Published:Updated:

"ஒவ்வொரு ஓவியமும் ஒவ்வொரு பதிவு!"

க.நாகப்பன்

"ஒவ்வொரு ஓவியமும் ஒவ்வொரு பதிவு!"

க.நாகப்பன்

Published:Updated:
##~##

சென்னை முட்டுக்காட்டில் அமைந்திருக்கும் 'அகவெளி’ எப்போதும் கலைஞர்களால் நிரம்பிக்கிடக்கிறது. ஸ்டுடியோ அமைப்பு, தங்கும் வசதி,  நவீன கிச்சன், ஏகாந்தமான சூழலில் கற்பனைத் திறனைத் தூண்டும் சூழல்... 'அகவெளி’ ஆர்ட் கேலரி கலைஞர்களை வரவேற்கிறது. இளம் ஓவியர்களுக்கு வழி காட்ட இந்த அமைப்பை நடத்திவருகிறார் கார்த்திகேயன்.

"ஒவ்வொரு ஓவியமும் ஒவ்வொரு பதிவு!"

''எட்டாம் வகுப்பில் நானே ஒரு விநாயகர் சிலை செய்தேன். அப்படியே தொத்திக்கிட்ட ஆர்வம்தான் ஆயில் பெயின்டிங், டெரகோட்டானு தாவி இப்போ ஓவியங்கள்ல நிலைகொண்டேன். அதுலயும் யானை ஓவியங்கள்தான் என் ஸ்பெஷாலிட்டி! யானைகளை ஸ்டடி பண்றதுக்காக மேற்குத் தொடர்ச்சி மலை, சத்தியமங்கலம்னு நான் சுத்தாத காடுகளேஇல்லை. ஐந்தடி தூரத்துல காட்டு யானைகளைப் பார்த்து இருக்கேன். காட்டு யானைகள் மண் பூசி சிவப்பா இருக்கும். உலர்ந்த பழங்களைச் சாப்பிடும் யானைகள் பொதுவா வயலன்ட்டாக இருக்கும்.

தாய்வழிச் சமூகத்தில் இருந்து நாம் மாறிவிட்டோம். ஆனால், யானைகள் தாய்வழிச் சமூகத்தைத்தான் பின்பற்றுகின்றன. தாய் யானை தன் குட்டி வளரும் வரை பாதுகாக்கும். வளர்ந்ததும் குட்டிகள் தன்னிச்சையாக வாழ கற்றுக்கொள்வதற்காக தாய் யானை குட்டி யானைகளைத் துரத்தி அனுப்பிடும். நான் யானைகளைப் படம் எடுத்து அப்பட்டமாக வரைவது இல்லை. யானைகளுக்குத் தெரியாம அதைப் பின் தொடர்ந்து மணிக்கணக்காக உட்கார்ந்து கவனிச்சு, ஓவியமா வரையுறேன். என் ஒவ்வொரு ஓவியமும் ஒவ் வொரு பதிவு. என் ஒவ்வொரு ஓவியமும் ஒரு சவால்!''- சிலிர்ப்போடு பேசுகிறார் கார்த்திகேயன்.