ஓரளவுக்கு வயதானவுடன் நிர்வாகப் பொறுப்பினை இளைய சமுதாயத் திடம் தந்துவிட்டு, ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கும் தன்மை எல்லோருக்கும் வந்துவிடுவதில்லை. ஆனால், அசீம் பிரேம்ஜியோ விப்ரோவின் தலைமைப் பொறுப்பிலிருந்து ஜென்டில்மேனாக விலகி, தனது மகனுக்கு வழிவிட்டிருக்கிறார். வருகிற ஜூலை 30-ம் தேதி விப்ரோவின் தலைமைப் பதவியிலிருந்து விலகவிருக்கிறார் அசீம் பிரேம்ஜி.

பாதியில் முடிந்த படிப்பு...

அவருக்குப்பிறகு அவரது மகன் ரிஷாத் பிரேம்ஜி தலைமைப் பொறுப்புக்கு வரவிருக் கிறார். தனது மகனை நன்கு தயார்படுத்தி விட்டுத்தான், தன்னுடைய நிறுவனத்துக்கு அழைத்துக்கொண்டு வருகிறார் அசீம் பிரேம்ஜி. ஆனால், அசீம் பிரேம்ஜியின் பிசினஸ் வாழ்க்கை அப்படி ஆரம்பிக்க வில்லை. ஸ்டான்ட்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் படித்துக்கொண்டிருந்த சமயத்தில் அவரது தந்தை திடீரென மரணம் அடைய, வேறு வழி இல்லாமல் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு, குடும்ப நிறுவனத்தைக் காக்க வந்தார் அசீம். அப்போது அவருக்கு 21 வயதுதான்.

அந்த வயதில் வெஸ்டர்ன் இந்தியா வெஜிடபிள் புராடக்ட்ஸ் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பினை ஏற்றார். பிறகு இந்த நிறுவனத்தை விப்ரோ என மாற்றினார். வனஸ்பதியிலிருந்து சோப்பு மற்றும் அழகு சாதனப் பொருள்கள் தயாரிக்கத் தொடங்கி, 1990-ம் ஆண்டு மென்பொருள் தயாரிப்பிலும் களமிறங்கினார்.

ரூ.10,000 - ரூ.741 கோடியாக மாறிய ஜாலம்

1980-களின் தொடக்கத்திலேயே விப்ரோ நிறுவனத்தின் பங்குகளைப் பங்குச் சந்தையில் பட்டியலிட்டு, முதலீட்டாளர் களுக்குப் பல ஆயிரம் மடங்கு லாபம் தந்தார். 1980-ம் ஆண்டில் விப்ரோ நிறுவனத் தில் ஒருவர் 10,000 ரூபாயை முதலீடு செய் திருந்தால், இந்த 39 ஆண்டுகளில் அவரது முதலீடு 741 கோடி ரூபாயாக பல்கிப் பெருகி யிருக்கும் என்பதைத் தெரிந்துகொண்டாலே அசீம் பிரேம்ஜி, தனது நிறுவனத்தை எந்த அளவுக்கு வளர்த்திருக்கிறார் என்பது புரியும். 1966-ம் ஆண்டு 20 லட்சம் டாலர் அளவுக்கு இருந்த விப்ரோ குழுமத்தின் வருமானம் தற்போது 1,100 கோடி டாலர் அளவுக்கு வளர்ந்து விட்டது.

மிகப் பெரிய நிறுவனத்தை எளிதாக நிர்வாகம் செய்வதற்காக ஐ.டி மற்றும் ஐ.டி அல்லாத பிரிவுகளைத் தனித்தனியாகப் பிரித்திருக்கிறார். இதனால் ஐ.டி தவிர, பிற துறைகளும் நல்ல முன்னேற்றம் கண்டுவருகிறது.

2,100 கோடி டாலர் கொடை

விப்ரோ நிறுவனத்தை மிகப் பெரிய அளவில் வளர்த்தெடுத்த அசீம் பிரேம்ஜி, தன்னுடைய சொத்தில் பெரும்பகுதியைச் சமூகத்துக்கே திரும்பத்தர முடிவெடுத்தார். 2001-ம் ஆண்டு அசீம் பிரேம்ஜி அறக்கட்டளையைத் தொடங்கினார். சமீபத்தில்கூட 2,100 கோடி டாலரை சமூகத்துக்காக ஒதுக்கியது இந்தியாவில் எந்தப் பணக்காரரும் செய்யாதது.

‘‘விப்ரோவில் நீண்டகாலம் பணியாற்றி விட்டேன். இனி சமூக வளர்ச்சிக்காகப் பாடுபடப் போகிறேன்’’ என்று சொல்லிவிட்டு, மகனிடம் தலைமைப் பதவியைத் தந்திருக்கிறார். வருகிற ஜூலை 30-ல் விப்ரோ நிறுவனத் தலைமைப் பதவியிலிருந்து விலகுகிறார் அசீம் பிரேம்ஜி. ஆனால், விப்ரோவின் ஐ.டி அல்லாத குழுமமான விப்ரோ என்டர் பிரைசஸ் நிறுவனத்தின் தலைவராகத் தொடரவிருக்கிறார்.

அசீம் டு ரிஷாத்

வருகிற ஜூலை 31-ம் தேதிமுதல் விப்ரோ நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பினை ஏற்க விருக்கிறார் அசீம் பிரேம்ஜியின் மகன் ரிஷாத் பிரேம்ஜி. தவிர, தற்போதைய தலைமைச் செயல் அதிகாரி இருக்கும் நீமச்வாலா நிர்வாக இயக்குநராகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார். ரிஷாத் மற்றும் நீமச்வாலா கூட்டணியிடம்தான் விப்ரோ நிறுவனத்தை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துக்கொண்டு செல்லவேண்டிய பொறுப்பு இருக்கிறது.

விப்ரோவின் தலைமைப் பொறுப்பினை ரிஷாத் ஏற்றுக்கொள்வதில் பெரிய ஆச்சர்யம் ஏதுமில்லை. 2007-ம் ஆண்டு முதல் விப்ரோ நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த 2015-ம் ஆண்டு முதல் விப்ரோ நிறுவனத்தின் இயக்குநர் குழுவிலும் இருக்கிறார். தவிர, விப்ரோ நிறுவனத்தின் தலைமை உத்தி அலுவலராகவும் இருந்தவர். ‘நாஸ்காம்’ அமைப்பின் தலைவராகவும் இருந்திருக்கிறார். விப்ரோ நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பினை ஏற்க கடந்த சில ஆண்டுகளாகவே கடுமையாகத் தயார்படுத்தப் பட்டிருக்கிறார் ரிஷாத்.

சவால் என்ன?

தனக்குப்பிறகு தனது மகனை விப்ரோ நிறுவனத்தின் தலைவராக ஆக்குவது என எப்போதோ முடிவு செய்துவிட்டார் அசீம் பிரேம்ஜி. இந்த முடிவினை எடுத்தபிறகு விப்ரோவின் தலைமைப் பொறுப்பினைத் திறம்பட ஏற்று நடத்துகிற அளவுக்கு ரிஷாத்துக்குப் பயிற்சியளித்தார். ரிஷாத்தினை ஹார்வர்டு நிர்வாக கல்லூரியில் எம்.பி.ஏ படிக்கவைத்தார். 2007-ம் ஆண்டு விப்ரோ நிறுவனத்துக்குள் இணைவதற்குமுன் பெயின் அண்டு கம்பெனி மற்றும் ஜி.இ கேப்பிட்டல் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியிருக்கிறார்.

விப்ரோ நிறுவனத்தில் அவர் நுழைவதற்குமுன் பலவிதமான நேர்காணல்களை அவர் கடக்க வேண்டியிருந்தது. தன்னுடைய மகன் என்றாலும் குழுமத்திலுள்ள பிற ஊழியர்கள் மாதிரிதான் தன் மகனையும் நடத்தி, நிறுவனத்தின் எல்லாத் துறைகளிலும் பயிற்சி தந்தார் அசீம் பிரேம்ஜி.

ரிஷாத் சந்திக்கவேண்டிய சவால்கள்

ஆனால், மிகக் கடுமையான காலகட்டத்தில்தான் விப்ரோ நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பினை ஏற்கவிருக்கிறார் ரிஷாத். அவர் சந்தித்தாக வேண்டிய சவால்கள் ஏராளம். முதலாவது, தொழில்நுட்ப மாற்றம். கிளவுட், அனல்டிக்ஸ் எனத் தொழில்நுட்பம் மாறி வருகிறது. இதனால் ஐ.டி துறை மற்றும் நிறுவனங்களின் வருமானம் உள்ளிட்டவற்றில் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக் கிறது. சமீபத்தில் வருமான அடிப்படையில் ஹெச்.சி.எல் நிறுவனம் மூன்றாவது பெரிய நிறுவனமாக மாறியிருக்கிறது.

அடுத்தது, ஹெச்1 பி விசா பிரச்னை காரணமாக உள்ளூர் அமெரிக்கர்களை அதிகம் வேலைக்கு எடுக்கவேண்டிய சூழல் அமெரிக்காவிலுள்ள எல்லா ஐ.டி நிறுவனங்களுக்கும் இருக்கிறது. இதனால் ஐ.டி நிறுவனங்களின் லாபவரம்பு தொடர்ந்து குறைந்துவருகிறது. கடந்த காலாண்டில் 1.1% அளவுக்கு லாபவரம்பு குறைந்திருக்கிறது.

ரிஷாத்துக்கான வாய்ப்புகள்

விப்ரோவில் 100 மில்லியன் டாலர் வென்சர் ஃபண்ட் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த ஃபண்டின் தலைவராக ரிஷாத் இருந்தார். இந்த ஃபண்ட் மூலம் அடுத்தகட்டத் தொழில்நுட்பத்தில் உள்ள நிறுவனங்களில் விப்ரோ முதலீடு செய்திருக் கிறது. வரும்காலத்தில் இவை வளரும்போது இந்த முதலீடுகள் பயன் அளிக்கும் எனக் கருதப் படுகிறது.

மேலும், சர்வதேச அளவில் உள்ள சந்தை வாய்ப்புகள் குறித்து ரிஷாத்துக்குத் தெரிந்திருப்பதால், விப்ரோவைத் தொடர்ந்து முன்னணி நிறுவனமாக அவர் வைத்திருப்பார் என்று நம்புவோமாக!