Published:Updated:

பொதுவாழ்க்கைக்கு வந்ததும் நடனம் ஆடுவதை நிறுத்திவிட்டேன்! - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

பொதுவாழ்க்கைக்கு வந்ததும் நடனம் ஆடுவதை நிறுத்திவிட்டேன்! - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
பிரீமியம் ஸ்டோரி
பொதுவாழ்க்கைக்கு வந்ததும் நடனம் ஆடுவதை நிறுத்திவிட்டேன்! - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

மனசே மனசே...

``ராஜீவ் காந்தி படுகொலைச் சம்பவம் வாழ்க்கையில், என்னால் தாங்கிக்கொள்ள முடியாத அளவில் மனஅழுத்தத்தை விதைத்துவிட்டுப் போனது. அதற்குக் காரணம்... அவர் இறப்பதற்கு முன்பாகத் தமிழகம் வந்திருந்தபோதுதான் அவரோடு நான் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்திருந்தது. அவ்வளவு எளிமையாகப் பேசிப் பழகிய அந்தத் தலைவர், ‘குண்டு வெடிப்பில் பலியாகிவிட்டார்’ என்ற செய்தியைக் கேட்ட கணம், மனதளவில் சுக்கு நூறாக உடைந்துபோனேன். அப்போது ஏற்பட்ட அந்த மனஅழுத்தத்திலிருந்து மீண்டுவர எனக்குப் பல ஆண்டுகள் தேவைப்பட்டது!’’ என்று இப்போதும் உணர்ச்சிவசப்பட்டுப் பேசுகிறார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்!

பொதுவாழ்க்கைக்கு வந்ததும் நடனம் ஆடுவதை நிறுத்திவிட்டேன்! - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

``வாழ்க்கையில் எப்போதுமே ஈடுசெய்ய முடியாத இழப்பு என்றால், அது நமக்கு நெருங்கிய உறவுகளின் மரணமாகத்தான் இருக்க முடியும். இறந்துபோன யாரையும் திரும்பக் கொண்டுவர இயலாத அந்த ஏமாற்றத்தைத் தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவம் எல்லோருக்கும் வாய்த்துவிடுவதில்லை. இது போன்ற சூழல்களில் காலம்தான் மெள்ள மெள்ள துயரத்தைத் துடைத்தெடுக்கும் மருந்தாக இருக்கும். ராஜீவ் படுகொலைச் சம்பவம் எனக்குள் ஏற்படுத்திய வலியையும் காலம்தான் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைத்தெடுத்தது.’’ தொடர்ச்சியாக அரசியல் பேசுபவர், தனிப்பட்ட வாழ்க்கையில் எப்படி?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பொதுவாழ்க்கைக்கு வந்ததும் நடனம் ஆடுவதை நிறுத்திவிட்டேன்! - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்``பொது வாழ்க்கை என்று வந்துவிட்டதால், தினம்தோறும் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும். சில நேரங்களில், தலை பாரத்துடன் கொஞ்சம் படபடப்பும் இருப்பதாக உணர்ந்தால், மனஅழுத்தம் என்று புரிந்துகொள்வேன். உடனடியாக ஒரு குளியலைப் போட்டுவிட்டு, வெளியே நடைப்பயிற்சிக்குக் கிளம்பிவிடுவேன். வெளிக்காற்று உடம்பில் பட்டதுமே சிலிர்ப்புடன்கூடிய புத்துணர்வு மனதை ஆக்கிரமித்துவிடும்.   

பொதுவாழ்க்கைக்கு வந்ததும் நடனம் ஆடுவதை நிறுத்திவிட்டேன்! - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

சோர்வான மனநிலையில் இருப்பதாக உணரும் சூழ்நிலைகளில், பழைய திரையிசைப் பாடல்களை ஒலிக்கவிட்டு, கண்களை மூடி ரசித்துக் கேட்கும் பழக்கம் என்னை நானே ரீசார்ஜ் செய்துகொள்ள உதவியாக இருக்கிறது’’ என்றவர், இசை ரசிகனாகத் தன் விருப்பங்களையும் பட்டியலிட ஆரம்பித்தார்.

``நடிகர் சந்திரபாபு பாடிய, ‘நான் ஒரு முட்டாளுங்க...’, `புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை...’ மாதிரியான தத்துவப் பாடல்கள் எப்படிப்பட்ட கனத்த மனதையும் லேசாக்கிவிடும். சி.எஸ்.ஜெயராமன் பாடல்களும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். கிஷோர் குமார், முகமது ரஃபீக் பாடிய இந்திப் பாடல்கள், டாம் ஜோன்ஸின் ஆங்கிலப் பாடல்களையும்கூட விரும்பிக் கேட்பதுண்டு.

கல்லூரி நாள்களில் பாடிக்கொண்டே டான்ஸ் ஆடும் பழக்கமெல்லாம் எனக்கு இருந்தது. பொது வாழ்க்கைக்கு வந்த பிறகு நடனம் ஆடுவதை நிறுத்திவிட்டேன். வீட்டில் ஓய்வாக இருக்கும்போது அவ்வப்போது பாட்டுப் பாடுவது உண்டு. ஆனால், என் மனைவி, `ஐயோ... அது நல்ல பாட்டு... தயவுசெய்து பாட்டுப் பாடிக் கொன்றுவிடாதீர்கள்’ என்று அன்போடு கேட்டுக்கொள்வார். காரணம்... அவர் சிறந்த பாடகி!

காரில், நெடுந்தொலைவு பயணம் செய்யும் வேளையில், பழைய பாடல்களை ஒலிக்கவிட்டபடி கூடவே நானும் ‘ஹம்’ பண்ணிக்கொண்டு செல்வதுண்டு. இப்படி நான் பாடிக்கொண்டே பயணம் செய்வது எனக்கு இனிமையைத் தருகிறதோ இல்லையோ... நிச்சயம் டிரைவரைத் தூங்கவிடாமல் பார்த்துக்கொள்ளும். அதனால், பாதுகாப்பான பயணமும் கிடைத்துவிடும்’’ என்கிறார் குலுங்கக் குலுங்கச் சிரித்தவாறு!

த.கதிரவன் - படங்கள்:பா.காளிமுத்து