Published:Updated:

ஷேர் அண்ட் லைக்!

ஷேர் அண்ட் லைக்!

ஷேர் அண்ட் லைக்!

ஷேர் அண்ட் லைக்!

Published:Updated:

ஒரு தேசியவாதியின் கதை!

ஷேர் அண்ட் லைக்!

ஏக் தா டைகர் - ஒரே வார வசூலில் 100 கோடியைத் தாண்டி, சல்மானின் சம்பளத்தையே 100 கோடிக்கு உயர்த்திய படம்! பாகிஸ்தானுக்கு உளவு பார்க்கச் சென்ற இந்திய உளவுப்படை ஏஜென்ட் ஒருவர், அங்கு ஒரு பெண்ணைக் காதலித்து செட்டில் ஆகும் படத்தின் கதை, ஓர் உண்மைக் கதை! 1970-களில் ரவிந்தர்

கௌஷிக்கின் நடிப்பை லக்னோ தேசிய நாடக விழா வில் கண்ட இந்திய உளவுப்படை அதிகாரிகள், அவரை பாகிஸ்தானுக்கு வேவு பார்க்க அனுப்பி வைத்தார்கள்.  இந்திய நாட்டுக்காக பாகிஸ்தானுக்குச் சென்று உளவு பார்த்துக்கொண்டே சட்டப் படிப்பு முடித்துவிட்டு உளவுப்படையில் சேர்ந்து உயர் அதிகாரியானார். அப்போது ஒரு பாகிஸ்தான் பெண்ணைக் காதலித்து மணம் செய்தவர், அப்போதும் இந்தியாவுக்கு விசுவாசமாகவே செயல் பட்டார். ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் அரசாங்கம் இவரது அடையாளம் அறிந்து மரண தண்டனை விதித்தது. அதுவரை இவரைப் பயன்படுத்திக்கொண்ட இந்திய உளவுப்படை அப்போது கைவிட்டுவிட்டது. மேல் முறையீட்டில் மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. ஆஸ்துமா காரணமாக 2001-ம் ஆண்டு ரவிந்தர் கௌஷிக் இறந்துவிட்டார். உளவு வேலையில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக இவருக்கு 'கறுப்பு டைகர்’ என்ற பட்டம் அளிக்கப்பட்டது. இந்தியாவுக்காகத் தன் வாழ்க்கையையே தொலைத்த ரவிந்தரின் குடும்பமோ இப்போது கடும் வறுமையில் சிக்கித் தவிக்கிறது. அவர்களுக்கு 'ஏக் தா டைகர்’ படக் குழுவினர் உதவ வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்த தயாரிப் பாளர், 'இது ரவிந்தரின் கதை அல்ல!’ என்று கூறி விட்டார். இதைவிடக் கொடுமை... ரவிந்தர் குடும்பத் தினர் இந்தப் படத்தைப் பார்க்க காசு இல்லாததால் படம் பார்க்கவேனும் உதவுங்கள் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். ஆனால், அதையும் நிராகரித்துவிட்டார்களாம்.

ஒரு போஸ்டர் வாசகம்!  

இந்திய அரசாங்கமே... ட்வீட்டர் அக்கவுன்ட்களை முடக்க நேரம் இருக்கும் உனக்கு, கறுப்புப் பண முதலைகளின் ஸ்விஸ் அக்கவுன்ட்டுகளை முடக்க நேரம் இல்லாமல் போனதேன்?

ஒரு சர்வே!

ஷேர் அண்ட் லைக்!

80 சதவிகித டீனேஜர்கள் காலை எழுந்ததும் தங்கள் மொபைலில் புது மெசேஜ் அல்லது அழைப்பு ஏதேனும் பதிவாகியிருக்கிறதா என்று சோதித்துவிட்டுத்தான் பல் விளக்கச் செல்கிறார்கள்.

மெகா மோசடி மேளா!

ஷேர் அண்ட் லைக்!

மு, நாட்டுக் கோழி என மோசடிகள் வரிசையில் இந்த வாரம் தமிழகத்தை அதிரச் செய்தவர் 'மெகா மோசடி லேடி’ சஹானா!