நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

நாணயம் பிட்ஸ்

நாணயம் பிட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
நாணயம் பிட்ஸ்

நாணயம் பிட்ஸ்

நாணயம் பிட்ஸ்

முதலிடத்தில் ரிலையன்ஸ்!

ந்தியாவின் நம்பர் ஒன் நிறுவனமாக உயர்ந்துநிற்கிறது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ். கடந்த நான்காம் காலாண்டு முடிவுகளின்படி, ரிலையன்ஸின் வருமானம் ரூ.6.23 லட்சம் கோடியாக உயர்ந்து, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) நிறுவனத்தை முந்திச் சென்றிருக்கிறது. ஐ.ஓ.சி-யின் வருமானம் ரூ.6.17 லட்சம் கோடியாக இருக்கிறது. வருமானத்தில் மட்டுமல்ல, லாபத்திலும் ரிலையன்ஸ் முதலிடத்தில் இருக்கிறது. ரிலையன்ஸின் லாபம் ரூ.39,588 கோடி யாக இருக்க, ஐ.ஓ.சி-யின் லாபமோ ரூ.16,894 கோடி மட்டுமே. #ரிச் ரிலையன்ஸ்!

நாணயம் பிட்ஸ்

குறையும் மொபைல் போன் வாடிக்கையாளர்கள்!

மொ
பைல் போன் வாடிக்கையாளர் களின் எண்ணிக்கை கடந்த மார்ச்சில் கணிசமாகக் குறைந்திருக் கிறது. கடந்த பிப்ரவரியில் மொபைல் போன் வாடிக்கையாளரின் எண்ணிக்கை 118 கோடி. இது மார்ச்சில் 2.18 கோடி குறைந்து, 116 கோடியாக மாறியிருக்கிறது.  குறைவான வருமானம் தரும் வாடிக்கையாளர்களை செல்போன் நிறுவனங்கள் கைகழுவியதே இதற்குக் காரணம். ரிலையன்ஸ் ஜியோ புதிதாக ஒரு கோடி புதிய வாடிக்கையாளர் களைப் பெற, ஏர்டெல்,  ஐடியா நிறுவனங்கள் தலா 1.5 கோடி வாடிக்கை யாளர்களை இழந்திருக் கிறது. #இனி எல்லாம் ஜியோ மயம்!

நாணயம் பிட்ஸ்

இந்தியன் டெரைனின் தூதர் தோனி!

ந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை விளம்பர ஒப்பந்தங்கள் இன்னமும் துரத்துகின்றன. சென்னையின் புகழ் பெற்ற ஆண்களுக் கான ஆடை தயாரிப்பு நிறுவன மான இந்தியன் டெரைனின் விளம்பரத் தூதராக கடந்த வாரம் ஒப்பந்தம் ஆனார் தோனி. பல கோடி ரூபாய் ஒப்பந்தம் என கிசுகிசுக்கப்படும் இந்த ஒப்பந்தத்தின்படி இரண்டு ஆண்டுகள் இந்த நிறுவனத்துக்கு விளம்பரத் தூதராக இருப்பார் தோனி. ‘‘ எங்கள் பிராண்டை அடுத்தக் கட்டத்துக்குக் கொண்டுசெல்ல தோனி பெரும் துணையாக இருப்பார்’’ என்கிறார்  இந்தியன் டெரைன் ஃபேஷன்ஸ் லிமிடெட்டின்  நிறுவனரும் தலைவருமான வெங்கி ராஜகோபால். #கூட்டணிகளை கட்டட்டும்!

இங்கிலாந்துக்கு வேலைக்குப் போங்க!

சிய நாடுகளிலேயே வெளி நாட்டவருக்கு அதிக சம்பளம் தரும் நாடு என்கிற பட்டியலில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது ஜப்பான். ஜப்பானில் வெளி நாட்டைச் சேர்ந்த இடைநிலை ஊழியர் ஒருவருக்கு ஓர் ஆண்டுக்கு 3,86,451 டாலர் சம்பளம் தரப்படுகிறதாம். (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 2.66 கோடி). நம் நாட்டிலும் 2,99,728 டாலர் சம்பளம் தரப் பட்டாலும் இங்குள்ள போக்கு வரத்து நெரிசல் மற்றும் சுற்றுச் சூழல் பிரச்னைகளால் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் இங்கு வரத் தயங்குகிறார்களாம். வெளிநாட்டவருக்கு உலக அளவில் மிக அதிக சம்பளம் தரும் நாடு இங்கிலாந்துதான். ஓர் ஆண்டுக்கு 4,21,798 டாலர்! # காசு...பணம்...துட்டு...மணி!

நாணயம் பிட்ஸ்

அதிகரித்து வருகிறது வேலைவாய்ப்பு!

மு
றைசார்ந்த தொழில்களில் வேலை வாய்ப்புகள் அதிகரித்திருப்பதாகத் தொழிலாளர் சேமநல நிறுவனம் புள்ளிவிவரம் வெளியிட்டிருக் கிறது. கடந்த பிப்ரவரியில் 7.88 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்ட நிலையில்,  கடந்த மார்ச்சில் இது 8.14 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாகச் சொல்கிறது இ.பி.எஃப்.ஒ அலுவலகம். கடந்த 2018-19-ல் மட்டும் 67.59 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் முறைசார்ந்த தொழில்களில் உருவாக்கப் பட்டிருக்கின்றனவாம்! # நம்பினா நம்புங்க!

நாணயம் பிட்ஸ்

இன்ஸ்டாகிராம்ல இருக்கீங்களா? உங்க தகவல் பத்திரம்..!

மூக வலைத்தளங்களைப் பயன்படுத்தினால், உங்களைப் பற்றிய தகவல் உங்களுக்குத் தெரியாமலே யாரோ ஒருவருக்குப் போய்விடும் என எச்சரிக்கிறது சமீபத்திய சம்பவம். இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்திருக்கும் 4.9 கோடி பேருடைய தனிப்பட்ட தகவல்களை மும்பையிலுள்ள சாட்ர்பாக்ஸ் (Chtrbox) என்னும் நிறுவனம் கசியவிட்டிருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. முக்கியமான தகவல்கள் எதுவும் இதில் கசிந்துவிடவில்லை என இன்ஸ்டாகிராமும் சாட்ர்பாக்ஸ் நிறுவனமும் சொல்லியிருக்கிறது. இருந்தாலும் இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்துபவர்கள் உஷாராக இருப்பது நல்லது!  #இன்ஸ்டாகிராம் இம்சைகள்!

நாணயம் பிட்ஸ்

வருமானத்தை அள்ளும் ரயில்வே!

ந்திய ரயில்வே துறை வருமானத்தை அள்ளுஅள்ளு என்று அள்ளிக்கொண்டிருக்கிறது. இந்திய ரயில்வேயின் ஆபரேட்டிங் ரேஷியோ வருமானம் கடந்த 2017-18-ல் 98.4 சதவிகிதமாக இருந்தது. இது கடந்த 2018-19-ல் 97.3 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது. ஒரு ரூபாயைச் சம்பாதிக்க எவ்வளவு செலவு செய்யப்படுகிறது என்பதுதான் ஆபரேட்டிங் ரேஷியோ. என்.டி.பி.சி நிறுவனமும் கன்கார் (Concor) நிறுவனமும் ரூ.13,000 கோடியை அட்வான்ஸாகத் தந்ததுதான் ரயில்வேயின் செலவு குறையக் காரணம் என்கிறார்கள் இந்தத் துறை சார்ந்த வல்லுநர்கள். # டிக்கெட் விலையை ஏத்திடாதீங்க அதிகாரிகளே!