Published:Updated:

ஜன்னல்!

ரைட்டர்

ஜன்னல்!

ரைட்டர்

Published:Updated:
##~##

பிரபு-நயன்... பிரிவு நிஜமா?    

 'பிரபுதேவா - நயன்தாரா’ காதல் யுத்தத்தில் இது பிரிவு அத்தியாயம்! அக்ஷய்குமார் நடிக்கும் இந்திப் படப்பிடிப்பு காரணமாக மும்பையில் தங்கியிருந்தார்களாம் பிரபுதேவாவும் நயன்தாராவும். அம்மா, அப்பா வைப் பார்ப்பதாகச் சொல்லி பிரபு அடிக்கடி சென்னைக் குப் பறந்து வந்திருக்கிறார். அப்படியான ஒருநாளில் நயன்தாரா யதேச்சையாக பிரபுதேவாவின் பெற்றோரை தொலைபேசியில் அழைத்துப் பேசியிருக்கிறார். அவர்களோ, 'நேத்துக் காலையில வந்தான். பத்து நிமிஷம்தான் இருந்தான். அப்புறம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜன்னல்!

ஆளே காணோமே! அங்கே வரலையா?’ என்றனராம். விசாரித்தால், சென்னையில் ரம்லத்தையும் மகனையும் சந்திக்கத்தான் பிரபுதேவா சென்னை வந்து செல்கிறார் என்பது தெரியவந்திருக்கிறது. மும்பை திரும்பிய பிரபுதேவா விடம், 'உனக்காக நான் சினிமாவே வேணாம்னு உதறிட்டு நிக்கிறேன். நீ இன்னும் அவங்களோட டச்ல இருக்கியா?’ என்று வெடித்தாராம் நயன்தாரா. அதன் தொடர்ச்சியே இந்தப் பிரிவு என்கிறார்கள்.

ஒரு மாசமாக இருவருக்கும் பேச்சுவார்த்தை இல்லையாம். தெலுங்கில் நாகார்ஜுனாவுடன் ஒரு படம், தமிழில் அஜீத்துடன் ஒரு படம் எனப் பரபரப்பாக இருக்கிறார் நயன். மீண்டும் இருவரும் இணைவது அவர்களுக்கு இடையிலான அன்பின் அடர்த்தியைப் பொறுத்தது!

ஓவிய சுனாமி!

ஜன்னல்!

சென்னைக்குப் புத்தகக் கண்காட்சிபோல பெங்களூருக்கு ஓவியக் கண்காட்சி! தொடர்ந்து ஒன்பதாவது ஆண்டாக ஓவியக் கலைஞர்களைக் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறது சித்ரகலா பரிஷத்.

பெங்களூரு குமாரகுருபா சாலையில் ஓவியர்கள், தங்கள் படைப்புகளைச் சாலையோரம் அரங்கேற்றி வைத்திருந்தார்கள். மதங்கொண்ட களிறு, சினங்கொண்ட புலி, சிற்றாடை களைந்த ஓரினச் சேர்க்கையாளர்கள், திருநங்கைகளின் வேதனைகள், மாறாத ஈழத்துச் சோகம் என உலகை ஒரு தெருவுக்குள் அடக்கியிருந்தார்கள். குமாரகுருபா சாலை என்பது சென்னை போயஸ் கார்டன் ஏரியா போன்றது. முதல்வர் சதானந்த கவுடா தொடங்கி முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, குமாரசாமி, மத்திய அமைச்சர்கள் எஸ்.எம்.கிருஷ்ணா, வீரப்ப மொய்லி, நடிகர்கள் ராஜ்குமார், புனித் ராஜ்குமார் என வி.ஐ.பி-க்களின் வீட்டுச் சுவர்கள் எல்லாம் தூரிகைகளாக மாறி இருந் தன. கடந்த ஞாயிறன்று ஒரு நாள் மட்டுமே விற்பனை

ஜன்னல்!

3 கோடியைத் தாண்டியதாம்!

சைஸ் ஜீரோ வள்ளி!

ஜன்னல்!

கடந்த டிசம்பர் 14-ம் தேதி துவங்கிய முதுமலை யானைகள் புத்துணர்வு முகாம் 48 நாட்களுக்குப் பிறகு திங்கள் அன்று நிறைவுபெற்றது. திருநெல்வேலி அழகிய நம்பியார் கோயில் யானை குருங்குடி வள்ளிக்கு எடை கூடுதல் பிரச்னை இருந்தது. நான்கரை டன் எடையுடன் நடக்க முடியாமல் சிரமப்பட்டாள் வள்ளி. முகாமில் 150 கிலோ எடை குறைந்து ஸ்மார்ட் ஆகி இருக்கிறாள் வள்ளி. ஸ்ரீரங்கத்து ஆண்டாளோ மவுத் ஆர்கன் வாசிக்கப் பழகியிருக்கிறாள்!

கோடி பெருசா... லட்சம் பெருசா?

ஜன்னல்!

'தானே’ நிவாரண நிதியாக மின்சார வாரியம் எட்டு கோடி, டாஸ்மாக் சார்பில் ஏழு கோடி, எம்.ஏ.எம். ராமசாமி ஒரு கோடி எனக் கோடிகளில் முதல்வருக்கு நிதி குவிய, ரஜினி தன் பங்குக்கு 10 லட்சம் ரூபாய் நிதியை முதல்வரைச் சந்தித்துக் கொடுத்திருக்கிறார். மற்றவர்கள் கோடிகளில் நிதியளிக்கும்போதுகூட குவியாத மீடியா, ரஜினி கோட்டைக்கு வந்தபோது குவிந்துவிட்டது. அந்தச் சமயம் பார்த்து சிலி நாட்டு செனட் தூதர் குயிடோ கிரார்டி கூட்டத்தில் சிக்கிக் கொள்ள... அவரை வைத்து மீடியா நபர்கள் மைக் டெஸ்ட் செய்தது செம காமெடி!

ஜன்னல்!