Published:Updated:

மரக்கன்று தரும் இளங்கன்று!

ஞா.அண்ணாமலை ராஜா

மரக்கன்று தரும் இளங்கன்று!

ஞா.அண்ணாமலை ராஜா

Published:Updated:
##~##

ன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தை யின் எதிர்கால லட்சியம் என்னவாக இருக்கும்? கரூர் பரணி பார்க் பள்ளி யில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் ரக்ஷனா, ''10 லட்சம் மக்களை நேரடியா சந்திச்சு அவங்ககிட்ட மரக்கன்று தரணும். அதை அவர்கள் நட்டு பூமியை வளப்படுத்தணும். அதை நான் பார்க்கணும்'' என்கிறாள் பெரிய மனுஷியைப் போல. தன்னுடைய இலக்கை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்துவிட்ட ரக்ஷனா, முதல்கட்டமாக 10 ஆயிரம் மரங்களை 24 மணி நேரத்துக்குள் ஆட்டோ மூலம் சென்று பொதுமக்களுக்குக் கொடுத்து இருக்கிறாள். இது இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் சாதனையாகப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

மரக்கன்று தரும் இளங்கன்று!

 மரக்கன்று கொடுத்துக்கொண்டு இருந்த ரக்ஷனா, ''அங்கிள்... இப்ப சுற்றுச்சூழல் ரொம்ப மாசுபட்டுப் போயிடுச்சு. அதனால ஓசோன்ல ஓட்டை விழுந்துடுச்சு. பூமியோட வெப்பநிலையும் அதிகரிச்சிருச்சு. மரத்தை எல்லாம் வெட்டி காட்டையும் அழிச்சிட்டு வர்றோம். மரங்கள் இல்லாததால மழையும் வர்றது இல்லை. நிலத் தடி நீரும் குறைஞ்சுபோச்சு. ஆறு, ஏரி, குளம், குட்டை எல்லாம் வறண்டுபோகுது. இதனால உணவு உற்பத்தி செய்ய முடியாமப் போய், விலைவாசியும் அதிகமாகுது. இதைப்போக்க ஒரே வழி... வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்குறதுதான். அப்பதான் நம்மையும் நம்ம உலகத்தையும் எதிர் காலத்துல காப்பாத்த முடியும். அதுனாலதான் நான் மரக்கன்று தர்றேன்'' என்கிறாள்.

ரக்ஷனாவின் பெற்றோரான ரவிச்சந்திரன் - சங்கீதா, ''நாங்க கடந்த நாலு வருஷங்களா கோயில் களுக்கு எல்லாம் மரக்கன்றைக் கொடுத்து இருக் கோம். அப்ப எல்லாம் எங்ககூட ரக்ஷனாவைக் கூட்டிட்டுப் போவோம். ஒரு நாள் எங்ககிட்ட 'மழை எப்படிப் பெய்யுது?’னு கேட்டா. மழை பெய்ற முறையைச் சொன்னோம். 'எப்ப எல்லாம் மழை வரும்?’னு கேட்டா. அக்டோபர், நவம்பர் லனு சொன்னோம். அந்த வார்த்தைகளை மனசுலயே வெச்சிருந்திருக்கா. அடுத்த வருஷம் அக்டோபர் மாசம் வந்தப்ப 'ஏன் மழை

பெய்யலை?’னு கேட்டா. மரங்கள் வெட்டப் படுறதைப் பத்தி டீடெய்லா சொன்னோம். 'நம்ம நாட்டுல இருக்குற எல்லாரும் மரம் வளர்த்தா மழைக் காலம் முழுக்க மழை பெய்யும்ல... நாமளே மரக்கன்றைக் கொடுப்போம்’னு சொன்னா. அவ ஆசைப்படியே 10 லட்சம் பேருக்கு மரக்கன்று கொடுக்குறதுனு இலக்கு ஃபிக்ஸ் பண்ணிட்டு, கன்றுகள் கொடுக்க ஆரம்பிச்சிருக்கோம். வளமான தமிழ்நாட்டுக்கு எங்க குடும்பத்தால் ஆன முயற்சி இது!'' என்கிறார் ரவிச்சந்திரன்

இலக்கைத் தொட வாழ்த்துகள்!