Published:Updated:

கல்யாணச் செய்திகள் வாசிப்பது பிரியா!

க.நாகப்பன்படங்கள் : அ.ரஞ்சித்

கல்யாணச் செய்திகள் வாசிப்பது பிரியா!

க.நாகப்பன்படங்கள் : அ.ரஞ்சித்

Published:Updated:

அன்புக்கு நான் அடிமை!

கல்யாணச் செய்திகள் வாசிப்பது பிரியா!

ன் மியூஸிக் 'நினைத்தாலே இனிக்கும்’ நிகழ்ச்சியை இனிக்கச் செய்யும் கொஞ்சல் குரல் சூர்யாவின் பெர்சனல் பக்கம் முழுக்கவே வருத்த வடுக்கள். 8 வயதில் அப்பாவையும் 18 வயதில் அம்மாவையும் இழந்தவர். ''அம்மா ஆஸ்துமா நோயால் இறந்ததும் ஏரோநாட்டிகல் இன்ஜினீயரிங் படிப்புக்கு முழுக்குப் போட்டுட்டேன். சேனல் காம்பியர் ஆகணும்னு நாலு வருஷம் போராடி, சன் மியூஸிக்கில் சேர்ந்தேன். 9,000 பேர் கலந்துக்கிட்ட ஆடிஷன்ல தேர்வான மூணு பேரில் நானும் ஒருவன். கோபிநாத், அப்துல் ஹமீதின் தமிழ்தான் எனக்கான உரம். இசை, ஓவியம், நடனம், நாடகம், நடிப்பு, கவிதைனு இன்னும் பல தளத் திறமைகளும் உண்டு. 'காதல் விற்பனைக்கல்ல’னு ஒரு கவிதைத் தொகுப்பு வெளியிடப்போறேன். ரெண்டு வருஷத்துக்குத் தேவையான காஸ்மெடிக் பொருட்களை அனுப்பிய மலேசிய நேயர் சுலேகா, தினம் தினம் பெயின்டிங்ஸ், ஆடைகள்னு பரிசு அனுப்பும் நேயர்கள் ஆகியோரின் அன்புக்கு நான் அடிமை!'' - நெகிழ்கிறார் சூர்யா.

கல்யாணச் செய்திகள் வாசிப்பது பிரியா!  

கல்யாணச் செய்திகள் வாசிப்பது பிரியா!

'என் பெயர் மீனாட்சி’ சீரியல் பிரியா இப்போது புதிய தலைமுறையின் செய்தி வாசிப்பாளர். ''எம்ப்ராய்டரி, பிளவுஸ் டிசைனிங், மணப் பெண் மேக்-அப், லவ் பேர்ட்ஸ் வளர்ப்புனு பல தளங்களில் இயங்கிட்டு இருப்பேன். பேங்க் வேலைக்காக நேர்முகத் தேர்வுக்குப் போனப்போ, என்னை இன்டர்வியூ செய்தார் பிரின்ஸ். அந்த வேலைக்கு நான் பொருத்தம் இல்லைனு அவர் என்னைத் தேர்ந்தெடுக்கலை. ஆனா, அவரோட லைஃப் பார்ட்னரா கச்சிதமா பொருந்துவேன்னு நினைச்சுக் காதல் சொன்னார். கூட்டிக் கழிச்சுப் பார்த்தேன்... கணக்கு சரியா வந்துச்சு. சீக்கிரம் கல்யாணத் தேதி சொல்றேன்!'' - வெட்கப் புன்னகை பூக்கிறார் பிரியா.

கோடி விளையாட்டு!

விஜய் டி.வி-யின் 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ கேம் ஷோவுக்குப் போட்டியாக கோடி விளையாட்டை ஆரம்பித்திருக்கிறது சன் டி.வி. '100 கோடியைக் கையில் கொடுக்கிறோம். விளையாட வாருங்கள்!’ என்ற சன் டி.வி-யின் விளம்பரங்கள் சேனல் வட்டாரத்தில் செம ஜிவ்வ்வ். சூர்யாவுக்குப் போட்டியாக விக்ரம் அல்லது தனுஷ் இருவரில் ஒருவர் களம் இறங்கலாமாம். இப்போதைய நிலவரப்படி விக்ரமே நிகழ்ச்சியைத் தொகுக்கலாம் என்கிறார்கள். உங்களில் யாரோ தெரியாது... ஆனால், நிச்சயம் இவர்கள் இருவரும் கோடீஸ்வரர்கள்தான்!

இலக்கு 500...

கல்யாணச் செய்திகள் வாசிப்பது பிரியா!

ஸ்.எஸ். மியூஸிக்கின் மிமிக்ரி காம்பியர் ஜெ.பி.குமார் அசராமல் 350 குரல்களில் பேசி அசத்துகிறார். ''அப்பா ஜெயராமன் தேங்காய்க் கடைவெச்சிருந்தார். கடைக்கு வர்றவங்க கிட்ட அவர் கதை சொல்வார். சிங்க கர்ஜனை, புலி உறுமல், பறவைகள் சப்தம், மனிதர்களின் குரல்கள்னு அவர் பேசுறதுதான் மிமிக்ரினு அவருக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது. அப்பாகிட்ட கத்துக்கிட்ட வித்தையை எழும்பூர் அரசு கவின்கலைக் கல்லூரி மேடையில் வெளிப்படுத்தியபோது, கொண்டாடினாங்க. தனி நிகழ்ச்சி, 'கலக்கப்போவது யாரு’னு ஆரம்பிச்சு, இப்போ முழு நேர காம்பியர் ஆகிட்டேன். 500 குரல்கள்ல பேசி கின்னஸ் சாதனை செய்யணும். அதுக்காக நிறைய பயிற்சி எடுத்துட்டு இருக்கேன். நோட் பண்ணிக்கோங்க... 2013 கின்னஸ்ல என் பெயர் இருக்கும்!'' - நம்பிக்கை மிளிர்கிறது குமாரின் புன்னகையில்!

கிருஷ்ணா வந்தாச்சு!

கல்யாணச் செய்திகள் வாசிப்பது பிரியா!

லைஞர் டி.வி. 'உறவுக்குக் கை கொடுப்போம்’ சீரியலில் 'தீ... தமயந்தீ’ என்று வசனம் பேசி வில்லத்தனம் செய்யும் காயத்ரி ப்ரியா, சமீபத்தில் ஆண் குழந்தைக்கு அம்மா ஆகி இருக்கிறார். ''கர்ப்பமா இருந்ததால தேடி வந்த எல்லா சீரியல் வாய்ப்புகளையும் வேணாம்னு சொல்லிட்டேன். இதோ கிருஷ்ணா வந்துட்டான். இனிமே செகண்ட் இன்னிங்ஸ் ஆரம்பிச்சுரலாம். இவ்ளோ நாள் விளையாட்டா இருந்துட்டேன். இப்போதான் கொஞ்சம் பொறுப்பு வந்திருக்கு. நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டு இருக்கேன். 'குழந்தைகள் பூக்களைப் போன்றவர்கள். அவர்களை மென்மையாகக் கையாள வேண்டும்’னு ஒரு புத்தகத்துல படிச்சேன். என் ராஜாவை நான் பூ மாதிரியே பார்த்துப்பேன்!'' என்று காயத்ரி ப்ரியா சொல்ல, 'ங்கா’ என்று உம்மா கொட்டுகிறான் கிருஷ்ணா!

''சைக்கோன்னா ஓ.கே!''

கல்யாணச் செய்திகள் வாசிப்பது பிரியா!

'அம்முவாகிய நான்’ பாரதியை ஞாபகம் இருக்கிறதா? திருமதி பாரதியும் இப்போது சீரியலில் கரை ஒதுங்கிவிட்டார். ஜெயா டி.வி. 'ருத்ரம்’ தொடரில் பத்திரிகையாளர் வேடத்தில் நடிப்பவர், ''கல்யாணம், குழந்தைனு செட்டில் ஆன பிறகு, சீரியல்தானே நமக்குச் சரி!?’ என்று சிரிக்கிறார். ''வழக்கமா எமோஷனல், சென்ட்டிமென்ட், பிளாக்மெயில் இல்லாத சீரியல் இது. இயல்பான காட்சிகள், ஷார்ப் வசனம், மிரட்டல் ட்விஸ்ட் இருந்ததாலதான் நடிக்கச் சம்மதிச்சேன். சினிமாவிலும் நெகட்டிவ் அல்லது சைக்கோ கேரக்டர் கிடைச்சா சூப்பரா பண்ணுவேன். என் பையன் ஹரிக்கு கிரிக்கெட்னா உயிர். சச்சின் மாதிரி அவனை பெஸ்ட் ப்ளேயர் ஆக்கணும்!''- பூரிக்கிறார் பாரதி.