பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

அமெரிக்க மீனாட்சி!

அமெரிக்க மீனாட்சி!
பிரீமியம் ஸ்டோரி
News
அமெரிக்க மீனாட்சி!

அமெரிக்க மீனாட்சி!

``அமெரிக்கா என்றாலே நமக்கு ஒத்துவராத கலாசாரம் கொண்டவர்கள் என்ற எண்ணம், நம் நாட்டவரிடம் உள்ளது. அங்கேயும் நம்மைப் போலவே குடும்பம், உறவுகள் என அன்பு பாசத்துடன் வாழும் மக்கள் அதிகமாக இருக்கிறார்கள். மார்கரேட்டிடம் பேசும் போதுதான், அதைப் புரிந்துகொண்டேன்!’’ 

அமெரிக்க மீனாட்சி!

தங்களது 16வது திருமண நாளை, உறவும் நட்பும், கட்சியின் உடன் பிறப்புகளும் சூழ, கேக் வெட்டிக் கொண்டாடியபடி, தனது காதல் மனைவியைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார் பி.டி.பழனிவேல் தியாகராஜன். தி.மு.க., தகவல் தொழில் நுட்பப் பிரிவின் செயலாளரும், மதுரை மத்தியத் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பி.டி.பழனிவேல் தியாகராஜன்தான், அந்தக் காதல் கணவர். நீதிக்கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான பி.டி.ராஜனின் பேரன், முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜனின் மகன் எனப் பெருமை மிகு பாரம்பர்யத்துக்குச் சொந்தக்காரர்.

இவரின் மனைவி, மார்கரேட், ஓர் அமெரிக்கப்பெண். இப்போது அவரது பெயர் மார்கரேட் மீனாட்சி.

“டாக்டரேட் பண்ணுவதற்காக, நியூயார்க் பல்கலைக்கழகத்துக்குச் சென்றபோதுதான் மார்கரேட்டைச் சந்தித்தேன். நியூயார்க்கிலிருந்து 100 கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் கிராமத்தைச் சேர்ந்தவர். முதல்முறையாக ஊரை விட்டு வந்து நியூயார்க் பல்கலையில் தங்கிப் பயின்று கொண்டிருந்தவருடன், தொடர்ந்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையை விரும்பும் பெற்றோருக்கு இவர் ஆறாவது மகள்.  நாங்கள் தொடர்ந்து பல்வேறு விஷயங்களைப் பேசிப் பழகி வந்தாலும், காதலை இருவருமே வெளிப்படுத்திக்கொள்ளவில்லை. திருமணம் செய்துகொள்ளலாம் என்று முடிவெடுத்து, நான்தான் முதலில் எனது காதலைத் தெரிவித்தேன். அப்போதுதான் தெரிந்தது, அவரும் அதே எண்ணத்தில் இருந்தார் என்பது. 

அமெரிக்க மீனாட்சி!மார்கரேட்டைத் திருமணம் செய்ய விருப்பம் என்று என் குடும்பத்தினரிடம் தெரிவித்தேன். எந்தப் பதிலும் வரவில்லை. நானும் கட்டாயப்படுத்தவில்லை. விடுமுறைக்காலங்களில், அமெரிக்காவிலிருந்து என் நண்பர்களை மதுரைக்கு அழைத்து வருவதை வழக்கமாக வைத்திருந்தேன். அதுபோல மார்கரேட்டையும்  ஊருக்கு அழைத்து வருவேன். அவருடைய பேச்சும் குணமும் செயல்பாடும், என் அம்மா அப்பா மற்றும் உறவினர்களுக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. என் பெற்றோரே  எப்போது திருமணம் வைத்துக்கொள்ளலாம் என்று என்னிடம் அவசரப்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். ஐந்து வருடக் காதலுக்குப் பின் 2003-ம் ஆண்டு எங்கள் திருமணம் நடந்தது. பிப்ரவரி 6-ம் தேதி, மதுரையிலும், மே மாதத்தில் அமெரிக்காவிலும் திருமணம் நடந்தது’’ என்று விவரித்தார் பழனிவேல் தியாகராஜன்.

“திருமணத்துக்குப் பின், அமெரிக்காவில் வாழ்ந்தோம். இருவரும் வேலைக்குச் சென்றோம். அவர் பெரிய நிறுவனத்தில் அதிகாரியாக இருந்ததால் பல நாடுகளுக்குச் சுற்றிக் கொண்டிருப்பார். நான் டிசைனர் கன்சல்டன்ட் ஆக இருந்து வருவாய் ஈட்டினேன். அதன்பிறகு குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்தபோது வேலையை விட்டேன். அது மட்டுமல்ல, அவருக்கு அதிகமான சம்பளம் என்பதால், என் வருவாயிலும் அதிகமான வரி கட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டதால், அதற்கு நான் வேலையே பார்க்காமல் இருப்பது சரியாகப் பட்டது. அதன்பிறகு,  ‘லேமன் பிரதர்ஸ்’ நிறுவனத்திலிருந்து விலகி, வேறொரு பெரிய நிறுவனத்தில் சேர்ந்தார். அவர் தந்தை மறைவுக்குப்பின், இந்தியாவில் செட்டிலாக மும்பையில் குடியேறினோம். அதே நேரம் மற்றொரு பெரிய வங்கியின் ஆசியன் பசிபிக் தலைவரானார். சிங்கப்பூரில் அவர் தங்கியிருக்க வேண்டிய நிலை உருவானது. பிறகு சென்னையில் குடியேறினோம். பத்து வருடம் ஓடிவிட்டது. விமானப் பயணத்திலேயே சென்று கொண்டிருந்த எங்கள் வாழ்க்கை, அவர் பொது வாழ்க்கைக்கு வந்த பின், இப்போது தரை வழியாகப் பயணித்துக்கொண்டிருக்கிறது’’ என்கிறார் மார்கரெட்.

பயணம் தொடரட்டும்!

செ.சல்மான் - படம்: வி.சதீஷ்குமார்