Published:Updated:

குறும்படம் இயக்கம் குழந்தைகள்

வீ.கே.ரமேஷ்படம் : க.தனசேகரன்

பிரீமியம் ஸ்டோரி

ழக்கமாக சினிமா துறையில் சாதிக்க நினைப்பவர் கள், விஸ்காம் மாணவர்கள் அல்லது குறும்பட ஆர்வலர்கள். இவர்கள்தான் குறும்படங்கள் எடுப்பார்கள். ஆனால், சேலத்தில் குழந்தைகளே ஒன்று சேர்ந்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி குறும்படங்களை இயக்கி ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார்கள்.

குறும்படம் இயக்கம் குழந்தைகள்

சேலத்தில் குழந்தைகளுக்காகச் செயல்பட்டு வருகிறது 'நளந்தாவே ஃபவுண்டேஷன்’. இது ஐ.நா-வின் யூனிசெஃப் உதவியுடன் குழந்தைகளின் பிரச்னைகளைக் குழந்தைகளே சொல்லும் விதமாகக் குறும்படங்களை வெளியிட்டு இருக்கிறது. அமைப்பின் நிறுவனர் ஸ்ரீராமிடம் பேசினேன். ''இங்கு 'செவ்வாழை’, 'சக்கை’, 'பள்ளிக்கூடம்’ என மூன்று குறும்படங்களை வெளியிட்டு இருக்கிறோம். இந்த மூன்று குறும்படங்களும் ஒவ்வொரு மாவட்டத்திலும் பெரும்பான்மையான குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னைகளைச் சொல்லும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. 'செவ்வாழை’ சேலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெற்றோர்களின் குடிப்பழக்கத்தால் பாதிக்கப்படும் குழந்தைகளின் துயரத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டது. 'சக்கை’ தருமபுரி பகுதிகளில் குழந்தைத் தொழிலாளர்கள், வறுமையைப் பற்றிச் சொல்லும் விதமாக உருவாக்கப்பட்டது. 'பள்ளிக்கூடம்’ கிருஷ்ணகிரி பகுதிகளில் குழந்தைத் திருமணத்தால் பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் கல்வி இடை நிற்றல் வேதனையைக் கண்முன் நிறுத்துகிறது.  

இந்த மூன்று குறும்படங்களுக்கும் திரைக்கதை, வசனம், இயக்கம், நடிப்பு, தொழில்நுட்ப வேலைகள் எல்லாவற்றையும் செய்தது குழந்தைகள்தான். நாங்கள் அவர்களுக்குப் பயிற்சி மட்டுமே கொடுத்தோம். குழந்தைகளுக்குச் சமூகத்தில் ஏற்படும் பிரச்னை களையும், அவர்களின் உரிமைகளையும் கலைகள் மூலமாக குழந்தைகளைக்கொண்டே சொல்லிவருகிறோம். குறும்படங்கள், வீதி நாடகங்கள் மூலமாகக் குழந்தைகளே சொல்லும்போது பிரச்னையின் அழுத்தமும் வீரியமும் அதிகமாக இருக்கும். அதற்கான தீர்வும் விரைவாகக் கிடைக் கும். இதுபோல தமிழ்நாடு முழுவதும் 37 குறும்படங்கள் குழந்தைகள் மூலமாக உருவாக்கப்பட்டுள்ளன'' என்றார் நம்பிக்கையோடு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு