கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் 24-ம் தேதி டாடா சன்ஸ் தலைவர் பொறுப்பிலிருந்து சைரஸ் மிஸ்திரி அதிரடியாக நீக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து சில மாதங்களுக்கு டாடா குழுமத்துக்குத் தலைவர் என்று ஒருவர் இல்லாமலே அந்த நிறுவனம் செயல்பட்டு வந்தது.

புதிய தலைவர், புதிய சிக்கல்கள்...

பிறகு 2017-ம் ஆண்டு ஜனவரியில் என்.சந்திரசேகரன் தலைவராக நியமனம் செய்யப்பட்டார். இந்த இரண்டு ஆண்டுகளில் டாடா குழுமத்தில் உள்ள பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மதிப்பு சுமார் 20% அளவுக்கு உயர்ந்திருக்கிறது. ஆனால், அதே சமயம், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடும் சிக்கலில் இருக்கிறது. கடந்த சில காலாண்டுகளாக நஷ்டம், சந்தை மதிப்புச் சரிவு எனப் பல சிக்கலில் டாடா மோட்டார்ஸ் இருக்கிறது.

மூன்று ‘எஸ்’...

ஏறக்குறைய 10,400 கோடி டாலர் மதிப்புடைய இந்தக் குழுமத்தில் சுமார் 110 நிறுவனங்கள், 1,000 துணை நிறுவனங்கள் உள்ளன. இதில் டாடா ஸ்டீல் வசம் மட்டுமே 300 துணை நிறுவனங்கள் உள்ளன.

டாடா குழுமத்தில் பொறுப்பேற்றவுடன் அவரின் முதல் நடவடிக்கை, குழுமத்தை அமைப்பு ரீதியாக எளிமையாக மாற்ற வேண்டும் என்பதுதான். பல நிறுவனங்கள், பல தலைவர்கள், பல இயக்குநர்கள் எனக் குழுமத்தின் வேர்பறந்து விரிந்திருக்கும்போது அவற்றைச் சிறப்பாகக் கையாள முடியாது. அதனால் 3 ‘எஸ்’ (simplification, synergy and scale) என்னும் உத்தியை அவர் கொண்டுவந்தார்.

முதல்படி...

முதலில், டாடா குழுமத்தை எளிமையாக்க வேண்டும்; குழும நிறுவனங்களிடைய ஒருங்கிணைப்பை உருவாக்க வேண்டும்; அதனைத் தொடர்ந்து குழுமத்தை வளர்ச்சியை நோக்கிக் கொண்டுசெல்ல வேண்டும் என்னும் உத்தியை சந்திரசேகரன் வகுத்தார்.

இப்போது முதல்படியை எடுத்து வைத்திருக்கிறார். டாடா குழுமத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களையும் பத்து பிரிவுக்குள் கொண்டுவர முடிவெடுத்திருக் கிறார் அவர். ஐ.டி, ஸ்டீல், ஆட்டோமொபைல், கன்ஸ்யூமர் அண்டு ரீடெய்ல், கட்டுமானம், நிதி சேவைகள், ஏரோஸ்பேஸ் அண்டு டிபென்ஸ், சுற்றுலா, டெலிகாம் அண்டு மீடியா மற்றும் முதலீடுகள் எனப் பத்து பிரிவுகளை உருவாக்கி, அவற்றின் கீழ் டாடா குழுமத்தின் அனைத்து நிறுவனங்களும் செயல்படும் எனத் தெரிகிறது.

பத்துப் பிரிவுகளாக டாடா நிறுவனங்கள்

1. தகவல் தொழில்நுட்பம்: டி.சி.எஸ், டாடா எலெக்ஸி,

2. ஆட்டோ: டாடா மோட்டார்ஸ், ஜாகுவார் லேண்ட் ரோவர், டாடா ஆட்டோகாம் சிஸ்டம்ஸ்,

3. கன்ஸ்யூமர் மற்றும் ரீடெய்ல்: டாடா கெமிக்கல்ஸ், டாடா குளோபல் பீவரேஜஸ், வோல்டாஸ், டைட்டன் ட்ரென்ட்

4. கட்டுமானம்: டாடா பவர், டாடா புராஜெக்ட்ஸ், டாடா ஹவுஸிங், டாடா ரியல்டி

5. நிதிச் சேவை: டாடா கேப்பிட்டல், டாடா ஏ.ஐ.ஏ லைஃப், டாடா மியூச்சுவல் ஃபண்ட், டாடா ஏ.ஐ.ஜி

6.ஏரோஸ்பேஸ்: டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ்

7.சுற்றுலா: இந்தியன் ஹோட்டல், ஏர் ஏசியா இந்தியா, விஸ்தாரா

8.டெலிகாம் மற்றும் மீடியா: டாடா கம்யூனிகேஷன்ஸ், டாடா ஸ்கை, டாடா டெலி சர்வீசஸ்

9. டிரேடிங் அண்டு இன்வெஸ்ட்மென்ட்ஸ் : டாடா இன்டர்நேஷனல், டாடா இண்டஸ்ட்ரீஸ், டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்

10. ஸ்டீல் : டாடா ஸ்டீல்

தனித்தன்மையுடன் செயல்படும்

டாடா குழும நிறுவனங்கள் இப்படிப் பத்துப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டாலும், ஒவ்வொரு நிறுவனமும் தனித்தன்மையுடன் செயல்படும். ஆனால், ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு தலைவர் நியமனம் செய்யப்படுவார். அந்தத் தலைவர் அந்தக் குழுமத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களையும் நிர்வகிப்பார் எனத் தெரிகிறது. இதற்கான வேலைகளை டாடா குழுமத்தின் நிர்வாகம் செய்யத் தொடங்கிவிட்டன. இந்த வேலைகள் ஓரிரு ஆண்டுகளில் முடிவடையும் எனத் தெரிகிறது.

டாடா சன்ஸ் முதலீடு

இந்தப் பணிகள் தொடங்கும்முன், சில ஆரம்பக்கட்ட பணிகளை டாடா சன்ஸ் செய்தது. இந்த நிறுவனத்தின் மூலம் டாடா குழுமத்தின் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டு இருக்கும்.

உதாரணத்துக்கு, டாடா குளோபல் பீவரேஜ்ஸ் நிறுவனமானது டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறது. அதேபோல, டாடா கெமிக்கல் நிறுவனம் டாடா குளோபல் பீவரேஜஸ் நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறது. இதுபோல, குழும நிறுவனங்கள் செய்துள்ள முதலீட்டை டாடா சன்ஸ் வாங்கியிருக்கிறது. இந்த முதலீடு மட்டுமே ரூ.70,000 கோடியைத் தாண்டும்.

ரத்தன் டாடா தலைவராக இருந்த சமயத்தில், 250-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இருந்திருக்கின்றன. இவற்றை இணைப்புகளின் மூலமாக 100 நிறுவனங்களாக ரத்தன் டாடா குறைத்திருக்கிறார். அதன் தொடர்ச்சியாக தற்போது 10 பிரிவுகள் உருவாக்கப் படுகின்றன.

சவால் என்ன?

டாடா குழும நிறுவனங்கள் அனைத்தையும் பத்துப் பிரிவுகளாகப் பிரிப்பதில் எந்தப் பெரிய சவாலும் இல்லை. ஆனால், கன்ஸ்யூமர் மற்றும் ரீடெய்ல் பிரிவில் சிக்கல் இருப்பதாகச் சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். காரணம், இந்த பிரிவில் டாடா கெமிக்கல்ஸ், டாடா குளோபல் பீவரேஜஸ், டைட்டன், வோல்டாஸ், க்ரோமா, வெஸ்ட் ஸைட் என்னும் பல நிறுவனங்கள் உள்ளன. பலதரப்பட்ட நிறுவனங்கள் இருப்பதால், இவற்றை ஒருங்கிணைப்பதில் சவால் இருக்கக்கூடும் எனத் தெரிகிறது.

இருந்தாலும், டாடா குழுமத்தில் செய்யப்படும் இந்த மாற்றம் நீண்ட கால அடிப்படையில் நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும் என மியூச்சுவல் ஃபண்ட் மேலாளர்களாலும், ஆலோசனை நிறுவனங்களாலும் கருத்துத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

தாமதம் ஏன்?

டாடா குழுமத்தின் தலைவராக சந்திரசேகரன் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த பிறகு, தற்போதுதான் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது எனச் சிலர் விமர்சனம் செய்கிறார்கள். இத்தகைய விமர்சனம் நியாயமானதல்ல.

டாடா என்பது பல நூறு பெரிய நிறுவனங் களைக் கொண்ட பிரமாண்ட குழும நிறுவனம். இந்த நிறுவனங்கள் எப்படிச் செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ளவே பல ஆண்டு காலம் செலவிட வேண்டியிருக்கும். ஆனால், சந்திரசேகரன் பல ஆண்டு காலமாக டாடா குழுமத்திலேயே இருப்பதால், தலைமைப் பொறுப்புக்கு வந்த இரண்டு ஆண்டுகளில் பெரும் மாற்றங்களைக் கொண்டுவர முடிந்திருக்கிறது.

சந்திரசேகரனைப் பொறுத்தவரை, சிக்கலான டாடா குழுமத்தை எளிமையாக்குவது (simplification) என்கிற முதல் ‘எஸ்’-யை டிக் செய்து விட்டார். அடுத்ததாக, இன்னும் இரண்டு ‘எஸ்’களை அவர் டிக் செய்ய வேண்டிய நிலை உள்ளது.

அவர் எடுக்கும் நடவடிக்கைகள் டாடா குழுமத்துக்கு நன்மை செய்வதாகவும், வளர்ச்சியை நோக்கி நகர்த்திச் செல்வதாகவும் இருக்கும் என்று எதிர்பார்ப்போம்!

இரண்டாம் இடத்தில் டைட்டன்!

டாடா குழுமத்தில் பெரிய நிறுவனம் எது என்று கேட்டால், டி.சி.எஸ் என்பது அனைவருக்கும் தெரியும். காரணம், டி.சி.எஸ் நிறுவனம்தான் இந்தியாவிலேயே சந்தை மதிப்பில் முதல் இடத்தில் உள்ள நிறுவனம் ஆகும். (ரிலையன்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு அதிகரிக்கும்போது மட்டும் டி.சி.எஸ் இரண்டாம் இடத்துக்குச் செல்லும்)

ஆனால், டாடா குழும நிறுவனங்களில் இரண்டாம் இடத்தில் இருக்கும் நிறுவனம் என்கிற பெருமை பெற்றிருப்பது டைட்டன் நிறுவனம்தான். இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு கடந்த மார்ச் 7-ம் தேதி நிலவரப்படி, ரூ.93,300 கோடி.

டைட்டன் நிறுவனம் தொடங்கப்பட்டு ஏறக்குறைய 34 ஆண்டுகள் முடிந்துவிட்டன. இந்த 34-ம் ஆண்டுகளில் தேசாய் மற்றும் பாஸ்கர் பட் ஆகிய இருவர் மட்டுமே இந்த நிறுவனத்தின் தலைவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம். ஆரம்பத்தில் வாட்ச்சுகளை மட்டும் தயாரிக்கத் தொடங்கிய இந்த நிறுவனம் இன்றைக்கு தங்க நகை, கண்ணாடி, விலை உயர்ந்த ஆடைகள், வாசனைத் திரவியங்கள் எனப் பலவற்றையும் விற்பனை செய்யும் நிறுவனமாக முன்னேற்றம் கண்டிருக்கிறது.

இந்த நிறுவனத்தின் வருமானம் கடந்த மூன்றாம் காலாண்டில் 29% அதிகரித்திருக்கிறது. வாட்ச்சுகள் விற்பனை மூலமான வருமானம் 12% உயர்ந்திருக்கிறது. தங்க நகை விற்பனை செய்யும் பிற நிறுவனங்கள் 10-15% வருமானம் மட்டுமே கண்டிருக்கும்பட்சத்தில், டைட்டன் நிறுவனம் இவ்வளவு பெரிய வளர்ச்சி கண்டிருப்பது ஆச்சர்யப்படத்தக்க விஷயமே.

இந்த நிறுவனத்தின் பங்கு விலையும் கடந்த பத்து ஆண்டுகளில் மிகப் பெரிய அளவில் வளர்ந்திருக்கிறது. மார்ச் 7-ம் தேதி நிலவரப்படி, இந்தப் பங்கு கடந்த ஓராண்டு காலத்தில் 28.36 சதவிகிதமும், மூன்று ஆண்டுகளில் 208.48 சதவிகிதமும், 10 ஆண்டுகளில் 2768.27 சதவிகிதமும் லாபம் தந்திருக்கிறது. இத்தனை பெரிய லாபத்தை மிகச் சில பங்குகளே தந்துள்ளன. டைட்டன் பங்கினை பத்து ஆண்டுகளுக்குமுன் வாங்கியவர்கள், இன்று பெரும்பணக்காரர்களாக இருப்பது நிச்சயம்!