பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே

facebook.com/vignesh.bava.9

ஏசு ஆடு மேய்த்தார், கிருஷ்ணன் மாடு மேய்த்தார்.

கவலைப்படாதீங்க டியூட் நாம் தமிழர் ஆட்சியில் உங்க இரண்டு பேருக்கும் அரசாங்க வேலை உண்டு.

வலைபாயுதே

facebook.com/iniyavan.don

நிழலுக்கு உரிமை கொண்டாட வேண்டியது நீயல்ல, வெளிச்சம்.

facebook.com/tvignesh49

இப்படித்தான் சாய்பல்லவி ப்ரேமம்ல மொரட்டு டான்ஸ் ஆடுச்சு, மண்டைல அடிபட்டு பழசெல்லாம் மறந்துடுச்சு. இப்ப மாரி-2 ல ஒரு மொரட்டு டான்ஸ்
ஆடுச்சு, அடிச்சு வீல் சேர்ல உக்காரவச்சிட்டாய்ங்க.

நீதி: ரொம்ப ஆடக்கூடாது!

facebook.com/gkarlmax

பிஜேபியால் தமிழகத்துக்கு எல்லாவகையிலும் இழப்புதான்.

உதாரணம் தமிழிசை. நல்ல டாக்டர் அவர்!

வலைபாயுதே

twitter.com/Annaiinpillai

டிஜிட்டல் இந்தியான்னு சொல்லிட்டு கடைசில தபால்ல சாதனைகளை அனுப்புறதுதான் ஜி இந்தியாவுக்கு செஞ்ச மிகப்பெரிய சாதனை!

twitter.com/manipmp

மனைவி ஜோக் சொல்லும் போது வராத சிரிப்பு... அவள் அட்வைஸ் செய்யும் போது வந்துவிடுகிறது.

twitter.com/i_Soruba

ஒருவரைப்பற்றி யூகித்து விட்ட இரகசியத்தை உறுதிப்படுத்திக்கொள்ளத் தலைப்படாதது ஆண்களுக்கு மட்டுமே வாய்த்திருக்கும் நாகரிகம்.

வலைபாயுதே

twitter.com/ikrthik

பூமிக்குப் பாரமாக இருக்கிறாய் காதல் செய்து காற்றில் இறகாகு!

twitter.com/shivaas_twitz

போனாப் போகுதேன்னு கடைக்காரர் ஒரு ஓசி காலண்டர் கொடுத்தா, ‘வேற டிசைன் இல்லையா’ன்னு கேக்குறது நம்ம டிசைன்லயே இருக்கு..!

facebook.com/vinayaga.murugan.7


ஒவ்வொரு வருஷமும் நாளையில இருந்து குடிக்கப் போறது இல்லைன்னு டிசம்பர்-31 ஆம் தேதி இரவு புது வருட சபதம் எடுக்கறேன்.

அதில என்ன பிரச்னை?

குடிச்சிட்டிருக்கும்போதே ஜனவரி முதல்தேதி விடிஞ்சுடுது.

(புதுவருடப் பரிதாபங்கள்)

வலைபாயுதே

twitter.com/mrithulaM

மகன்களைப் பெற்ற அம்மாக்களுக்கே தெரியும் அந்த எருமைகளை அடித்தால் எப்படிக் கை வலிக்குமென்று.

twitter.com/raghuji

தமிழுக்கு ஒரு புதிய வார்த்தை கிடைத்தது.

கொலகாண்டு!

twitter.com/MusicaDSan

அடுத்த வாரம் முழுக்க ஜிம் பக்கமே போகப்படாது. These new brooms with new year resolutions அங்கே வந்து மாங்கு மாங்குன்னு workout பண்ணுவாங்க. ஆறுதலா ஒரு வாரம் கழிச்சி போனா நிம்மதியா நம்ப வேலய பாக்கலாம்.

facebook.com/vinayaga.murugan.7

வாழ்க்கையின் கொடுமையான தருணம் எது தெரியுமா? நம்மை நேசிப்பவர்கள் நம்மீது வைத்திருக்கும் அன்பு நடிப்பு என்று தெரிய வரும் தருணம். வாழ்க்கையின் துயரம் எது தெரியுமா? என்றாவது ஒருநாள் எங்காவது உண்மையான அன்பைக் கண்டுபிடித்துவிடலாம் என்று முட்டாள் தனமாகக் காலம் முழுக்கத் தேடிக்கொண்டிருப்பதுதான்.

facebook.com/kasi.vishwanath.520

இழப்பதற்கு ஒன்றுமில்லை என்பதில் எனக்குத் துளியும் வருத்தமில்லை , தருவதற்கு எதுவுமில்லை என்பதில்தான் வேதனை!

twitter.com/puthagappuzhu

‘உங்க மேல கொலகாண்டு வரணும் சார்’, ‘நான் ஏறி மிதிச்சா நீங்க ஏரியா வாங்க முடியாது’, ‘ஒத்தைக்கு ஒத்த வாடா’ என டிசைன் டிசைனாக ரஜினியையும் சன் குழுமத்தையும் வம்பிழுத்தே ட்ரெய்லர் கட் பண்ணியிருக்கிறார் சிறுத்தையார். எங்க தலைக்கு எவ்ளோ தில்லு பாத்தியா மொமன்ட்!

facebook.com/senthilkpm

ஏதோ ஒன்று கிடைத்து விடாதா என இங்குமங்கும் அலைகிறது இந்த இரவு, தானே ஒரு பெரும் புதையல் என்பதை உணராது.!

வலைபாயுதே

twitter.com/Annaiinpillai

‘குடும்பம்’ என்ற திரைப்படத்தில் ‘குணச்சித்திர’ வேடத்தை ஏற்று வாழ்கிறார் ‘அப்பா’!

twitter.com/meenammakayal_

பரணை சுத்தஞ்செய்யும் போது பல்லிய பார்த்துப் பதறி, கத்தி, கீழ விழுந்து கால்ல சிராய்ச்சி கைல இடிச்சி... அந்தப் பல்லி கடிச்சிருந்தாகூட இவ்ளோ சேதாரம் ஆகியிருக்காது...

twitter.com/Nandhinimagesh

அம்மா: எப்ப கல்யாணம் பண்ணுவ?

நான்: புடுச்சேரிக்கு வண்க்கம்

twitter.com/Itisraj1990

வாழ்ந்தா கமல் ரசிகன் மாதிரி வாழணும், ஓப்பனிங், பாக்ஸ் ஆபீஸ்னு எந்த சண்டை சச்சரவும் கிடையாது, படம் வந்து போறதே பலருக்குத் தெரியாது, நிம்மதியான வாழ்க்கை கமல் ஃபேன்ஸுக்கு...

facebook.com/Aravind44

`மாரி 2’ பார்க்கும்போது ஒரு டவுட் வந்துச்சு. தனுஷ், “நமக்கு சிங்கக் குட்டிதான் பொறக்கும்”னு சொல்லுவார். அதுக்கு அந்தம்மா , “அப்ப பொம்பள புள்ள பொறந்தா என்ன பண்ணுவ?”னு கேப்பார். ஏன் சிங்கத்துக்குப் பொம்பள சிங்கக்குட்டி பொறக்காதா?

சைபர் ஸ்பைடர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு