பிரீமியம் ஸ்டோரி
2019ல பண்றோம் பின்றோம்!

`2018-ல என்ன செஞ்சீங்க, 2019-ல என்ன செய்றதா இருக்கீங்க’ என, சில பிரபலங்களிடம் சபத அப்டேட்கள் கேட்டோம்...  

2019ல பண்றோம் பின்றோம்!

நித்யா மேனன் 

“எ
தாவது ஒரு பயோ-பிக் படத்துல நடிக்கணும்னு போன வருஷம் ஆசைப்பட்டேன். இந்த வருஷம் அது நிறைவேறியிருக்கு. பொதுவா நான் விடுமுறைக்கு வெளி ஊர்களுக்குப் போகணும்னு விருப்பப்படமாட்டேன். ஏன்னா, எப்போதுமே ஷூட்டிங் ஷூட்டிங்னு அலைஞ்சுட்டி ருக்கிற எனக்கு, வீட்ல கொஞ்சம் நேரம் செலவழிச்சா நல்லா இருக்கும்னு தோணும். அதனால இந்த வருஷம் குடும்பத்தோட அதிக நேரம் செலவழிக்கணும்னு முடிவெடுத்திருக்கேன். வீட்ல என்னை ரொம்ப மிஸ் பண்றாங்க. வீடு முக்கியம் பாஸ்!”

2019ல பண்றோம் பின்றோம்!

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

``வ
ருடம்தோறும் நான் எடுக்கும் உறுதிமொழி, ‘இந்த ஆண்டாவது சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை நிறுத்திவிட வேண்டும்’ என்பதுதான். 2018 ஆம் ஆண்டிலும்கூட இதே உறுதிமொழியை எடுத்துக்கொண்டேன்... முழுதாக சிகரெட் பழக்கத்தை விட முடியவில்லை; எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைத்துவிட்டேன். அந்த வகையில், தமிழக பா.ஜ.க தலைவர் பாணியில் சொல்வ தானால், ‘வெற்றிகரமான தோல்வி’தான். 2019ஆம் வருடத்தில், முற்று முழுதாக ‘சிகரெட் பழக்கத்துக்கு விடை கொடுத்திட வேண்டும் என்று இப்போது உறுதிமொழி எடுத்திருக்கிறேன்.’’

2019ல பண்றோம் பின்றோம்!

தமிழிசை சௌந்தர்ராஜன்

``த
லைவர் பொறுப்பு ஏற்ற பிறகு அதிக அலைச்சல்களால் உடல் எடை அதிகரித்து விட்டது. சுருக்கமாகச் சொன்னால், ‘வெயிட்டான தலைவர்’ ஆகிவிட்டேன். எப்படியாவது எடையைக் குறைத்துவிட வேண்டும் என்று, ரொம்பவும் பிரயத்தனம் செய்தேன். டயட் விஷயத்தில், நான் எடுத்துக்கொள்ளும் முயற்சிகளை வேறு யாரும் எடுத்திருந்தால், இந்நேரத்துக்கு எலும்பும் தோலுமாக ஒல்லியாகியிருப்பார்கள்... 2 019 ஆம் ஆண்டில் உடல் எடையைக் குறைப்பதற்காக தினப்படி தனிக் கவனம் செலுத்தி வருகிறேன்!’’

2019ல பண்றோம் பின்றோம்!

சுப.வீரபாண்டியன்

``எ
ன் பேரன் பேத்திகளும் என்னிடம், ‘இந்த ஆண்டு என்ன உறுதிமொழி எடுக்கப் போகிறீர்கள்!’  என எழுதச் சொன்னார்கள். நான், ‘தொடர்வேன்’ என்ற ஒரே ஒரு சொல் மட்டும்தான் எழுதினேன். சமூகத்தில் சமூகநீதியை நோக்கியும், மாநிலத்தில் சுயாட்சியை நோக்கியும், பொருளாதாரத்தில் சமத்துவத்தை நோக்கியும் இந்த நாடு நகர்ந்திட வேண்டும். அதற்கான பணிகளைத்தான்  நான் அமைப்புடன் இணைந்து செய்துவருகிறேன். அந்தப் பணிகளையே இந்த ஆண்டும் தொடர்வேன். இதுதான் இந்த ஆண்டுக்கான என் உறுதிமொழி.’’

2019ல பண்றோம் பின்றோம்!

டேனியல் 

“போ
ன வருஷத்துல அரசாங்கத்துக்குக் கட்டாயம் வரி கட்டிடணும்னு முடிவெடுத்தேன். அதைச் சரியா கடைப்பிடிச்சேன். இந்த வருஷம் 365 நாள்ல குறைந்தது 250 நாளாவது சைக்கிள் ஓட்டணும்னு முடிவெடுக்கப் போறேன். ‘உடலுக்கு நல்லது; ஆரோக்கியம் கூடும்’னெல்லாம் எதுவும் கிடையாது. பெட்ரோல் விலை அநியாயத்துக்கு ஏறியிருக்கு. பெட்ரோல் பங்குக்கு தினமும் போறப்ப எல்லாம் அங்க வேலை பார்க்கிற அண்ணன் சிரிக்கிறார். இனி பெட்ரோல் போடுற காசுல ஜூஸ் வாங்கிக் குடுச்சுட்டு ஜாலியா சைக்கிள்ல ஊர் சுத்தப்போறேன்!”

2019ல பண்றோம் பின்றோம்!

நாஞ்சில் சம்பத்

‘`2018
என் நித்தியத்தைக் கிழித்துவிட்டது. நான் கனவு கண்ட தலைவன், என் கனவில் கல்லெறிந்துவிட்ட பிறகு ‘பொதுவாழ்வே வேண்டாம்’ என்று ஒதுங்கிவிட்டேன். ‘ஒரு தலைவனின் தலைமையில், ஒரு கொடியின் நிழலில் இனி ஒதுங்குவதில்லை’ என்ற முடிவில் உறுதியாக இருக்கி றேன். 2019-ல் 10 புத்தகங்களை எழுதி வெளியிடுவதாக இருக்கிறேன். அடுத்ததாக, அசைவ உணவுகளை விரும்பிச் சாப்பிடும் நான், உடல் எடையைக் கருத்திற்கொண்டு அதைக் கைவிட்டுவிடலாமா என்ற தீவிர யோசனையிலும் இருக்கிறேன். எனவே, உடல் மெலிந்து ஆரோக்கியத்தைக் கடைப்பிடிக்கும் நோக்கில், நான் அசைவ உணவைத் தவிர்க்க நினைத்தாலும், என்னுடைய இந்த முடிவுக்கு வீட்டிலேயே கடும் எதிர்ப்பு நிலவிவருகிறது!’’

த.கதிரவன், சுஜிதா சென், சக்திதமிழ்ச்செல்வன்  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு