Published:Updated:

உண்மைகளின் கலைஞன்!

உண்மைகளின் கலைஞன்!
பிரீமியம் ஸ்டோரி
உண்மைகளின் கலைஞன்!

அருண்.மோ

உண்மைகளின் கலைஞன்!

அருண்.மோ

Published:Updated:
உண்மைகளின் கலைஞன்!
பிரீமியம் ஸ்டோரி
உண்மைகளின் கலைஞன்!

ஆயுதம் செய்வோம்... தமிழில் `ஆப்’கள் செய்வோம்

“ஐ
யாம் மிருணாள் சென், ஃபிலிம் மேக்கர், ஐ மேக் ஃப்ளாப்ஸ்!”

மிருணாள் சென் எங்கு சென்றாலும் தன்னை இப்படித்தான் அறிமுகப்ப டுத்திக்கொள்வார்.மிருணாள் சென்னின் வலிமிகுந்த இந்த வரிகள் சமூகத்தில் பூத்துப்போய்க் கிடக்கும் புறக்கணிப்பின் வெளிப்பாடு. எத்தனை புறக்கணிப்பும் அவமானமும் நிகழ்ந்தபோதும் மிருணாள் சென் ஒருபோதும் இந்தச் சமூகத்தின் மீது புகார் சொன்னது கிடையாது. மாறாக, கலையை விதைத்தார். 

உண்மைகளின் கலைஞன்!

மிருணாள் சென் எனும் மகா கலைஞன் அமரர் ஆனார் என்கிற செய்தி அச்சப்படுவதற்கன்று. இது நாம் மகிழ்ச்சி கொள்ள வேண்டிய தருணம். காரணம், இந்தியா போன்ற நாடுகளில் ஒரு கலைஞன் மரித்தபின்னர்தான் அடையாளம் காணப்படு கிறார். கொண்டாடப்பட வேண்டியவர் என்கிற தெளிவே அப்போதுதான் இந்தியச் சமூகத்திற்குப் பிறக்கிறது. மிருணாள் சென் இனிதான் இந்தியச் சமூகத்தில் வாழப்போகிறார். அவருடைய படைப்புகள் இனிதான் இந்தச் சமூகத்தை இன்னும் அதிகமாகத் தொந்தரவு செய்யப்போகின்றன.

உண்மைகளின் கலைஞன்!இந்திய சினிமா, மும்பை, சென்னை போன்ற வணிக நகரங்களில் தோன்றினாலும் அது உயிர்பெற்றுக் கலையானது என்னவோ வங்க மண்ணில்தான். மேற்கு வங்கமும், கேரளாவும்தாம் இந்திய சினிமாவை அரசியல்மயப்படுத்தின. அத்தகைய பெருமைக்குரிய மண்ணில் தோன்றிய மகா கலைஞன் மிருணாள் சென் சினிமாவை அரசியல் மயப்படுத்தினார்.

வாழ்நாள் முழுக்க அரசியலையும், கலையையும் ஒருங்கிணைக்கும் பெருஞ்சக்தியாக விளங்கிய சென் மீதும், இந்திய சினிமாவின் முகமாக அறியப்பட்ட சத்யஜித் ரே மீதும், இந்தியாவின் வறுமையைப் படமாக்கிக் காசு பார்க்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு எழுந்தது. அதற்குப் பதிலளித்த மிருணாள் சென், ``இந்தியாவின் வறுமை என்ன விற்பனைப் பண்டமா? நாங்கள் செய்வது வறுமையைக் காசாக்கும் செயல் அல்ல, மாறாக, அது இல்லாமல் போக மேற்கொள்ளும் முயற்சி. இது கொண்டாட்டத்தின் பதிவு அல்ல, உண்மையின் பிரதிவாதம். 

உண்மைகளின் கலைஞன்!

எப்போது உண்மை சர்ச்சைக்குள்ளாகிறதோ அப்போதே அதன் தரத்தை எட்டிவிட்டது என்றுதான் பொருள், எங்கள் படங்களும் உண்மையைப் பேசுகின்றன, அதனாலேயே அவை சர்ச்சைக்குள்ளாகின்றன.  ஏன் எல்லாப்படங்களிலும் அரசியல் பேச வேண்டும் என்கிறார்கள், கலை உண்மையானது என்றால் அது சமூகத்தைப் பின்பற்றும், என்னுடைய கலை உண்மையானது, அது அரசியலோடுதான் இயங்கும்’’ என்றார்.

``நிறைய பணம் கொடுத்தால் எனக்குப் படம் எடுக்க வராது” என்பார் சென். இந்திய அரசின் சொற்ப நிதி உதவியோடு தயாரிக்கப்பட்ட இவரது `புவன் ஷோம்’ திரைப்படம்தான் இந்தியாவின் புதிய அலை சினிமாவிற்கு வித்திட்டது. இந்தியாவின் ஆகச்சிறந்த படங்கள் அனைத்தும் மிகக் குறைந்த பொருட்செலவிலேயே எடுக்கப்பட்டவை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இப்படி குறைந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட படங்களுக்கு ஆதரவாக எப்போதும் குரல் எழுப்பவே சென் விரும்பினார்.

தமிழில் வெளியான சிறந்த படங்களில் ஒன்றாக விமர்சகர்களால் கருதப்படும் `அவள் அப்படித்தான்’ திரைப்படம் வெளியானவுடன் யாராலும் கண்டுகொள்ளப்படவில்லை. அப்போது சென்னைக்கு வந்திருந்த மிருணாள் சென் படத்தைப் பார்த்துவிட்டு, படத்தின் முக்கியத்துவம் குறித்துப் பேசினார். அது பத்திரிகைச் செய்தியானது. அடுத்த சில நாள்களில் `அவள் அப்படித்தான்’ பரவலாகப் பேசப்பட்டு, பெரும்பான்மை மக்களை அடைந்து வெற்றிப்படமாக அமைந்தது. மிருணாள் சென் இல்லை என்றால், `அவள் அப்படித்தான்’ திரைப்படம் நமக்குக் கிடைக்காமல்கூட போயிருக்க வாய்ப்புண்டு. 

அன்பின் மிருணாள் சென், தோற்றுப்போனது உங்கள் படங்கள் அல்ல, இந்தச் சமூகம்தான். உண்மையான கலைக்கு வெற்றி தோல்வி என்று ஏதாவது உண்டா? உங்களுக்கு இதெல்லாம் தெரியாதா என்ன? கலைக்கும், உங்கள் ஆன்மாவிற்கும் என்றுமே அழிவு கிடையாது!