடவுள் கொடுப்பார்.

கு.ஆனந்தராஜ் - படங்கள் : பா.காளிமுத்து

டிப்ஸ்

குழந்தையின் வளர்ச்சி என்பது கருவில் இருந்தே ஆரம்பித்துவிடுகிறது. கர்ப்பகாலத்தின் ஐந்தாவது மாதத்துக்குப் பிறகிலிருந்தே கருவிலிருக்கும் சிசு, தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை உணர ஆரம்பித்துவிடும். எனவே, கர்ப்பிணிப் பெண் இரண்டாவது ட்ரைமஸ்டரில் இருந்தே மெல்லிய இசை கேட்பது, நல்ல புத்தங்கள் படிப்பது போன்றவற்றைச் செய்வதுடன், தன் சிசுவுடன் பேசவும் ஆரம்பிக்கலாம். குழந்தை வளர்ச்சியின் முதல் புள்ளி அங்கிருந்தே ஆரம்பித்துவிடும்.