'' 'பெயரில் என்ன இருக்கிறது?’ என்று சிலர் சொல்வது சரிதானா?''

''பெரியாரின் தளபதியாக விளங்கியவர் பட்டுக்கோட்டை அழகிரி. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது தமிழகம் முழுக்க சூறாவளியாகச் சுழன்று பிரசாரம் செய்தவர். தன் கூட்டங்களில் கடும் எதிர்ப்புகளையும் தாக்குதல்களையும் சந்தித்தவரும்கூட. ஒருமுறை அப்படி அழகிரியும் அவர் தோழர்களும் பிரசாரப் பயணம் போகும்போது, ஓர் ஊரில் செருப்புகளைத் தோரணமாகக் கட்டி 'வரவேற்பு’ கொடுத்திருந்தார்கள் இந்தித் திணிப்பு ஆதரவாளர் கள். அப்போது அழகிரி பேசினாராம், 'உனக்கும் எனக்கும் சொந்தமான நம் தமிழுக்கு வருகின்ற கேட்டை எதிர்த்து இந்தக் கொளுத்துகிற வெயிலில் பாதங்கள் கொப்பளிக்க நாங்கள் நடக்கிறோம். தோழனே! நீ தோரணமாய்க் கட்டியிருக்கிற செருப்புகளை எங்கள் மீது தூக்கி வீசி எறிந்திருந்தால், அதை எங்கள் காலில் போட்டுக்கொண்டாவது நடந்திருப்போம்!’ என்று. செருப்புத் தோரணம் கட்டியவர்கள் அதைக் கழற்றி எறிந்துவிட்டு, கண்ணீர் மல்க மன்னிப்புக் கேட்டார்களாம். அந்த அழகிரியின் பெயர் யாருக்கு வைக்கப்பட்டு இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரிந்தால், உங்கள் கேள்விக்கான பதிலும் உங்களுக்குப் புரிந்திருக்கும்!''

- பூங்குழலி, கம்பம்.

''ஒரு கவிதை எப்படி இருக்க வேண்டும்?''

''ஆன்மாவை இறக்கிவைத்ததாக இருக்க வேண்டும். அப்படி ஒரு கவிதையைச் சமீபத்தில் வாசித்தேன். இஸ்ரேல் வீரன் ஒருவனின் ரப்பர் குண்டுகளால் சுடப்பட்ட ரஷா ஹெவ்சியே என்ற நான்கு வயது பாலஸ்தீனக் குழந்தையைப் பற்றி பெண் கவிஞர் ஹனால் மிகைல் அஷ்ரவி எழுதிய கவிதை இது. அந்தக் குழந்தையின் வலியை அப்படியே பிரதிபலிக்கிறது.

'நாளை கட்டை அவிழ்ப்பார்கள்.
எனக்கு யோசனையாக இருக்கிறது.
எஞ்சியிருக்கும் என் ஒற்றைக் கண்ணால்
ஆப்பிள் பழத்தின்
ஒரு பாதியை மட்டும்தான்
என்னால் பார்க்க முடியுமா?
துப்பாக்கிக் குண்டை நான் பார்க்கவில்லை.
என் தலைக்குள் வெடித்த
அதன் வலியை மட்டுமே உணர்ந்தேன்.
பெரிய துப்பாக்கியுடன்
நடுங்கும் கைகளுடன்
கண்களில் ஒரு வெறித்த பார்வையுடன்
அந்த ராணுவ வீரன் என் மனதில்
அழியாதிருக்கிறான்.

நான் கேள்விப்பட்டேன்
ஒன்பது மாதக் குழந்தை ஒன்றும்
ஒற்றைக் கண்ணை இழந்ததாக.

நானோ வளர்ந்தவள்.
கிட்டத்தட்ட நாலு வயது.
போதிய அளவு
நான் வாழ்க்கையைப் பார்த்துள்ளேன்.
ஆனால் அவளோ சின்ன குழந்தை.
எதுவும் அறியாச் சின்ன குழந்தை!’ ''

- எஸ்.சேதுகுமாரிஅம்மையப்பன், துவரங்குறிச்சி.