
''அரசியல்வாதிகளின் அட்டூழியங்களையும் ஊழல் குற்றச்சாட்டுகளையும் பார்த்தால், வரவர நம்பிக்கை குறைந்துகொண்டே போகிறதே?''
''மனம் தளராதீர்கள். ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் தானே தொடர்ந்து ஆஜர் ஆவதற்காக கர்நாடகத் தலைமை வழக்கறிஞர் என்ற பதவியைத் தூக்கி எறிந்த ஆச்சார்யா போன்றவர்களை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ஆச்சார்யா... உண்மையில் ஆச்சர்யாதான்!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
- வே.சித்திரவேலு, கருப்பம்புலம்.
'' 'சட்டசபையில் கையை நீட்டி, நாக்கைத் துருத்திப் பேசக் கூடாதுனு சட்டம் எதுவும் இருக்கா?’னு கேட்கிறாரே கேப்டன்?''
''சட்டசபையில் அன்று கோபத்தின் உச்சகட்டத்தில் நடந்துகொண்டதைவிட, நிதானமாக இன்று நீங்கள் கேட்கும் 'கேள்வி’ இன்னும் டேமேஜிங்கா இருக்கு கேப்டன்!''
- ஆர்.கே.சுந்தரம், சென்னை-26.
'' 'இருவரின் விருப்பத்துடன் நடைபெறும் ஓரினச் சேர்க்கை குற்றம் ஆகாது’ என்ற நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், 'ஓரினச் சேர்க்கையைச் சமூகம் ஏற்றுக்கொள்ளவில்லை’ என்று மத்திய அரசின் சார்பில் வாதிட்டிருக்கிறாரே கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.பி.மல்கோத்ரா?''
##~## |
''தீண்டாமை ஒழிப்பு என்பதைக்கூடத் தான் சமூகம் ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்காக தீண்டாமை என்பது சட்டப்படி குற்றம் இல்லாமல் ஆகிவிடுமா?''
- முருகேஷ், சேலம்.
''சமீபத்தில் நீங்கள் வியந்த செய்தி?''
''உத்தரப்பிரதேசத்தில் நசுமுதீன் சித்திக் என்ற அமைச்சர் மீது ரூ. 500 கோடிக்கு மேல் சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர் கவனித்து வந்த துறைகள் எத்தனை தெரியுமா? 18. ஒரு இலாகா கொடுத்தாலே, கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கும் அமைச்சர்கள் மத்தியில் அவரும்தான் பாவம் என்ன செய்வார்?''
- நிலவன், கம்பம்.
'தெய்வம் நின்று கொல்லும்’ என்பது உண்மையா?''
''தெய்வம் கொல்கிறதோ இல்லையோ, 'நீதி தாமதமாகவேனும் வெல்லும்’ என்ற நம்பிக்கைதான் இந்த உலகத்தை இயக்கிக்கொண்டு இருக்கிறது. அந்த நம்பிக்கைக்கு மேலும் ஒளி சேர்த்திருக்கிறது ஐ.நா. சபையின் சமீபத்திய நடவடிக்கை. இலங்கை இறுதிப் போரில் போர்க் குற்றங்களில் ஈடு பட்ட இலங்கை ராணுவத்தின் முன்னாள் கமாண்டர் ஷாவேந்த்ரா சில்வா ஐ.நா. அமைதிப் படைக் குழுவில் இருந்து நீக்கப் பட்டு இருக்கிறார். அதுசரி, மயான அமைதியை உண்டுபண்ணியவரை அமைதிப் படைக் குழுவில் சேர்த்தது யாரோ?''
- ஃபாத்திமா, கடலூர்.
