Published:Updated:

நானே கேள்வி... நானே பதில்!

தமிழா? தமிழனா?

பிரீமியம் ஸ்டோரி
##~##
''தமிழால் தமிழர்கள் வாழ்கிறார்களா, தமிழரால் தமிழ் வாழ்கிறதா?''

''கவிஞர் வைரமுத்துவின் ஆயிரம் திரைப்படப் பாடல்கள் புத்தக வெளி யீட்டு விழாவில் பேச்சைத் தொடங்கும் போது கருணாநிதி இப்படித் தொடங்கினார். 'தி.மு.க ஆட்சி மத்திய அரசால் கலைக்கப்பட்டபோது, வைரமுத்து அதைப்பற்றி ஒரு கவிதை எழுதி இருந்தார். 'அடியே அனார்கலி உனக்குப் பிறகு உயிரோடு புதைக்கப்பட்டது ஜனநாயகம்தானடி’ என்று. அதைப் படித்த நான், 'இப்படி ஒரு கவிதை கிடைக்கும் என்றால், எத்தனை முறை வேண்டுமானாலும் ஆட்சியை இழக்கத் தயார்’ என்றேன்!''

இப்படி, வைரமுத்துவின் கவிதைக்காக ஆட்சியை இழக்கத் தயாராக இருந்த கருணாநிதி, ஈழத்தில் கொத்துக் கொத்தாகத் தமிழர்கள் கொல்லப் பட்டபோது ஆட்சியை இழக்க ஏன் தயாராக இல்லை? ஈழத் தமிழர்கள்பற்றி வைரமுத்து எழுதிய நெஞ்சைப் பிளக்கும் கவிதை அவர் படிக்கக் கிடைக்கவில்லையோ?''

- ஆ.இந்துமதி, கொடைக்கானல்.

''குழப்பத்தின் உச்சம் எது?''

''தெலுங்கானா பிரச்னைபற்றி ஆராய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட ஸ்ரீகிருஷ்ணா கமிட்டியின் அறிக்கை. தெலுங்கானா பிரச்னைக்கு ஆறு தீர்வுகளைச் சொல்லி இருக்கும் ஸ்ரீகிருஷ்ணா கமிஷன், அதில் நான்கு யோசனைகள் சாத்தியமற்றவை என்று அதுவே சொல்லிவிட்டது. மீதம் இருக்கும் இரண்டு யோசனைகள், ஒன்றுபட்ட ஆந்திரா வேண்டும் அல்லது ஆந்திரா பிரிக்கப்பட்டு, தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட வேண்டும். இதுதான் எல்லோருக்குமே தெரியுமே. 'அந்த ஒண்ணுதாண்ணே இது’ என்று கரகாட்டக்காரன் செந்தில்போல சொல்வதற்கு ஒரு கமிட்டி எதற்கு என்று புரியவில்லை. ஆனால் ஒன்று, கிருஷ்ணா கமிட்டியின் அறிக்கை ஒரு நாட்டுப்புறப் பாடலை நினைவுபடுத்தியது, 'மூணு குளம் வெட்டிவெச்சான், அதிலே ரெண்டு குளம் பாழாப்போச்சு, ஒரு குளத்திலே தண்ணியே இல்லை!''’

- அனிதா, கம்பம்.

''அரசியல்வாதிகளுக்கும் வியாபாரிகளுக்கும் என்ன வித்தியாசம்?''

''அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக எத்தனை ரெய்டுகள், சி.பி.ஐ விசாரணை நடந்தாலும், 'ரெய்டாவது வெங்காயமாவது’ என்று அலட்சியமாக இருப்பார்கள். ஆனால், வியாபாரிகளோ வெங்காய ரெய்டு நடந்தாலே பதறிப்போவார்கள்!''

- க.மணிமேகலை, சென்னை-18.

நானே கேள்வி... நானே பதில்!

'' 'கட்டாய மத மாற்றத் தடைச் சட்டத்தை நீக்கியதே தான்தான்’ என்று பிடிவாதம் பிடிக்கிறாரே ஜெயலலிதா?

''உண்மைதான். மத மாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டுவந்ததும் அவர்தான், தேர்தல் தோல்விக்குப் பிறகு நீக்கியதும் அவர்தான்!''

- அ.சுகுமார், காட்டுக்கானூர்.

''ஆ.ராசாவை ராஜினாமா செய்யவைத்து தி.மு.க ஜனநாயக ரீதியில் உயர்ந்துவிட்டது'' என்கிறாரே கி.வீரமணி?''

''நல்லவேளை... 'எல்லாக் கட்சிகளும் ஜனநாயக ரீதியில் உயர வேண்டுமானால், ஊழலில் ஈடுபட்டு, பிறகு ராஜினாமா செய்ய வேண்டும்’ என்று சொல்லவில்லையே. அதுவரையில் சந்தோஷப்படுங்கள்!''

- பா.ஜெயக்குமார், வந்தவாசி.

நானே கேள்வி... நானே பதில்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு