Published:Updated:

நானே கேள்வி... நானே பதில்!

வொய் திஸ் காமெடி வெறி?

நானே கேள்வி... நானே பதில்!

வொய் திஸ் காமெடி வெறி?

Published:Updated:
##~##

''பொங்கல் போன்ற பாரம்பரியப் பண்டிகைகளைக் கொண்டாடும் பழக்கம் இளைய தலைமுறையினரிடம் குறைந்துள்ளதா?''

 ''யார் சொன்னது? சமீபத்தில் தமிழக அரசு வெளியிட் டுள்ள தகவல் இது. 2011 தீபாவளியில் டாஸ்மாக்கில் பீர் விற்பனை 160 கோடி. ஆனால், 2012 பொங்கலில் டாஸ்மாக்கில் பீர் விற்பனை 276 கோடி. ஆக 'பொங்கலோ பொங்கல்’ என்று பீர் பொங்கியிருக்கிறது.''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- ஜெகன், சிதம்பரம்.

''சமீபத்தில் ரசித்த காமெடி?''

''காமெடியா, கொலவெறி காமெடிங்க அது. தஞ்சாவூரில் நடைபெற்ற பொங்கல் விழாவில், நடராஜன் (சசிகலா) பேசியது இது:

'நான் ஒரு கட்டுப்பாடற்ற தலைவன். இனி, நான் யாருக்கும் கட்டுப்பட மாட்டேன். பழ.நெடுமாறன், எனது மனைவி ஆகியோருக்கு மட்டுமே கட்டுப்பட்டவனாக இப்போது நான் இருக்கிறேன். வேறு யாருக்காகவும், எதற்காகவும் கட்டுப்பட மாட்டேன். முடிவு எடுங்கள் என்று என்னைப் பலர் கேட்கின்றனர். நான்தான் ஆட்சியை மாற்றினேன். வாக்களித்த மக்கள் என்னை நம்பி இருக்கிறார்கள். உலகத் தமிழர்கள் என்னை நம்பிஇருக்கிறார்கள். எனது முடிவால் தமிழகத்தின் பொது நலனுக்குப் பங்கம் ஏற்பட்டுவிடக் கூடாது என்று பார்க்கிறேன்.  தமிழகத்தின் ஜீவாதார உரிமைப் பிரச்னைகளைத் தீர்க்க வேண்டியிருக்கிறது. மேலும், எனது மனைவி மீதான வழக்கும் முடிவுக்கு வர வேண்டும். இதற்குப் பிறகு, எனது செயல்பாடுகள் குறித்துச் சிந்திப்பேன். தூக்குத் தண்டனை ரத்துசெய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, கன்னியாகுமரி முதல் சென்னை வரை நடைப் பயணம் மேற்கொள்ள இருக்கிறேன்’.''

நானே கேள்வி... நானே பதில்!

- நிலோபர், மதுரை.

''சோனியாவின் சாதனை என்று எதைச் சொல்ல லாம்?''

''பிரதமரையும் ஜனாதிபதிபோல வைத்துஇருப்பதைத்தான்!''

- அ.பேச்சியப்பன், ராஜபாளையம்.

''தமிழக அரசு முன்னோடிகளை எந்த அளவுக்கு மதிக்கிறது?''

''சமீபத்தில் தமிழக அரசு பல விருது களை அறிவித்து அளித்திருக்கிறது. அதில் பெரியார் விருது பெற்றிருப்பவர் ஆதிபராசக்தி வழிபாட்டு மையத்தின் தீவிர பக்தையான விசாலாட்சி நெடுஞ்செழியன்.''

- எழிலன், விழுப்புரம்.

''சுதந்திரத்துக்கும் விடுதலைக்கும் என்ன வித்தியாசம்?''

''உங்க மனைவியை லீவுக்கு ஊருக்கு அனுப்பிவெச்சா, உங்களுக்குக் கிடைக்கிறது சுதந்திரம். உங்க மனைவிக்குக் கிடைக்கிறது, விடுதலை!''

- கி.ரவிக்குமார், நெய்வேலி.

''பழக்கதோஷம் என்றால் என்ன?''

''எப்படியும் க்ளைமாக்ஸில் வில்லன் தோற்று ஹீரோதான் ஜெயிப்பார் என்று தெரிந்திருந்தும், இந்திய சினிமா தோன்றிய 80 ஆண்டுகளுக்குப் பின்னும் தியேட்டர் சீட் நுனியில் துடிக்கும் ரசிக சுபாவம்!''

- மல்லிகா அன்பழகன், சென்னை-78.

நானே கேள்வி... நானே பதில்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism