''கூலி வேலை செய்தவர்களின் சாதனை ஒன்றை உங்களால் கூற முடியுமா?''

''ஹாங்காங்கில் 1954 ஏப்ரல் மாதம் 7-ம் தேதி அன்று ஓர் ஆண் குழந்தை கொழுகொழு என்று பிறந்தது. குழந்தையின் தந்தை சார்லஸ் சான் ஒரு சமையல்காரர். தாய் லீ-லீ வீட்டு வேலை செய்யும் பெண். பிரசவம்

பார்த்த டாக்டர், அந்தக் குடும்பத்தின் நிலைமையையும் குழந்தையின் அழகையும் பார்த்து, தானே தத்தெடுத்து வளர்க்க ஆசைப்பட்டார். ஆனால், ஏழைப் பெற்றோர் மறுத்துவிட்டனர். அந்தக் குழந்தைக்கு சான் காங்-காங் என்று பெயர் வைத்தனர். அதற்கு ஹாங்காங்கில் பிறந்தவன் என்று அர்த்தம். இந்த நிலையில் பெற்றோருக்கு ஆஸ்திரேலியாவில் வேலை கிடைத்தது. சாசனா என்ற நாடகப் பள்ளியில் காங்-காங் சேர்ந்தான். தனது ஏழாவது வயதிலேயே கராத்தே, குங்ஃபூ என மார்ஷியல் கலைகள் அனைத்தும் கற்றான். அவன் தினமும் 18 மணி நேரம் பயிற்சி எடுத்தான். எட்டு வயதில் 'பிக் அண்ட் லிட்டில் வாங்ஷன்’ என்ற படத்தில் முதன்முதலாக நடித்தான். அவனுடைய 18 வயதில் புரூஸ் லீ நடித்த 'என்டர் தி டிராகன்’ படத்தில் ஒரு சிறு வேடம் கிடைத்தது. உயரமான இடத்தில் இருந்து குதிக்கும் காட்சியில் மற்ற ஸ்டன்ட் நடிகர்கள் தயக்கம் காட்ட, காங்-காங் உடனே ஓடி வந்து குதித்து புரூஸ் லீயைக் கவர்ந்தான்.

அதன் பின் வாய்ப்புகள் கிடைக்காததால், கட்டட வேலைகளில் உதவியாளராகக் கூலி வேலை செய்தார். தினக் கூலியாக வேலைபார்த்தாலும், இவரது துறுதுறுப்பையும், துள்ளலையும், உருவத்தையும் பார்த்து சக தொழிலாளர் ஒருவர் 'லிட்டில் ஜாக்’ என்று அழைத்தார். இதுவே பின்னர் 'ஜாக்கி’ ஆனது. ஹாங்காங்கில் இருந்து ஒரு தந்தி வர, ஜாக்கி சான் என்ற புதிய பெயருடன் புறப்பட்ட இவர், 'ஃபிஸ்ட் ஆஃப் ஃப்யூரி’ என்ற படத்தில் நடித்தார். அப்போது அவர் வயது 21. அன்று முதல் அவரது வெற்றிப் பயணம் தொடர்ந்தது. அந்த 'கூலித் தொழிலாளி’தான் ஜாக்கிசான்!''

- ஹெச்.பாஷா, சென்னை-106

''முரண் என்பதை உதாரணத்துடன் விளக்கவும்?''

'' 'பாலிதீன் பைகள் மண்ணுக்கு எதிரி’ எனச் சொல்லிவிட்டு, மரக்கன்றுகளை நட பாலிதீன் பைகளிலேயே மரக் கன்றுகளை வைத்துக் கொடுப்பது!''

- என்.சீத்தாலட்சுமி, சென்னை.

''எலெக்ட்ரானிக் இசைக் கருவிகள் வந்த பிறகு, சினிமாவின் பின்னணி இசை காதை அடைக்கிறதே?''

''அந்த மலையாளப் படத்துக்கு இசைஅமைக்க ஒரு தமிழ் இசையமைப்பாளரை திருவனந்தபுரம் அழைத்தனர். இயக்குநரை வெளியே அனுப்பிவிட்டு, இசையமைப்பாளர் படத்தைப் பார்த்தார். மறுபடியும் படத்தைப் போடச் சொல்லிப் பார்த்தார். மறுபடியும் பார்த்தார். மூன்று முறை படத்தை ரசித்த இசையமைப்பாளர், இயக்குநரைக் கூப்பிட்டு, 'இந்தப் படத்துக்குப் பின்னணி இசை அநாவசியம்’ என்றார்.

'நானும் அப்படித்தான் நினைத்தேன். என்றாலும், நீங்கள்தான் அதை முடிவு செய்ய வேண்டும் என்றுதான் தங்களை அழைத்தேன். நன்றி’ என்றார் இயக்குநர். அந்தப் படம்: 'கொடியேட்டம்’. இயக்குநர்: அடூர் கோபாலகிருஷ்ணன். இசையமைப்பாளர்: எம்.பி.சீனிவாசன்.''

- அ.யாழினி பர்வதம், சென்னை-78.

''விஜயகாந்தை நண்பர் என்று சொல்லியிருக்கிறாரே, மு.க.ஸ்டாலின்?''

''பொறுங்க... தேர்தல் வரட்டும்... உடன்பிறப்பு என்றுகூடச் சொல்வார். தேர்தலுக் குள் அஜித்தோ, விஜய்யோ கட்சி ஆரம்பிக்கவில்லை எனில், தே.மு.தி.க-வின் மார்க்கெட் வேல்யூ இன்னும் எகிறும் என்பது உண்மை!''

- கே.கே.பாலசுப்ரமணியன், கோயம்புத்தூர்.

''மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் என்ன வித்தியாசம்?''

''சுற்றி இருப்பவர்கள் என்ன சொன்னாலும், அதற்கு ஒருவர் தலையாட்டிக்கொண்டே இருந்தால், அது மத்திய அரசு!

'ஒருவர்’ என்ன சொன்னாலும் சுற்றி இருப்பவர் கள் தலையாட்டிக்கொண்டே இருந்தால், அது மாநில அரசு!''

- கி.ரவிக்குமார், நெய்வேலி.

''தற்போதைய நாட்டு நடப்பில் எந்தப் பொன்மொழி நமக்கு ஆறுதல் தரும்?''

''கடைசியில் எல்லாம் சரியாகும் என்று நம்புங்கள். சரியாகவில்லைஎன்றால், இது கடைசி இல்லை என்று நம்புங்கள்!''

- அனார்கலி, தஞ்சாவூர்.