Published:Updated:

பிடித்த வழியில் பிடியுங்கள்!

கி.கார்த்திகேயன்

பிடித்த வழியில் பிடியுங்கள்!

கி.கார்த்திகேயன்

Published:Updated:
பிடித்த வழியில் பிடியுங்கள்!

நீங்கள் இதை எதிர்கொண்டது உண்டா?

 • உங்கள் பேச்சை யாரும் காது கொடுத்துக் கேட்க மறுக்கிறார்கள். உங்கள் ஐடியாக்களை எவரும் கண்டுகொள்வது இல்லை. உங்களது மிஸ்டு கால்/இ-மெயில்களை மதித்து யாரும் ரிப்ளை செய்வது இல்லை.
   
 • பிறர் சொல்வதை நீங்கள் காது கொடுத் துக் கேட்பது இல்லை. மற்றவர்கள் பேசிக் கொண்டு இருக்கும்போது, அடிக்கடி இடையூறு செய்கிறீர்கள். உங்களுக்கு எது முக்கியமோ, அதை மையப்படுத்தியே ஒரு பேச்சுவார்த்தையைத் தொடங்குகிறீர்கள்!
   
 • பிறருடன் ஒரே விதமாக, உங்களுக்குப் பிடித்த விதத்தில் மட்டுமே தொடர்புகொள் கிறீர்கள்!
   
 • பிறரது உடல்மொழி உங்களுக்குப் புரியவில்லை. பிறர் சொல்லும் வார்த்தைகளுக்கு இடையிலான அர்த்தம் உங்களுக்குப் புரியவில்லை!
   

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நீங்கள் மட்டும் அல்ல... உலகத்தில் ஒவ்வொருவரும் எதிர்கொள்ளும் பிரச்னைகள்தான் மேற்கூறிய அனைத்தும்!

##~##
'தகவல் யுகம்’ என்று பூமிப்பந்து முழுக்க தொலைத்தொடர்புச் சாதனப் பின்னல்கள் இருந்தாலும், இன்றும் ஒவ்வொரு மனிதனும் தனித் தீவாகத்தான் இருக்கிறான். இ-மெயில், செல்போன்,  பேஸ்புக், ஸ்கைப், எஸ்.எம்.எஸ். என்று பிறருடன் தொடர்பு கொள்ளும் சேனல்கள் அதிகரித்ததற்கு ஏற்ப, அவற்றில் சிக்கல்களும் அதிகரித்து இருக் கின்றன. அதை மூன்றே வழிகளில் தீர்க்க வழிகாட்டுகிறது 'டாக் லெஸ், சே மோர்’ (Talk Less, Say More)  புத்தகம். 'கனெக்ட் - கன்வே - கன்வின்ஸ்’  (Connect - Convey - Convince). இந்த மூன்று விதிகளை விரிவாக விளக்கி, அதன் மூலம் உங்கள் 'தகவல் தொடர்புக்  கொள்கை’யைச் செம்மைப்படுத்திக்கொள்ள ஆலோசனை சொல்கிறார் புத்தகத்தின் ஆசிரியர் கானி டைகென்.

தொடர்பு எல்லைக்கு உள்ளே செல்லுங்கள்...

அந்தப் பன்னாட்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டேவிட், நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்கள்குறித்து பல இரவுகள் செலவழித்து ஒரு பிரசன்டேஷன் தயார் செய்து இருந்தார். அலுவலக மீட்டிங்கில் அதில் இருக்கும் பல தகவல்கள் நிறுவனத்தின் சக ஊழியர்களை நிச்சயம் வியப்புக்கு உள்ளாக்கும் என்ற எதிர்பார்ப்புக ளோடு, விரிவாக, மிக விளக்கமாகத்தனது கருத்துகளை முன்வைத்தார். ஆனால், டேவிட்டின் நினைப்புக்கு மாறாக, கருத்தரங்கின் பாதியிலேயே மொபைலைச் சீண்டுவதும் கொட்டாவியை அடக்குவதுமாகப் பலர் இருந்தனர். எளிமையாகவும் சுவாரஸ்யமாகவுமே அந்தத் திட்டங்களை விவரித்தோம் என்பதில் டேவிட்டுக்குச் சந்தேகமே இல்லை. ஆனால், எங்கே எது தப்பு?

விரிவாக, தெளிவாக டேவிட் பேசியது சரிதான். ஆனால், தனது உரையைத் துவக்குவதற்கு முன் அனைவரையும் பார்த்து 'குட் மார்னிங்’ என்று சொல்ல மறந்துவிட்டார் டேவிட். அந்த ஒற்றை வார்த்தையைத் தவிர்த்தது ஒட்டுமொத்த உரையின் மீதான கவனத்தையும் கலைத்துவிட்டது. 'உன்னை நான் மதிக்கிறேன். நான் சொல்லும் வார்த்தைகளைக் கவனி’ என்ற பரஸ்பர கவனஈர்ப்புகளுக்கு உதவுபவைதான் 'ஹலோ, வணக்கம், ஹாய், நான் நலம்... நீங்கள் நலமா?’ போன்ற  விசாரிப்புகள். சிம் கார்டு செருகிய பிறகே செல்போனுக்கு உயிர் வருவதுபோல, எந்த உரையாடலுக்கு முன்னரும் அதைக் கேட்பவர்களுடன் 'கனெக்ட்’ செய்துகொள்ள மறக்காதீர்கள்!

பிடித்த முறையில் ஆளைப் பிடியுங்கள்!

பிடித்த வழியில் பிடியுங்கள்!

அலுவல்ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் ஒவ்வொரு நாளும் நீங்கள் ஏகப்பட்ட நபர்களுடன் தொடர்புகொள்ள நேரும். உங்களுக்குப் பழக்கமான அல்லது சுலபமான முறையில் மட்டுமே அவர்களை நீங்கள் தொடர்புகொண்டு இருப்பீர்கள். ஆனால், நீங்கள் தொடர்புகொள்பவர்களுள் ஒருவருக்குத் தொலைபேசிப் பேச்சு பிடிக்கலாம். இன்னொருவர் கோடிக்கணக்கான வர்த்தகங்களைக்கூட எஸ்.எம். எஸ்-ல் முடிப்பவராக இருக்கக் கூடும்.

இ-மெயில் அனுப்பினால், ஐ-போன் மூலம் நடுநிசியில்கூட உடனடி பதில் அளிப்பது இன்னொருவர் ஸ்டைலாக இருக்கும். 'இது எதுவும் வேண்டாம்... என்னை மதித்து நேரில் வந்து நின்றால், அவரது எந்த கோரிக்கையையும் நான் நிறைவேற்றுவேன்!’ என்பார் ஒருவர்.

எப்போதும் மொபைலை மௌனத்தில் ஆழ்த்திவைத்திருப்பவரை விடாது நீங்கள் தொடர்புகொண்டு சலித்துப்போயிருப்பீர் கள். ஆனால், அவர் நிமிடத்துக்கு நான்கு முறை தனது மெயில் இன்பாக்ஸில் புது மெயிலை செக் செய்பவராக இருப்பார். அவருக்கு ஒரு மெயில் தட்டினால், உங்களுக்கு உடனடி பதில் கிடைக்கலாம். எவருக்கு எதில் இஷ்டமோ அதில் அவரைப் பிடிப்பதுதான் உங்கள் வியூகமாக இருக்க வேண்டும்.      

ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்ஸ். அதில் உங்கள் டீலிங்ஸை அமைத்துக்கொள்ளுங்கள்!

விமர்சன வியூகங்கள்!

பலருடன் தொடர்புகொள்ளும்போது பலவிதமான விமர்சனங்களை நீங்கள் எதிர்கொள்ள நேரும். அவற்றை எதிர்கொள்வது எப்படி?

 • விமர்சனங்கள் கிளம்பியதும் அதில் இருந்து தற்காத்துக்கொள்ள முனையா தீர்கள். அது உங்கள் பக்கம் ஏதோ குற்றம் இருப்பதான தோற்றத்தை உருவாக்கும்!
   
 • 'எந்த விஷயத்தில் என்னிடம் குறை கண்டீர்கள்?’ என்று உங்களை விமர்சிப்பவரிடம் தெளிவாகக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். இது உங்களிடம் உள்ள ஏதேனும் ஒரு குறையைச் சரிசெய்துகொள்ள உதவலாம். அல்லது உங்களைப் பற்றி அவர் தவறாகப் புரிந்துகொண்டு இருப்பதைச் சரிசெய்யும் வாய்ப்பாக அமையலாம்!
   
 • விமர்சனங்களுக்குப் பதில் அளிக்கும் போது மிகவும் பாசிட்டிவ் தொனியில் பேசுங்கள். எதிராளியின் கருத்துகள் அனைத்தையும் மிகவும் பொறுமையாக, முழுமையாகக் கேட்டுவிட்டு, பிறகு தன்மையான குரலில் பதில் அளியுங்கள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism