Published:Updated:

அரசியலுக்கு வருகிறாரா ரகுராம் ராஜன்?

அரசியலுக்கு வருகிறாரா ரகுராம் ராஜன்?
பிரீமியம் ஸ்டோரி
News
அரசியலுக்கு வருகிறாரா ரகுராம் ராஜன்?

அரசியலுக்கு வருகிறாரா ரகுராம் ராஜன்?

ர்.பி.ஐ முன்னாள் கவர்னரான ரகுராம் ராஜன் பேசும் கூட்டம் என்றாலே அரங்கு நிறைந்து வழியும். நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் ஜெயித்தால், அவர்தான் நிதியமைச்சர் என பேச்சு எழுந்துள்ள நிலை யில், அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் கூட்டம் குறைவாக இருக்குமா என்ன??

அரசியலுக்கு வருகிறாரா ரகுராம் ராஜன்?

ரகுராம் ராஜன் அவரது புத்தகமான தி தேர்டு பில்லர் (The Third Pillar) என்கிற புத்தகத்தை இந்தியாவின் முக்கியமான நகரங்களில் வெளியிட்டுவிட்டு, கடைசியில் தாய்மண்ணான சென்னையில் வெளியிட வந்திருந்தார். வறுமை ஒழிப்பு, ‘நியாய்’ திட்டம், அரசியல் ஆதாயத்தைப் பயன்படுத்திக் கொள்ளை லாபம் சம்பாதிப்ப வர்கள், மானியம் என்கிற பெயரில் பெரும் பணம் யார் யாருக்கோ போய்ச்சேருவது, உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் படும் கஷ்டம் எனப் பல விஷயங்களைப் பற்றி பேசினார் ரகுராம் ராஜன்.

அவர் பேசி முடித்தவுடன், பார்வையாளர் கள் பலரும் பல கேள்விகளைக் கேட்டார்கள். எல்லாக் கேள்விகளுக்கும் பொறுமையாகப் பதில் சொன்ன ரகுராம் ராஜனிடம், தி இந்து குழுமத்தின் தலைவர் என்.ராம், ‘‘நீங்கள் அரசுக்கு ஆலோசனை சொல்வீர்களா?’’ என்று கேட்டார். அவர் என்ன பதில் சொல்வாரோ என எல்லோரும் உன்னிப்பாகக் கேட்க, அதற்கு சிரிப்பு மட்டுமே பதிலாகத் தந்தார் ரகுராம் ராஜன்.

‘‘இப்போது நான் பார்த்துவரும் பேராசிரியர் வேலையை மகிழ்ச்சியாகத்தான் செய்து வருகிறேன். ஆனால், மீண்டும் நான் பயன்படுகிறமாதிரி ஒரு வாய்ப்பு உருவானால், வரத் தயார்’’ என அவர் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். அவர் மீண்டும் இந்தியா வுக்கு வருவாரா, அப்படியே வந்தாலும் அரசியலுக்கு வருவாரா என்பது இன்னும் சில மாதங்களில் தெரிந்துவிடும்!

-ஆகாஷ் - படம் : தி.குமரகுருபரன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz