Published:Updated:

ஃபிளிப்கார்ட்டுக்குப் பிறகு... அடுத்த ரவுண்டுக்குத் தயாராகும் சச்சின் & பின்னி!

ஃபிளிப்கார்ட்டுக்குப் பிறகு... அடுத்த ரவுண்டுக்குத் தயாராகும் சச்சின் & பின்னி!
பிரீமியம் ஸ்டோரி
News
ஃபிளிப்கார்ட்டுக்குப் பிறகு... அடுத்த ரவுண்டுக்குத் தயாராகும் சச்சின் & பின்னி!

வாசு கார்த்தி

ச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சால் ஆகிய இருவரையும் இந்திய ஸ்டார்ட்அப் உலகின் பிதாமகன் என்றே சொல்லலாம். இந்த இருவரும் தொடங்கிய ஃபிளிப்கார்ட் நிறுவனத்தில், இன்று அவர்கள் இல்லை.  என்றாலும், ஃபிளிப்கார்ட் போன்று பெரிய அளவில் வெற்றியைத் தரும் அடுத்த ஒரு நிறுவனத்தைத் தொடங்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள்.    

ஃபிளிப்கார்ட்டுக்குப் பிறகு... அடுத்த ரவுண்டுக்குத் தயாராகும் சச்சின் & பின்னி!

ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் 77 சதவிகிதப் பங்குகளை வால்மார்ட் வாங்கியது.  அப்போது சச்சின் பன்சால் தன்வசமிருந்த 5% பங்குகளை நல்ல விலைக்கு விற்றுவிட்டு, அந்த நிறுவனத்திலிருந்து வெளியேறினார். ஆனால் பின்னி பன்சாலோ, ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் தலைவராகத் தொடர்ந்து இருந்து வந்தார். கடந்த நவம்பரில் ஃபிளிப்கார்ட் நிறுவனத்திலிருந்து தனிப்பட்ட சில காரணங்களால், அவர் வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது. 

ஃப்ளிப்கார்ட் நிறுவனத்திலிருந்து இவர்கள் விலகினாலும், ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்குவதுடன் முதலீட்டையும் செய்துவருகிறார்கள். முதலில், பின்னி பன்சாலின் ஸ்டார்ட் அப் நடவடிக்கை களைப் பார்ப்போம்.

சிங்கப்பூரில் பின்னி..?


ஃபிளிப்கார்ட் நிறுவனத்திலிருந்து வெளியேறி யவுடன் `xto10x டெக்னாலஜீஸ்’ என்னும் நிறுவனத்தைத் தொடங்கினார் பின்னி. இ-கார்ட் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்த சாய்கிரண் கிருஷ்ணமூர்த்தியுடன் இணைந்து இந்த நிறுவனத்தை இவர் தொடங்கினார்.  மெக்கென்ஸி நிறுவனத்தில் 15 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றியவர் சாய்கிரண். சமீபத்தில் கியூர்பிட் நிறுவனத்தின் நீரஜ் அகர்வாலும் இந்த நிறுவனத்தில் இணைந்திருக்கிறார். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஃபிளிப்கார்ட்டுக்குப் பிறகு... அடுத்த ரவுண்டுக்குத் தயாராகும் சச்சின் & பின்னி!

xto10x டெக்னாலஜீஸ் நிறுவனம் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்குத் தேவையான தொழில் நுட்பம், முதலீடு, மனிதவளம் உள்ளிட்ட பிரிவுகளில் ஆலோசனை அளிக்கும் பணியைச் செய்துவருகிறது. அடுத்த சில ஆண்டுகளில் குறைந்தபட்சம் 10,000 ஸ்டார்ட்அப் நிறுவனங் களுக்கு ஆலோசனை செய்ய வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்திருப்பதாக பின்னி பன்சால் சொல்லியிருக்கிறார்.

இந்த நிலையில், பின்னி பன்சால்  தன்னுடைய அலுவலகத்தை சிங்கப்பூருக்கு மாற்றி, அங்கிருந்தபடி செயல்படுவதாகச் சொல்லப்படு கிறது. ஃபிளிப்கார்டிலிருந்து வெளியேறியபிறகு, அவர் அடிக்கடி பொதுவெளியில் தென்படுவ தில்லை. மீடியாக்களின் வெளிச்சத்திலிருந்து தப்பித்து, தனது அடுத்த தொழில் முயற்சியில் முழுக் கவனம் செலுத்தி வருகிறார். சிங்கப்பூரில் இருப்பதன் மூலம் தொழில்நுட்ப உலகில் நடக்கும் மாற்றங்களை அவரால் உடனடியாகத் தெரிந்துகொள்ள முடிகிறது. சர்வதேச அளவில் செயல்படும் பல நிறுவனங்கள் சிங்கப்பூரில் இருப்பதால், பல்வேறு விஷயங்களை அவரால் உடனுக்குடன் தெரிந்துகொண்டு செயல்படவும் அவரால் முடிகிறது. எனினும், தேவைப்படும்போது மும்பைக்கோ, டெல்லிக்கோ அடிக்கடி வந்துவிட்டுப் போகிறார். 

குறைந்த வரி விகிதம், தொழில்முனைவுக்கேற்ற சூழல் ஆகிய காரணங்களால் சிங்கப்பூரில் அதிக ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பதிவு செய்யப் படுகின்றன. ஃபிளிப்கார்ட் நிறுவனம்கூட சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்டதுதான். ஃபிளிப் கார்டினைத் தொடர்ந்து பிராக்டோ, குரோபர்ஸ் உள்ளிட்ட இந்தியாவில் செயல்படும் நிறுவனங்கள் பலவும் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்டவைதான். அதனால் இந்தியாவில் இருப்பதைவிட சிங்கப்பூரில் இருந்தால், புதிய ஸ்டார்ட்அப் நிறுவனங்களை எளிதாக அடையாளம் காண முடியும் என்று பின்னி பன்சால் நினைக்கிறார். அதுமட்டுமல்ல, பல்வேறு ஸ்டார்ட்அப் நிறுவனங் களில் முதலீடுகளையும்  செய்தி ருக்கிறார். இவரது நிதி ஆலோசகர் சைலேஷ் துல்சியான் தொடங்கிய ‘021 (zero to one)’ என்னும் வென்சர் ஃபண்டில் முதலீடு செய்திருக்கிறார். இந்த ஃபண்ட் பல ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறது. சமீபத்தில் அக்கோ (Acko General Insurance) நிறுவனத்திலும் பின்னி பன்சால் முதலீடு செய்திருக்கிறார்.

ஃபிளிப்கார்ட்டுக்குப் பிறகு... அடுத்த ரவுண்டுக்குத் தயாராகும் சச்சின் & பின்னி!



கிரன்ச்பேஸ் (Crunchbase) நிறுவனத்தின் தகவல்படி, அக்கோ, ஸ்டெல்லாப்ஸ், கியூர்பிட், அவில் ஃபைனான்ஸ் உள்ளிட்ட 29 நிறுவனங்களில் பின்னி பன்சால் முதலீடு செய்திருக்கிறார்.

ஓலாவில் சச்சின் பன்சால்

ஃபிளிப்கார்ட்டின் மற்றொரு நிறுவனரான சச்சின் பன்சாலும் பல நிறுவனங்களில் முதலீடு களைச் செய்துவருகிறார். சமீபத்தில், ஓலா நிறுவனத்தில் ரூ.650 கோடி முதலீடு செய்திருக் கிறார். சமீப காலத்தில் தனிநபர் ஒருவர் ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் செய்துள்ள மிகப் பெரிய முதலீடு இது. இந்தத் தொகை அவருடைய தனிப்பட்ட சொத்தில் சுமார் 10% ஆகும். இது தவிர, சுமார் 18 நிறுவனங்களில் சச்சின் முதலீடு செய்திருக்கிறார். கிரே ஆரஞ்ச், இன்ஷார்ட்ஸ், எதெர் எனர்ஜி மற்றும் அன்அகாடமி (Unacademy) உள்ளிட்ட  நிறுவனங்களில் சச்சின் பன்சால் முதலீடு செய்திருக்கிறார்.

வென்ச்சர் கடன்


பங்கு முதலீடுகள் மட்டுமல்லாமல், சில பெரிய நிறுவனங்களுக்குக் கடனும் கொடுத்திருக்கிறார் சச்சின். பி.ஏ.சி ஆக்யூசிஷன்ஸ் (BAC Acquisitions)என்னும் நிறுவனம் மூலமாக அல்டிகோ கேப்பிடல் மற்றும் இண்டோ ஸ்டார் கேப்பிடல் ஆகிய இரு நிறுவனங்களுக்கு தலா ரூ.250 கோடி வென்ச்சர் கடன் வழங்கி இருப்பதாகத் தெரிகிறது. பிஏசி நிறுவனத்தை அங்கித் அகர்வாலுடன் இணைந்து தொடங்கியிருக்கிறார். இதுதவிர, பல ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்வதற்காக பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறார்.

வங்கி தொடங்கத் திட்டம்


நிதிச் சேவை தொடர்பான பிரிவிலும் களம் இறங்க சச்சின் பன்சால் திட்டமிட்டு வருகிறா ராம். குறிப்பாக, வங்கி தொடங்கு வது குறித்த ஆலோசனையிலும் சச்சின் பன்சால் இருப்பதாகத் தெரிகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு, வங்கித் துறை விதிமுறைகளை ரிசர்வ் வங்கி எளிதாக்கியது. இதனைத் தொடர்ந்து சிறிய வங்கிகள், பேமென்ட் வங்கிகள் உள்ளிட்டவை உருவாகின. வங்கி ஒன்றை முழுமையான அளவில் தொடங்கக் குறைந்தபட்சம் ரூ.500 கோடி பங்கு மூலதனம் தேவை. தவிர, ஒரு நிறுவனத்தை பத்தாண்டுகள் நடத்திய அனுபவமும் இருக்க வேண்டும். இது தொடர்பாக வங்கியாளர்கள், ரிசர்வ் வங்கி அதிகாரிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறாராம்.

ஆக, ஃபிளிப்கார்ட் நிறுவனத்திலிருந்து  வெளி யேறினாலும் புதிய தொழில்களைத் தொடங்க  இவர்களிடம் இருக்கும் ஆர்வம் குறையவில்லை. இந்த இருவரும் அடுத்த ரவுண்டுக்குத் தயாராகி விட்டார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது!