Published:Updated:

நானே கேள்வி... நானே பதில்!

ராமனின் அசோகவனம்!

நானே கேள்வி... நானே பதில்!

ராமனின் அசோகவனம்!

Published:Updated:
##~##

''இப்போது உள்ள ஆண்கள் ராமன்களா, ராவணன்களா?''

 ''உண்மையைச் சொல்லப்போனால், ராமனும் ராவணனும் வேறுவேறாக இல்லை. ஒரே ஆணின் வெவ்வேறு பிம்பங்கள்தான் அவர்கள். மறைந்த ஈழத்துக் கவிஞர் செல்வியின் கவிதை இது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'அசோகவனங்கள்
அழிந்துபோய்விடவில்லை.
இந்த வீடே
எனக்கான அசோகவனமாயுள்ளது.
ஆனால், சிறைப்பிடித்தது ராவணனல்ல ராமனேதான்.
ராமனே ராவணனாய்
தனது அரசிருக்கையில் முதுகுப்புறமாய்
முகமூடிகளை மாற்றிக்கொண்டதைப்
பார்க்க நேர்ந்தன கண்கள்
இதயம் ஒருமுறை அதிர்ந்து நின்றது!''’

- லாவண்யா, திருப்பூர்.

''சச்சின் 100-வது சதம் அடிப்பாரா, மாட்டாரா?''

''அவர் 100-வது சதம் அடிப்பதற்குள் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 100 ரூபாயாக உயர்த்திவிட வேண்டும் என்று மன்மோகன் சிங் முயற்சிப்பதாகக் கேள்வி. ஆக, இப்போது போட்டி சச்சினுக்கும் மன்மோகனுக்கும்தான்!''

- ஜெ.கண்ணன், சென்னை-101.

நானே கேள்வி... நானே பதில்!

''எப்போதும் புகழ் வெளிச்சத்தில் இருப்பதைப் பார்க்கும்போது என்ன தோன்றும்?''

''ரோசா பார்க்ஸ் நினைவுக்கு வருவார். அமெரிக்காவைச் சேர்ந்த கறுப்பினப் பெண்மணி அவர். தையலகத்தில் பணிபுரிந்த ஏழைப் பெண். 1950-களில் அமெரிக்கப் பேருந்துகளில் வெள்ளையர்கள் ஏறினால், இருக்கையில் அமர்ந்து இருக்கும் கறுப்பர்கள் எழுந்து இடம் கொடுக்க வேண்டும். அந்தக் கறுப்பர்கள் பெண்களாக, முதியவர்களாக, கர்ப்பிணிகளாக இருந்தாலும் இதே நிலைதான். முதன்முதலாக அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த கறுப்பினப் பெண்மணி ரோசாதான். இது தொடர்ச்சியாக கறுப்பர்கள் தங்கள் உரிமைகளை முன்னெடுக்கவும் காரணமாக இருந்தது.

ஜூனியர் மார்ட்டின் லூதர் கிங் அரசியலில் முன்னுக்கு வர வழிவகுத்தவர், பேருந்துகளில் கறுப்பர்களுக்கும் வெள்ளையர்களுக்கும் சம உரிமை என்ற நீதிமன்றத் தீர்ப்பு வரக் காரண மாக இருந்தவர் என்று பல பெருமைகள் ரோசா பார்க்ஸுக்கு உண்டு. அமெரிக்கப் பத்திரிகைகள் தொடர்ச்சியாக அவரைப் பற்றி எழுதிக்கொண்டு இருந்தாலும், அவர் அமைதியாக 20 ஆண்டுகள் ஒரு சிறிய நகரத்தில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தார். இப்படித்தான் சில சாதாரண மனிதர்கள் வரலாற்றுத் தேரின் வடம் பிடித்து நகர்த்திவிட்டு, தன்னடக்கத்துடன் ஒதுங்கிக்கொள்கிறார்கள்!''

- விஜிலா தேரிராஜன், அருப்புக்கோட்டை.

நானே கேள்வி... நானே பதில்!