10 வயது பையன் சைக்கிள் ஓட்டினால் அது சாதாரண விஷயம். ஆனால், அதே பையன் கண்களைக் கட்டிக்கொண்டு ஓட்டினால்? ஓட்டுகிறானே... திருச்சியைச் சேர்ந்த அரவிந்த் ஸ்ரீகாந்த்!

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்பு உணர்வுக்காக ஸ்ரீரங்கம் முழுவதும் கண்களைக் கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டிய அரவிந்த் ஸ்ரீகாந்திடம் பேசினேன். ''என் அப்பா மேஜிக் கலைஞர். அவர் மேஜிக் பண்றதைப் பார்த்து பல விஷயங்களைக் கத்துக்கிட்டேன். 2007-ல் எங்க அப்பா கண்ணைக் கட்டிக்கிட்டு மதுரையில் இருந்து ஈரோடு வரை 600 கி.மீ. தூரம் சைக்கிள் ஓட்டினார். அதைப் பார்த்து எனக்கும் ஆசை வந்தது. தொடர்ந்து பயிற்சி எடுத்தேன். இப்போது பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்பு உணர்வுக்காக இதைச் செஞ்சேன். எங்க வீட்டுல அதிகமா பிளாஸ்டிக் உபயோகப்படுத்த மாட்டோம். மக்கும் குப்பை, மக்காத குப்பைனு பிரிச்சுத்தான் போடுவோம். இதை என்னோட நண்பர்கள்கிட்டேயும் சொன்னேன். அவங்களும் அதே மாதிரி செய்யறாங்க. இந்த சைக்கிள் முயற்சி அதுக்கான ஒருபடிதான். நான் இன்னும் நிறையப் பண்ணுவேன்'' என்கிறான் ஆர்வமாக.

அவனுடைய தந்தை மாயா பாலாஜி, ''ஸ்ரீ, முணு வருஷமாக மேஜிக் கத்துக்கிறான். நிறைய நிகழ்ச்சி பண்ணி இருக்கான். போன வருஷம் இந்தியாவின் இளம் மேஜிக் கலைஞர் விருது வாங்கி இருக்கான். ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டிகள்லேயும் பின்னி எடுப் பான். கின்னஸ் சாதனைதான் அவனோட இலக்கு...'' என்றார் பெருமையாக!