இன்றைக்கு நம் நாட்டில் வெற்றிகரமாகச் செயல்பட்டுவரும் நிறுவனங்களில் பாதிக்கும் மேற்பட்டவை குடும்பத் தொழில் நிறுவனங்கள்தான். அதாவது, ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்குமுன்பு தொடங்கப்பட்டு, இரண்டு, மூன்று தலைமுறைகளைக் கடந்த குடும்பத் தொழில் நிறுவனங்களாகவே இருக்கின்றன.

இந்த நிறுவனங்கள் இன்றைக்குச் சந்திக்கும் மிகப் பெரிய பிரச்னை, அடுத்த தலைமுறை யினரைக் குடும்பத் தொழிலில் ஈடுபடுத்தி, தொடர்ந்து வெற்றிகரமாக நடத்துவது எப்படி என்பதுதான். இந்தப் பிரச்னைக்கான பதிலைத் தேடிக் கண்டடையும் ஒரு முயற்சியாகத்தான் இருந்தது கடந்த வாரம் சென்னையில் நடந்த ஒரு நாள் கருத்தரங்கு ஒன்று. மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷனும், மேலாண்மை நிர்வாகக் கல்லூரியான கிரேட் லேக்ஸ் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டும் (GLIM) இணைந்து நடத்திய இந்தக் கருத்தரங்கை நடத்தின. இதில் குடும்பத் தொழில் நிறுவனங்களைச் சார்ந்தவர்கள், அது தொடர்பாக பயிற்சி அளித்துவருபவர்கள், சிறு குறு தொழில்களைச் செய்துவருபவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இந்தக் கருத்தரங்கின் முதல் அமர்வின் தொடக்கத்தில் பேசிய கிரேட் லேக்ஸ் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டின் பேராசிரியர் கே.சி.ஜான், குடும்பத் தொழிலை நிர்வகிப்பது குறித்து இன்றைக்குப் பேசவேண்டியதன் காரணங்களை எடுத்துச் சொன்னார். அவருக்கு அடுத்து சிறப்புரையாற்றினார் கார்போரண்டம் யுனிவர்சல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கே.ஸ்ரீநிவாசன்.

‘‘பொருளாதார ரீதியாக வளர்ந்துவரும் நாடுகளில் குடும்பத் தொழில் நிறுவனங்கள் 60 சதவிகிதத்துக்கு மேல் இருக்கின்றன. ஆனால், அமெரிக்கா போன்ற பொருளாதார ரீதியாக வளர்ந்த நாடுகளில் 30% என்கிற அளவிலேயே குடும்பத் தொழில் நிறுவனங் கள் இருக்கின்றன. ஆனாலும், உலகம் முழுக்க வியாபித்திருக்கும் வால்மார்ட் நிறுவனம் ஒரு குடும்பத் தொழில் நிறுவனம்தான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

குடும்பத் தொழில் நிறுவனங்கள் ஐந்து ‘C’-க்களைப் பின்பற்றி நடக்கின்றன. மூலதனம் (Capital), கட்டுப்பாடு (Control), குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்குமான எதிர்காலம் (Carrier), கருத்துவேறுபாடுகளுக்கான (Conflict) தீர்வு, கலாசாரம் (Culture) போன்றவைதான் அந்த ஐந்து ‘C’-க்கள். இவற்றுடன் தொடர்பு (Contact) என்கிற ஆறாவது ‘C’-யையும் சரியாகப் பின்பற்றி நடக்கும்போதுதான் ஒரு நிறுவனம் நூறு ஆண்டு களைக் கடந்து வெற்றிகரமாகச் செயல்படுகிறது. இதற்கு நல்லதோர் உதாரணம் முருகப்பா குழுமம்.

உலகளவில் மிகப் பெரிய நிறுவனங்கள் எல்லா வற்றுடனும் கூட்டுச் சேர்ந்து தொழில் நடத்தியிருக் கிறது முருகப்பா குழுமம். அந்த வெளிநாட்டு நிறுவனங்கள் தொழிலிலிருந்து வெளியேற நினைத்த போது, அவர்கள் வைத்திருந்த பங்குகளை வாங்கி நிறுவனத்தின் முழு நிர்வாகப் பொறுப்பினையும் ஏற்றுக்கொண்டனர்.

பல தொழில் நிறுவனங்கள் மூன்று தலைமுறைக்குமேல் கடந்து செல்ல முடியாததற்குக் காரணம், கருத்துவேறுபாடுதான். ஆனால், முருகப்பா குழுமம் கருத்துவேறுபாடுகளை மிகச் சரியாகக் கையாண்டதால், தற்போது நான்காவது தலைமுறையையும் கடந்திருக்கிறது.

முருகப்பா குழுமத்தின் வாரிசுகள் குடும்பத் தொழிலில் ஈடுபட வேண்டும் என்றால், சில விதிமுறைகளை வகுத்தனர். குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் இரண்டு வருடமாவது வெளிநாட்டுக்குச் சென்று படிக்க வேண்டும். குறைந்தபட்சம் இரண்டு வருடமாவது வேறு ஏதாவது ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்க வேண்டும். குறைந்தபட்சம் இரண்டு வருடமாவது தனது தந்தையின் தலைமையின்கீழ் நடக்காத ஒரு நிறுவனத்தில் வேலை செய்து பயிற்சி பெறவேண்டும். அவர் வயதுகொண்ட பிற ஊழியர் களுக்கு என்ன சம்பளமோ, அந்தச் சம்பளம்தான் அவருக்குத் தரப்படவேண்டும். அவரால் விலை உயர்ந்த ஒரு காரை வைத்துக்கொள்ள முடியும் என்றாலும், அவருக்கு அந்த அனுமதி கிடையாது. இப்படிப் பல நிபந்தனைகள் விதித்ததால்தான், முருகப்பா குழுமத்தின் வாரிசுகள் இன்றும் மிகத் திறமையாகச் செயல்பட்டு, அந்தக் குழுமத்தை உலகப் புகழ்பெற்ற நிறுவனமாக உயர்த்தியிருக்கின்றனர்’’ என்றார்.

அவருக்கு அடுத்தபடியாகப் பேசினார் கவின்கேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான சி.கே.ரங்கநாதன். ‘‘நம் குடும்ப உறுப்பினர்கள்மீது நாம் அதிக நம்பிக்கை வைத்து முக்கியமான பொறுப்புகளைக் கொடுப்பது இயற்கைதான். ஆனால், நிறுவனம் வளர வளர குடும்ப உறுப்பினர் களும் அந்த வளர்ச்சிக்கு ஈடுதருகிற மாதிரி தங்களை வளர்த்துக்கொள்ளாதபோது, கருத்துவேறுபாடு உருவாகிறது. அதனால் பிசினஸில் பிளவு உண்டாகும் நிலை ஏற்படுகிறது.

ஒரு தொழில் குடும்பத் தொழிலாக (Family business) இருக்கும்போது, குடும்பத்துக்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அதுவே தொழில் குடும்பமாக (business family) இருக்கும்போது, பிசினஸுக்கு அதிக முக்கியத்துவம் தரும் நிலை உருவாகிறது. குடும்பத்துக்கு அதிக முக்கியத்துவம் தராமல், நிறுவனத்துக்கு அதிக முக்கியத்துவம் தரும்போது, அதனால் நிறுவனம் நன்றாகச் செயல்பட்டு, அதன்மூலம் குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே அதிக நன்மை அடைகின்றனர்.

என் தந்தையார் திடீரென இறந்தபோது, அவரது பிசினஸை நாங்கள் நடத்த ஆரம்பித்தோம். எனது மூத்த அண்ணன் மார்க்கெட்டிங்கையும் நான் தயாரிப்பினையும் கவனித்துவந்த அதே வேளையில், எனது இன்னொரு அண்ணன் ஃபைனான்ஸைக் கவனித்துக்கொண்டார். ஆனால், நாங்கள் அடிக்கடி சந்தித்துப் பேசிய தெல்லாம் கிடையாது. இதனால் தொழில் வளர வளர, எங்களுக்குள் கருத்து வேறுபாடு அதிகரித்து, நாங்கள் எல்லோரும் இணைந்து பிசினஸ் செய்யமுடியாத நிலை ஏற்பட்டது.

என் தலைமுறையில் நடந்தது போல, என் அடுத்த தலைமுறை யிலும் நடக்கக்கூடாது என்பதில் நான் கவனமாக இருக்கிறேன். திறமை அடிப்படையில்தான் முடிவெடுக்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டுமே தவிர, சீனியர், ஜூனியர் என்பதற்காக முடிவெடுக்கும் அதிகாரத்தைத் தரக்கூடாது. பிசினஸைப் பாதிக்கும் எந்த முடிவினையும் குடும்ப உறுப்பினர்கள் எடுக்கக் கூடாது என என் குழந்தைகளுக்குச் சொல்லித் தருகிறேன்.

என் குழந்தைகள் என்பதற்காகவே நான் யாரையும் என் தொழிலில் அனுமதித்துவிட வில்லை. முதலில், அவர்கள் தங்களது திறமையை நிரூபிக்க ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தித் தருகிறேன். மிகச் சிறிய தொகையை அவர்களுக்கு மூலதனமாகத் தந்து, அவர்கள் விரும்பும் தொழிலைச் செய்ய அனுமதிக்கிறேன். நான் தந்த 10 லட்சம் ரூபாயை வைத்து, என் மகன் பேக்கரி பிசினஸைத் தொடங்கினான். இன்றைக்கு 100 அவுட்லெட்டுகளுக்கு மேல் திறந்துவிட்டான். அதேபோலத்தான் என் மகள்களும். இன்றைக்கு அவர்கள் என் நிறுவனத்தில் போர்டு மெம்பர் களாகச் சிறப்பாகச் செயல்படுகிற அளவுக்கு வளர்ந்திருக்கிறார்கள். சில சமயங்களில் நான் எடுக்க நினைக்கும் முடிவினை என் போர்டில் இருக்கும் இயக்குநர்கள் கேள்விக்குள்ளாக்கு வார்கள். இது என் குழந்தைகளுக்கு ஆச்சர்யமாக இருக்கும். ஆனால், மற்றவர்கள் தங்கள் கருத்தினைச் சொல்வதற்குச் சுதந்திரம் அளிக்க வேண்டும் என்பதை என் குழந்தைகளுக்குக் கற்றுத் தருகிறேன்.

எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மாதத்துக்கு ஒருமுறை கூடி, அவரவர்கள் தங்கள் தொழிலில் எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து விவாதிப்போம். இந்தக் கூட்டத்தில் நான் உள்பட பிசினஸுக்காக என்ன செய்கிறோம் என்பதை விரிவாக எடுத்துச் சொல்வோம். இப்படிச் செய்வதன்மூலம் ஒரு தொழிலை எப்படிச் செய்ய வேண்டும் என்று அவர்கள் நன்றாகக் கற்றுக் கொள்ள முடிகிறது’’ என்றார்.

இந்தக் கருத்தரங்கின் இரண்டாம் அமர்வில் ஆரம்பக் கட்டத்தில் இருக்கும் குடும்பத் தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான நிதியை எப்படித் திரட்டுவது என்பது பற்றியும், மூன்றாம் அமர்வில் குடும்பத்தின் நற்பெயரைக் காப்பாற்ற குடும்ப உறுப்பினர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் விரிவாகப் பேசப்பட்டன.

இந்தக் கருத்தரங்கின் நான்காம் அமர்வில் குடும்பத் தொழில் நிறுவனங்கள் வெற்றி பெறுவதற்குக் கடைப்பிடிக்கவேண்டிய விஷயங்களைப் பற்றி விரிவாகப் பேசப்பட்டது. இந்த அமர்வில் பேசினார் காலணி ஏற்றுமதியில் உலகப் புகழ்பெற்று விளங்கும் ஃபரிதா குரூப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் இர்ஷாத் அஹமத் மெக்கா. அவரின் பேச்சு இனி சுருக்கமாக...

‘‘எங்கள் தாத்தா ஆரம்பித்த நிறுவனம் இது. எங்கள் அப்பாவுக்கு அடுத்தபடியாக மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்த நாங்கள் வந்திருக்கிறோம். இப்போது எங்கள் குழந்தைகளான நான்காவது தலைமுறையும் குடும்பத் தொழிலில் ஈடுபடத் தொடங்கிவிட்டார்கள்.

எங்கள் தாத்தா ஆம்பூரில் சிறிய அளவில் தொழிற்சாலையை ஆரம்பித்தார். என் அப்பா ரபீக் அஹமத் ஆம்பூரில்தான் படித்தார். ஆனால், அவரது நான்கு மகன்களான எங்களை வெளி நாடுகளில் படிக்க வைத்தார். அதுவும் ஒவ்வொரு மகனையும் ஒவ்வொரு நாட்டில் படிக்க வைத்தார். இதன்மூலம் உலகம் முழுக்க மக்கள் எப்படி யெல்லாம் ஷூக்களை அணிகிறார்கள் என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப எங்களால் ஷூ தயாரிக்க முடிந்தது. நாங்கள் நான்குபேரும் பல்வேறு நாடுகளில் படித்தாலும் இப்போது ஆம்பூரில்தான் இருக்கிறோம். உலகத்தில் எங்கு இருந்தாலும் எங்கள் ஊரான ஆம்பூரில் இருக்கும்போது கிடைக்கும் நிம்மதியே தனி.

அடுத்தத் தலைமுறையினரைத் தொழிலுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதில் மிகவும் அக்கறை காட்டுவார் என்னுடைய தந்தை. குழந்தைகள்முன் தொழிலைப் பற்றி அவதூறாக எதையும் சொல்லக்கூடாது என்று சொல்வார். அப்படிச் சொன்னால், குழந்தைகளுக்குத் தொழில் மீது வெறுப்பு வந்துவிடும். நாம் செய்யும் தொழிலில் அவர்களுக்குச் சிறுவயது முதலே ஒரு ஆர்வம் இயற்கை யாக வரவேண்டும் என்பார்.

பிசினஸில் பின்பற்ற வேண்டிய பண்புகளை எங்களுக்கு எங்கள் தந்தையார் சொல்லித் தந்தார். நாங்கள் அதை எங்கள் குழந்தைகளுக்குக் கற்றுத் தருகிறோம். சமீபத்தில் 16, 17, 18 வயதுடைய எங்கள் குழந்தைகள் மூன்று பேரிடம் மூன்று விதமான வேலைகளைத் தந்து சீனாவுக்கு அனுப்பினோம். நாங்கள் எதிர்பார்த்ததைவிட அவர்கள் அந்த வேலையை மிகச் சிறப்பாக செய்து முடித்தார்கள். ஒருவர் 10% தள்ளுபடி வாங்குவதற்குப் பதிலாக 20% வாங்கியிருந்தார். அதிகமாகத் தள்ளுபடி பெறுவது சரியான விஷயமல்ல. தள்ளுபடி என்கிற பெயரில் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய லாபத்தை நாம் பறித்துக்கொள்ளக் கூடாது என்பதை அவரிடம் எடுத்துச் சொன்னோம்.

எங்கள் நிறுவனத்தில் 27,000 பேர் வேலை பார்க்கிறார்கள். இதில் பெரும்பகுதி பெண்கள். இவர்கள் அனைவரிடமும் என்னுடைய செல்போன் நம்பர் இருக்கும். அவர்கள் எப்போது வேண்டு மானாலும் எங்களைத் தொடர்புகொண்டு பேசலாம் என்பதற்காகத்தான் செல்போன் நம்பரை எல்லோருக்கும் தந்திருக்கிறோம். இப்படிச் செய்ய எங்களுக்கு எந்தத் தயக்கமும் இருந்ததில்லை. நாங்கள் தந்த உரிமையை எங்கள் ஊழியர்கள் ஒருபோதும் தவறாகப் பயன்படுத்திய தில்லை. ஒரு மாதத்துக்கு இரண்டு முறை அவர்கள் எனக்கு போன் செய்தாலே அதிகம்.

ஒருமுறை எனக்கு ஒரு போன் வந்தது. போன் செய்தவர், எங்கள் தொழிற்சாலைக்குப் பக்கத்தில் குடியிருக்கும் பெண். ‘உங்கள் தொழிற்சாலையில் ஜெனரேட்டர் அதிக சத்தத்துடன் ஓடுவதால், இரவில் தூங்க முடியவில்லை’ என்றார் அவர். அந்த இடத்தைப் பார்வையிட்ட நான், ஜெனரேட்டரை வேறு இடத்துக்கு மாற்றச் சொன் னேன். ‘அதற்குப் பல லட்சம் ரூபாய் செலவாகும்’ என்றார்கள் நிர்வாக ஊழியர்கள். ‘பரவாயில்லை, நம்மால் யாருக்கும் எந்தத் தொந்தரவும் இருக்கக் கூடாது’ என்று சொன்னேன்.

நான் சொன்னபடியே ஜெனரேட்டரை வேறு இடத்துக்கு மாற்றினார்கள். பிறகு புகார் செய்த பெண்ணைச் சந்தித்து, விஷயத்தைச் சொன்னேன். ‘சார், பல லட்சம் செலவழிச்சு ஜெனரேட்டரை மாத்துறதுக்குப் பதிலா, அந்தப் பணத்தை எங்கிட்ட கொடுத் திருந்தா, நானே வேற இடத்துக்குப் போயிருப்பேனே’ என்றார். லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு தொழில் செய்யக்கூடாது என் பதுதான் நாங்கள் பின்பற்றும் பாடம்.

எங்கள் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்களின் குழந்தைகள் அனைவருமே இன்றைக்குக் கல்லூரியில் படிக்கவைக்கும் அளவுக்கு அவர்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியிருக்கிறோம். எல்லோரும் படித்துவிட்டால் நமக்கு வேலைக்கு ஆள் கிடைக்க மாட்டார்களே என்றெல்லாம் நாங்கள் யோசிப்பதே இல்லை’’ என்று அவர் பேச, பலரும் அவரைப் பாராட்டினார்கள்.

ஏ.ஆர்.குமார் - படங்கள்: தி.குமரகுருபரன்