. ''எ.ன் அம்மா, 'மேக்மில்லன்’ பத்திரிகைக்கு எடிட்டரா இருந்தவங்க. அதனால, சின்ன வயசில் இருந்தே தினம் ஒரு ஆங்கில நாவல் படிக்கணும்னு கண்டிப்பு காட்டுவாங்க. சாயங்காலம் வீட்டுக்கு வந்ததும் நாவலில் இருந்த புது வார்த்தைகளுக்கு அர்த்தம் கேட்பாங்க. அப்போவெல்லாம் கோபமா வரும். ஆனா, அந்தப் பழக்கம்தான், இப்போ தமிழ் மொழியின் அழகை பிற நாட்டு மக்களிடம் காட்சிப்படுத்த உதவுதுன்னு நினைக்கிறப்போ சந்தோஷமா இருக்கு!''- முகம் மலர்ந்து சிரிக்கிறார் ரேக்ஸ். .
உலகத் திரைப்பட விழாக்களில் தமிழ்ப் படங் களுக்குப் பிற மொழி சப்-டைட்டில்கள் அமைக்கும் தமிழச்சி. 'விண்ணைத் தாண்டி வருவாயா’, 'எந்திரன்’, 'மைனா’, 'தென்மேற்கு பருவக்காற்று’ என்று உள்ளூரில் முத்திரை பதித்த சினிமாக்கள் உலக அரங்கில் 'சப்- டைட்டிலுடன்’ உலா வர... துணைக்கு அழைப்பது ரேக்ஸின் திறமையை!

''ஒளிப்பதிவாளர் மது அம்பட்டின் அறிமுகம்தான் எனக்குள் இருந்த திறமையை எனக்கு அறிமுகப் படுத்தியது. என் மொழிபெயர்க்கும் திறனைப் பாராட்டி, 'இதைவெச்சு தமிழ் சினிமாவுக்கு ஏதாவது நல்லது செய்’னு வழிகாட்டினார். என்னைப்பத்தி கேள்விப்பட்டு கௌதம் வாசுதேவ் மேனன்'விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்துக்கு சப்-டைட்டில் எழுதக் கூப்பிட்டார். ஆர்வமா, உற்சாகமா முழு உழைப்பைக் கொட்டி சப்-டைட்டில் எழுதினேன். தமிழே தெரியாத மும்பைப் பையன் படம் பார்த்துட்டு, என் நம்பர் தேடிக் கூப்பிட்டு 'அருமையான சப்- டைட்டில்’னு மனசாரப் பாராட்டினான். அடுத்து கிடைச்ச பம்பர் பரிசு... 'எந்திரன்’!

அந்தப் படத்துக்கு சப்-டைட்டில் எழுதி முடிக்கிற வரைக்கும் 25 நாள் எனக்குத் தூக்கமே இல்லை. அதிலும் வைரமுத்துவின் இலக்கிய வார்த்தைகள் பெரிய சவால். 'காதல் அணுக்கள்’ பாடலில் 'செந்தேனில் ஒசாபி’ங்ற வார்த்தைக்கு அர்த்தமே

தெரியலை. ஒருவழியா 'ஒசாபி’ என்பது ஜப்பானிய வகை காரச் சட்னின்னு கண்டுபிடிச்சேன். இப்போ ஆங்கிலப் படங்களைத் தமிழில் மொழிபெயர்க்கவும் வாய்ப்பு கிடைக்குது! தரமான தமிழ்ப் படங்கள் தேசிய அளவில் விருதுகளைத் தவறவிடுவதற்கு மோசமான மொழிபெயர்ப்பில் அமைந்த 'சப்- டைட்டில்’களும் ஒரு காரணம். அதை முடிந்த அளவுக்கு நிவர்த்தி செய்யணும். தமிழையும் தமிழ் சினிமாக்களையும் இன்னும் பெரிய அங்கீகார மேடைகளுக்குக் கொண்டுபோகணும்!'' என்கிறார் ரேக்ச்!