கன்னடர்கள் மிகவும் பக்தியுடன் உச்சரிக்கும் பெயர் ஜி.வி! கஞ்சம் வெங்கட சுப்பையா. நவீனக் கன்னட அகராதியின் தந்தை. கடினமான கன்னடச் சொற்களைச் சேர்த்து கன்னட வரலாற்றில் முதன்முறையாக 'க்ளிஷ்ட படகோஷ’ (Klishta Padakosha) என்ற அகராதியை உருவாக்கியவர். கன்னடர்களைப் பொறுத்தவரை 'க்ளிஷ்ட படகோஷ’ ஒரு பொக்கிஷம். நவீனக் கன்னட அகராதி இயலின் தந்தையான இவர் உருவாக்கிய 'கன்னடா - கன்னடா நிகண்டு’ (கன்னட - கன்னட அகராதி) இந்தியாவின் மிகப் பெரிய தனிமொழி அகராதி எனும் பெருமைகொண்டது. கர்நாடகத்தின் மிக நுட்பமான அறிவியலாளர் எனப் போற்றப்படும் ஜி.வி. கடந்த 23-ம் தேதி 100-வது பிறந்த நாளைக் கொண்டாடி இருக்கிறார். நூறாண்டுகளைக் கடந்த மறுநாள்ஜி.வி-யைச் சந்தித்தேன்.

''ஆனந்த விகடன்... அதுவும் கிட்டத்தட்ட நூற்றாண்டை நெருங்குகிறது அல்லவா? தமிழ் படிக்கத் தெரியாது. ஆனால், எனது மகனின் தமிழ் நண்பன் வாங்கும் விகடனைப் புரட்டி கார்ட்டூன் மட்டும் பார்த்துவிடுவேன். கார்ட்டூனுக்கு மொழி இல்லைதானே?'' என்று சொல்லி அழகாகச் சிரிக்கிறார்.

நம்ப வேண்டும்... இந்த வயதிலும் ஜி.வி. யார்துணை யும் இன்றித் தானாகவே நடக்கிறார். கண்ணாடி அணிவது இல்லை. பார்வை அவ்வளவு துல்லியம். பேச்சில் எந்தப் பிசிறும் இல்லை.

''நூறு ஆண்டுகள்... வாழ்க்கையை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

''நவீன இந்தியாவின் பெரும்பாலான மாற்றங் கள் என் கண் முன் நடந்தவை. என்னால்முடிந்த அளவுக்கு எனது மொழிக்குச் சிறந்த பங்களிப்பை வழங்கிய மனத் திருப்தியுடன் வாழ்ந்துள்ளேன். நீண்ட காலம் வாழ்வதன் பின்னணியில் எந்த ரகசியமும் இல்லை. ஒவ்வொரு நாளும் எதைச் செய்ய மறந்தாலும் நடைப் பயிற்சியை மறக்க மாட்டேன். எனது தாயார் 107 ஆண்டுகள் வாழ்ந்தார். எனது தாய் மாமா 103 ஆண்டுகள் வாழ்ந்தார். ஆகவே, நான் வாழ்வதற்கு இன்னும் நிறைய ஆண்டுகள் உண்டு சகோதரா.''

'' 'புதிய கன்னட அகராதியின் தந்தை’ என்ற கௌரவத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

''கன்னடத்திலும் சரி... வேறு மொழிகளிலும் சரி... அகராதிக் கலை என்பது மிகவும் அரிதாக அரங்கேறும் ஒரு விஷயம். நாங்கள் தயாரித்த தனி மொழி கன்னட அகராதியானது சாதாரண ஒரு அகராதி அல்ல; அது ஒரு வரலாற்று, தொல்லியல், கலைக் களஞ்சிய அகராதி. நாங்கள் உருவாக்கிய கன்னடம் - கன்னடம் அகராதியானது ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் ஆங்கில அகராதிக்கு ஒப்பானது. இந்தியாவில் உள்ள தனிமொழி அகராதிகளில் மிகப் பெரியதும் ஆழமானதும் இதுதான். இந்த அகராதியை உருவாக்கிய அணிக்குத் தலைமை தாங்கியவன் எனும் வகையில் பெருமைப்படுகிறேன். இந்த மனப் பக்குவத்தை எனக்கு அளித்த எனது தந்தை கஞ்சம் திம்மானய்யாவை இந்த இடத்தில் நான் நினைவுகூர்கிறேன். ஒன்று தெரியுமா... நான் முதன்முதலாக ஆறாம் வகுப்பில்தான் பாடசாலையை மிதித்தேன். எனது ஆரம்பக் கல்வியை எனது தந்தையார் வீட்டில்வைத்துதான் சொல்லிக்கொடுத்தார்.''

''கன்னடத்தில் ஒரு வசனம் எழுதுவது கூட இந்தத் தலைமுறை கன்னடர் களுக்குக் கடினம் என்று ஒரு பேட்டி யில் கூறியிருந்தீர்கள். என்ன காரணம்?''

''நிச்சயமாக ஆங்கில மொழிக் கல்விதான் காரணம். ஆனால், நான் ஆங்கில மொழிக் கல்விக்கு எதிரானவன் அல்ல; அதே சமயம், பிராந்திய மொழிகளை உதாசீனப்படுத்தி ஆங்கில மொழியை வலுக்கட்டாயமாகப் புகுத்தும் அரசின் கல்விக் கொள் கைக்கு எதிரானவன். இருப்பினும் தமிழ், கன்னடம் போன்ற பிராந் திய மொழிகள் காலாகாலத்துக்கும் நிலைத்து நிற்கத் தேவையான அத்தனை அம்சங்களையும் தன்னகத்தே கொண்டிருக்கின் றன. ஆங்கிலேயர் நம்மைஆண்ட போதுகூட அவர்களால் பிராந் திய மொழிகளை அழிக்க முடிய வில்லை. இப்போது ஆங்கில மொழி தமிழ், கன்னடம் போன்ற பாரம்பரிய மொழிகளை அழித்து விடும் என நினைப்பது அபத்தம்.''

''ஆனால், பெங்களூரு போன்ற நகரங் களில் கன்னடம் வழக்கொழிந்து வருகிறதே?''

''பெங்களூரு இன்று ஒரு சர்வதேச நகரம். பெங்களூரில் கன்னடர்களைவிட மற்ற மொழி பேசுபவர்கள் அதிகம். அவர்களால் கன்னட மொழியை லாகவமாகப் பேசமுடிவது இல்லை. பெங்களூரைத் தாண்டியும் கர்நாடகம் உள்ளது நண்பரே. வடக்குக் கர்நாடகத்தில் எந்தவித ஆங்கிலக் கலப்பும் இல்லாமல் எவ்வளவு அழகாகக் கன்னடம் பேசுகிறார்கள் என்ப தைப் பாருங்கள். கிராமங்களில் தான் இந்தியா வாழ்கிறது என்றார் காந்திஜி. கிராமங்களில் தான் பிராந்திய மொழிகள் அதன் ஜீவனுடன் வாழ்கின்றன என்கிறேன் நான்.''

''நவீன இந்தியாவின் அனைத்துச் சம்பவங்களுக்கும் நீங்கள் ஒரு வாழும் சாட்சி. இந்த நூறு வருடங்களில் எந்தச் சம்பவம் உங்கள் மனதைவிட்டு இன்னும் அகலாமல் உள்ளது?''

''பல நிகழ்வுகளைச் சொல்ல லாம். அதில் மிக முக்கியமானது காந்திஜியின் உப்புச் சத்தியா கிரகம். அந்தச் சம்பவம் தேசம் முழுவதும் ஏற்படுத்திய எழுச்சி இப்போதும் என் மனக் கண் ணில் நிழலாடுகிறது.''

''நவீன இந்தியா எதிர்கொள்ளும் மிகப் பெரும் ஆபத்து?''

''ஊழல்தான்! இந்தியாவை மிகச் சிறந்த, நேர்மையான தலைவர்கள் ஆண்டார்கள் என நாம் இறந்த கால நினைவு களை அசைபோடும் நிலைமையில் உள்ளோம். ஆரம்பக் காலங்களில் ஊழல் எனும் குற்றம் கொலைக் குற்றத்துக்கு ஒப்பானதாகக் கருதப்பட்டது. ஆனால், இன்று ஊழலில் ஈடுபடாதவர்கள் என யாரையும் கை நீட்டிக் கூற முடியாத அளவுக்கு எங்கும் எதிலும் ஊழல்.''

''ஊழலை ஒழிக்கவே முடியாதா?''

''ஊழலை ஒழிக்க முடியாது எனும் மாயையை அரசியல்வாதிகள் ஏற்படுத்திவைத்துள்ளனர். சரியான முறையில் அமைந்த கல்வியால் ஊழல் உட்பட அனைத்து அராஜகங்களையும் ஒழிக்க முடியும். ஆனால், இன்று கல்வியே ஊழல் ஆகிவிட்டது. சிறிய வயதில் இருந்தே வாழ்க்கையின் நேர்மை தத்துவங்களைச் சொல்லிக்கொடுத்தால் ஊழல் இல்லாத எதிர்காலச் சமூகம் நிச்சயம் உருவாகும்.''

''தமிழ் இலக்கியம் படிப்பீர்களா? பிடித்த எழுத்தாளர் யார்?''

''வாழ்க்கையில் என்னைப் பெரிதும்அரித்துக் கொண்டு இருக்கும் பெரும் கவலைகளில் ஒன்று எனக்குத் தமிழ் படிக்கத் தெரியாது என்பது. ஆனாலும், மொழிபெயர்ப்புகள் மூலம் தமிழ்ப் படைப்புகளை வாசித்திருக்கிறேன். பாரதி எனக்கு மிக மிகப் பிடித்த கவி. மொழிபெயர்ப்பே இவ்வளவு இனிமை என்றால் மூலநூல் எவ்வளவு சுவைக்கும்? மேலும் கா.நா.சு., கு.அழகிரிசாமி, சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், நா.முத்துசாமி, வண்ணநிலவன், நாஞ்சில்நாடன், கிருஷ்ணன் நம்பி, திலீப்குமார்,

ஜி.நாகராஜன் போன்றோரின் சிறுகதைகளை 'தமிழ் கட்டா சங்கலன்’ எனும் பெயரில் கன்னடத்தில் மொழிபெயர்த்து உள்ளேன். இவர்களுடைய எழுத்துகள் எனக்குப் பிடித்தமானவை!''

''இளம் தலைமுறையினருக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?''

''நண்பர்களே... அன்பால் ஆனது இந்த உலகம். ஆனால், இப்போது இந்த உலகத்தில் அன்பு என்பது மிகவும் குறைந்துவருகிறது. எனது நூற்றாண்டில் இப்போதுதான் அன்பு இல்லாத சமுதாயத்தில் வாழும் உணர்வு ஏற்படுகிறது. மனிதர்களின் ஒற்றைக் குறிக்கோளாக அன்பு மட்டுமே இருக்க வேண்டும். அன்பு கொடுத்தால் குறையாது. அதைவிட அதிகமாகப் பெருகிதான் உங்களிடம்வரும். அண்மையில் வட கிழக்கு இந்தியர்கள் பெங்களூரைவிட்டு வெளியேறியபோது நான் மிகவும் மனம் வருந்தினேன். குஜராத் கலவரம், அஸ்ஸாம் கலவரம், பாகிஸ்தானில் இந்துக்கள் மீதான தாக்குதல், இலங்கையில் தமிழர்கள் மீதான படுகொலைகள் என எல்லாமே என் மனதை மிகவும் வருத்துகின்றன. நீங்கள் தமிழர்கள், நான் கன்னடன். ஆனால், எல்லா வற்றுக்கும் முதலில், நாம் மனிதர்கள்!''