Published:Updated:

நள்ளிரவில் மறுபக்கம்!

க.நாகப்பன், படம்: பொன்.காசிராஜன்

நள்ளிரவில் மறுபக்கம்!

க.நாகப்பன், படம்: பொன்.காசிராஜன்

Published:Updated:

சலசல கலகல அரட்டை அல்லது கெஞ்சும் அழுகை, மிஞ்சும் மிரட்டல் சீரியல் நடிப்பு... ''இவ்வளவுதானா நீங்க...? நாட்டுக்கு ஏதாவது நல்ல மெசேஜ் சொல்லுங்களேன்?'' என்று சேனல் ஏஞ்சல்கள் சிலரிடம் கேட்டேன்...

நள்ளிரவில் மறுபக்கம்!

திவ்யதர்ஷினி: ''எல்லாரும் நல்லாப் படிங்க. நான் இப்பதான் எம்.ஏ. பட்டம் வாங்கினேன். அதுவும் ஆறாவது ரேங்க். நைன்த் படிக்கும்போதே ஷூட்டிங் போக ஆரம்பிச்சிட்டேன். அப்பவே படிப்புக்கு குட் பை சொல்லப் பார்த்தேன். ஆனா, என் டீச்சர்கள்தான் விடாமப் போராடி என்னைப் படிக்கவெச்சாங்க. அண்ணா ஆதர்ஷ்ல பி.ஏ. இங்கிலீஷ், எம்.ஏ. டூரிஸம் அண்டு டிராவல் மேனேஜ்மென்ட் முடிச்சு, இப்போ அதே மேஜர்ல எம்.ஃபில். பண்ணிட்டு இருக்கேன். படிக்கப் படிக்கத்தான் நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுக்க முடியுது. என்னை இவ்வளவு தூரம் படிக்கவெச்ச கீதா, ஜெயஸ்ரீ, ரேவதி, சித்ரா வெங்கி டீச்சர்களுக்கு நன்றியோ நன்றிகள். பொறுமை, அன்பு, உறுதினு அவங்ககிட்ட கத்துக்கிட்ட விஷயங்கள்தான் என்னை வடிவமைச்சு இருக்கு. எப்பவும் நாலு பேருக்கு மட்டும் இல்லை... எல்லாருக்குமே நல்லவங்களா இருப்போம்!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நள்ளிரவில் மறுபக்கம்!

ஸ்ருதி: ''என்கூட 'தென்றல்’ சீரியல்ல நடிச்ச பாட்டி எஸ்.என்.லட்சுமி இறந்துபோனது இன்னமும் துக்கமாவே இருக்கு. ஆயிரம் படங்களுக்கு மேல சொந்தக் குரல்லயே டப்பிங் பேசி நடிச்சவங்க. கடைசிவரை கல்யாணமே பண்ணிக்காதவங்க. அண்ணன் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்தாங்க. சமீபத்துல அவங் களுக்குத் தெரிஞ்ச ஒருத்தருக்கு வேலை போயிடுச்சு. உடனே, எல்லார்கிட்டயும் போன்ல பேசி, 'திறமையான தம்பி... குடும்பஸ்தன்... கஷ்டப்படுறார். ஏதாவது வேலை கொடுங்க’னு கெஞ்சிக் கேட்டு, அவருக்கு ஒரு வேலை வாங்கிக் கொடுத்தாங்க. உதவினு கேட்டு வர்றவங்களுக்கு முடிஞ்சவரை உதவணும்னு கண்ணு முன்னாடி கத்துக்கொடுத்துட்டுப் போயிட்டாங்க பாட்டி. அவங்க இறப்பு 'தென்றல்’ யூனிட்டுக்கே பெரிய இழப்பு!''

நள்ளிரவில் மறுபக்கம்!

மிதுனா: ''சிட்னி ஷெல்டனோட 'தி அதர் சைட் ஆஃப் மிட்நைட்’ நாவல் படிச்சேன். எந்த மனிதரையும் முதல்ல பார்க்கும்போது 'ஹலோ... நல்லா இருக்கீங்களா’னு விசாரிப்போம். அவங்க யார், எப்படிப்பட்டவங்க, என்ன பின்னணியைச் சேர்ந்தவங்கனு தெரியாது. அப்படிச் சந்திக்கிறவங்களை மறுபடியும் சந்திப்போமானுகூடத் தெரியாது. இப்படி ஒரு நாளில் எத்தனையோ பேரைச் சந்திப்போம். இப்படியான ஒரு சந்திப்பில் அறிமுக மான ஒரு ஆணும் பெண்ணும் காதல்ல விழறாங்க. அவங்க இன்னொரு முகம் என்னன்னு கதை அழகா நகரும். மனிதர்கள் மனதில் உள்ள நம்பிக்கை, உண்மைனு நல்ல ட்விஸ்ட்களோடு ரொம்ப சுவாரஸ்யமா இருந்தது. நாம தினமும் சந்திக்கிற ஒவ்வொருத்தரும் முக்கியமானவங்கதான். அவங்ககிட்ட இருந்து அட்லீஸ்ட் ஒரு நல்ல விஷயமாவது கத்துக்கணும்னு மனசுல பதிச்சுக்கிட்டேன். இதை ஏன் நான் திரும்பத் திரும்ப சொல்றேன்னா, நான் இப்போவரை சிங்கிள் தான்!''

நள்ளிரவில் மறுபக்கம்!

நீலிமா ராணி: ''சத்யபாமா பல்கலைக்கழக விழாவுக்கு சிறப்பு விருந்தினராப் போயிருந்தேன். ரங்கோலி போட்டியில் ஒவ்வொரு கோலமும் மனசைத் தொட்டது. பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்கணும். பூமி மாசுபடுவதைத் தவிர்த்து இயற்கையோடு இணைஞ்சு வாழணும், பெண்களைவிட தனியா இருக்கும் குழந்தை கள்தான் அதிகமாப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகுறாங்கனு பல விஷயங் களைக் கோலங்கள் மூலமா பளிச்னு சொல்லியிருந் தாங்க. அடுத்த தலைமுறைக்கு நாம கொடுக்கப்போற பரிசு இன்ஜினீயரிங் சீட்டோ, பத்து மாடிக் கட்டடமோ, கட்டுக் கட்டாப் பணமோ இல்லை... சலசலக்கும் ஓடை, சுத்தமான காற்று, வீதி முழுக்க மரங்கள்னு இயற்கைதான் நாம அவங்களுக் குக் கொடுக்கிற இனிமையான பரிசா இருக்கும்!''  

நள்ளிரவில் மறுபக்கம்!

ரெபேக்கா: ''என் தோழி திவ்யாவோட துபாய் போயிருந்தேன். அங்கே சர்வதேச ஷாப்பிங் திருவிழா. கேமரா, லேப்டாப், டிரெண்டி ஆடைகள்னு அள்ளிக் குவிச்சுட்டேன். துபாய்ல ஆட்டோ, கார், பைக்னு எந்தத் தொந்தரவும் இல்லாம ஊருக்குள் நிம்மதி யாப் பயணிக்கலாம். அங்குஎல்லாம் டிராஃபிக்ல ரெண்டு தடவைக்கு மேல் ஹாரன் அடிச்சா, அவங்க மேல வழக்கே போடலாமாம். 'நோ என்ட்ரி’ல யாரும் போறது இல்லை. அங்கே டிராஃபிக் சட்டங்களை அவ்வளவு  மதிக்கிறாங்க. அரை மணி நேரத்துல ஒரு இடத்துக்குப் போக ணும்னு திட்டம் போட்டா, நிச்சயம் போயிடலாம். குற்றங் கள் ரொம்பக் குறைவு. ஷாப்பிங் பண்ணிட்டு இருக்கும்போது, என் ஹேண்ட் பேக் காணாமப்போயிருச்சு. பதறிட்டேன். அதில்தான் என் பாஸ்போர்ட், விசா, பணம்னு எல்லாமே இருந்துச்சு. அப்புறம் கடையில் இருந்த கேமரா மூலமாக் கண்டுபிடிச்சோம். சென்னையும் இப்படி இருந்தா நல்லா இருக்கும்ல!''

##~##
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism