கல்லூரி மாணவர்கள் என்றாலே, வெட்டி அரட்டைக்கும் ஊர் சுற்றுவதற்கும் நேரம் செலவிடுவார்கள் என்கிற எண்ணத்தை உடைத்து இருக்கிறார்கள் கோவையின் இன்ஃபோ இன்ஸ்டிட்டியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியின் மாணவர்கள்!

'ஹேப்பி ஹார்ட்ஸ்’ என்கிற அறக்கட்டளையைத் தொடங்கி, விடுமுறை நாட்களில் ஆதரவற்றோர் இல்லங்களிலும் முதியோர் இல்லங்களிலும் தங்கள் நேரத்தைச் செலவிடுகிறார்கள் கல்லூரி மாணவர்கள். இந்த அறக்கட்டளையின் நிர்வாகிகளில் ஒருவரான விக்னேஷ் பேசுகிறார்.

''கடந்த குடியரசு தினம் அன்னைக்கு வடவள்ளியில இயங்கிவரும் கருணை இல்லத்துக்குப் போனோம். அங்கே இருந்த எல்லாருமே பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந் தைகள். அவங்களைச் சந்திச்சு ஒவ்வொருத் தரோட கதையைக் கேட்டப்ப உண்மை யிலேயே கண்கலங்கிட்டோம். அப்பதான் நம்மளை எல்லாம் கடவுள் எவ்வளவு நல்ல நிலைமையில வெச்சு இருக்காருங்கிறது புரிஞ்சுது. அதனால, அன்னைக்கு நாள் முழுக்க, அவங்களோட இருந்து குடியரசு தினத்தைக் கொண்டாடினோம். அப்பதான் மத்தவங்களை சந்தோஷப்படுத்திப் பார்க்கிறதுல இருக்கிற சந்தோ ஷத்தை நாங்க அனுபவிச்சோம். அதனால, இதையே தொடர்ந்து செய்ய நினைச்சோம். இப்படி உருவானதுதான் 'ஹேப்பி ஹார்ட்ஸ்!’

எங்களோட விடுமுறை நாட்களையும் அரசு விழா நாட்களையும் நாங்க ஆதரவற்றோருக்கும் இதர சமூகப் பணிகளுக்கும் ஒதுக்கிடுறோம். ஒரு வாரம் முன்னாடியே எந்த ஆசிரமம் போகணும், அங்கே எவ்வளவு பேர் இருக்காங்க, அவங்களோட தேவைகள் என்னென்ன... இதை எல்லாம் நேரில் போய் பார்த்து விசாரிப்போம். குறிப்பிட்ட அந்த விடுமுறை நாள்ல அந்த இல்லத்தில் நாங்கள் சுமார் 30 பேர் ஒண்ணுகூடுவோம். அங்கே இருக்கும் குழந்தைகளுக்குப் பாடம் நடத்துவோம்.

இந்த விஷயத்தைத் தெரிஞ்சுக்கிட்ட எங்க கல்லூரி முதல்வர் எங்களைக் கூப்பிட்டுப் பாராட்டினார். அதோட எங்களோட பல்வேறு நிகழ்ச்சிகளுக்குக் கல்லூரிப் பேருந்தையும் தந்து, ஆசிரியர் களையும் அனுப்பிவெச்சார். கல்லூரி நிர்வாகமும் எங்களுக்கு உதவிகளைச் செய்ததால் இப்ப எல்லாம் பல்வேறு ஆதரவற்றோர் இல்லங்களுக்குப் போய் எங்களால மதிய உணவும் வழங்க முடியுது'' என்றார் பூரிப்புடன்.

தொடர்ந்து பேசிய பிரகலாதன், ''நாங்க இந்த இல்லங்களில் பயணப்பட்ட வரை ஒரு விஷயத்தைத் தெரிஞ்சுக் கிட்டோம். அவங்களுக்கு உடனடித் தேவை, தரமான கல்வி. அதனால, ஆதர வற்றோர் இல்லங்களைத் தொடர்பு கொண்டு அங்கு படிக்கிற மாணவர் களுக்குத் தேர்வுகளுக்கு எப்படித் தயாராகணும், ப்ளஸ் டூ-வுக்குப் பின்னாடி எந்தெந்த படிப்புகளைத் தேர்வு செய்யலாம்... இப்படியான விஷயங்களை எல்லாம் ஆசிரியர்களை வெச்சு சொல்லிக் கொடுத்தோம். அதோட அவங்களுக்குத் தேர்வு எழுதத் தேவையான பொருட்கள், வினா-விடை வங்கிப் புத்தகங்களும் கொடுத்து அனுப்பினோம்'' என்றார் மகிழ்ச்சியுடன்!

நிறைவாகப் பேசிய நிர்மல், ''அவசர சிகிச்சைக்கு ரத்தம் வேணுமா? எங்ககிட்ட சுமார் 200 பேர் எந்நேரமும் ரத்தம் கொடுக்கத் தயாரா இருக்காங்க. சுற்றுச் சூழல் விஷயத்திலேயும் நாங்க அக்கறை காட்டுறோம்.

மரங்களை வளர்க்கிறது ரொம்ப முக்கியம். இதை வலியுறுத்தி 'நிழல்’ங்கிற அமைப்பின் உதவியோடு 250 மரக் கன்றுகளை நட்டு பராமரிச்சுக்கிட்டு இருக்கோம்'' என்கிறார் உற்சாகமாக. சேவை தொடரட்டும்!