Published:Updated:

`ரஜினி அரசியலுக்கு வந்து, பூரண நலத்துடன் இருக்க வேண்டும்!' - சிதம்பரத்தில் ரசிகர்கள் சிறப்பு யாகம்

`ரஜினி அரசியலுக்கு வந்து, பூரண நலத்துடன் இருக்க வேண்டும்!' - சிதம்பரத்தில் ரசிகர்கள் சிறப்பு யாகம்
`ரஜினி அரசியலுக்கு வந்து, பூரண நலத்துடன் இருக்க வேண்டும்!' - சிதம்பரத்தில் ரசிகர்கள் சிறப்பு யாகம்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ரஜினி ரசிகர்கள் `அவர் அரசியலுக்கு வர வேண்டும், நீண்ட ஆயுளுடனும், பூரண நலத்துடன் வாழ வேண்டும்' எனச் சிறப்பு யாகம் நடத்தினார்கள். இந்த யாகத்தில் ரஜினியின் சகோதரர் சத்தியநாராயணராவ், அவரது உறவினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

`ரஜினி அரசியலுக்கு வந்து, பூரண நலத்துடன் இருக்க வேண்டும்!' - சிதம்பரத்தில் ரசிகர்கள் சிறப்பு யாகம்

ரஜினி ரசிகர்கள் ஏற்பாடு செய்திருந்த இந்த யாகம் நடராஜர் கோயிலில் இன்று இரண்டாம் கால பூஜை ருத்திர அபிஷேகம் நடக்கும்போது நடந்துள்ளது. நடராஜர் கோயில் தீட்சிதர்கள் இந்த ஆயுள் விருத்தி ஹோமத்தை நடத்திவைத்தனர். பின்னர் யாகத்தின் முடிவில் ஏழைகளுக்கு வேட்டி, சட்டை மற்றும் அன்னதானமும் வழங்கப்பட்டது. 

யாகம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் ரஜினி சகோதரர் சத்தியநாராயணராவ் பேசுகையில், ```அனைவரும் நன்றாக வாழ வேண்டியும், எல்லோரும் பூரண உடல் நலம்பேண வேண்டியும் ரஜினி ரசிகர்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, இந்த யாகத்தில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. நாடும், மக்களும் நன்றாக இருக்க வேண்டும். சீக்கிரம் மழை பெய்து தண்ணீர்ப் பஞ்சம் தீர வேண்டும் என்ற நோக்கில்தான் இந்த யாகம் நடந்தது. ரஜினி அரசியல் கட்சி தொடங்குவது, முதல்வராக வருவது எல்லாம் தெய்வத்தின் செயல். கர்நாடக அணைகளிலும் போதிய தண்ணீர் இல்லை, அங்கும் 3 நாள்களுக்கு ஒரு முறை வண்டிகளில் தண்ணீர் கொடுக்கப்படுகிறது. தமிழகத்துக்குத் தண்ணீர் திறப்பது குறித்து முடிவு செய்துள்ளனர், அதனால் விரைவில் தண்ணீர் வரும்'' என்றார்.        

Vikatan