Published:Updated:

ஃபேஷன் பிராண்டு தூதராக மகேந்திர சிங் தோனி ஒப்பந்தம்!

கானப்ரியா
ஃபேஷன் பிராண்டு தூதராக மகேந்திர சிங் தோனி ஒப்பந்தம்!
ஃபேஷன் பிராண்டு தூதராக மகேந்திர சிங் தோனி ஒப்பந்தம்!

ஆண்களுக்கான பிரத்யேக ஆடை வடிவமைப்பில் இந்தியாவின் முன்னணி பிராண்டான `இந்தியன் டெரைன்', அதன் பிராண்டு தூதராக மகேந்திர சிங் தோனியை ஒப்பந்தம் செய்திருக்கிறது. இந்த நிகழ்வின்போது, `` `இந்தியன் டெரைனின்' பிராண்டு தூதராக இருப்பதில் நான் பெருமகிழ்ச்சியடைகிறேன். சென்னை மக்கள் என் மீது வைத்திருக்கின்ற அளவில்லாத அன்பும், உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொண்டிருக்கும் பாச உணர்வும் என் வாழ்நாளில் அவர்கள் தனித்துவமான இடத்தைப் பெற்றிருக்கின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே. அதனால், சென்னையில் தொடங்கப்பட்ட இந்தியன் டெரைனுடன் இணைந்து செயல்படுவது இயற்கையான நிகழ்வு என்றே நினைக்கிறன். விளையாட்டு மைதானத்துக்கு வெளியே இருக்கும் என் ஸ்டைலை இந்த பிராண்டு மிகவும் நேர்த்தியாகப் பிரதிபலிக்கிறது" என்று பகிர்ந்துகொண்டார் மாஹி.

ஃபேஷன் பிராண்டு தூதராக மகேந்திர சிங் தோனி ஒப்பந்தம்!

இந்தியன் டெரைன் நிறுவனர் வெங்கி ராஜகோபால், `` `ஸ்பிரிட் ஆஃப் மேன்’ என்ற லோகோவை எங்கள் பிராண்டு கொண்டிருக்கிறது. முக்கியமான நேரங்களில் மிகச்சிறப்பாகச் சிந்திக்கும் திறன், அமைதியான மனவுறுதி மற்றும் கிரிக்கெட் மைதானத்துக்கு உள்ளேயும்  வெளியேயும் ஆற்றலை வெளிப்படுத்தும் செயல்திறன் என இந்த லோகோ பிரதிபலிக்கும் அத்தனை பண்புகளையும் கொண்டு நிஜ வாழ்க்கையில் நல்ல முன்னுதாரணமாக இருக்கிறார் மாஹி" என்று கூறினார்.

Vikatan