Published:Updated:

புதிய விநாயகா பூமிக்கு வா!

அற்புதராஜ்படங்கள் : ஆ.நந்தகுமார்

பிரீமியம் ஸ்டோரி

கிரிக்கெட் பிள்ளையார், செல்போன் பிள்ளையார், ஃபேஸ்புக் பிள்ளையார் தெரியும். சூழலுக்கு உகந்த பிள்ளையார் தெரியுமா?

 இன்றைய தேதியில் உலகமே பயந்து பம்மும் விஷயம்... சுற்றுச்சூழல் மாசு. ஓசோன் மண்டலத்தில் ஓட்டை,

புதிய விநாயகா பூமிக்கு வா!

துருவப் பிரதேசத்தில் பனிக் கட்டிகள் உருகுதல் என உலகை அச்சுறுத்தும் அபாயத்தின் ஆணிவேர் சுற்றுச்சூழல் மாசுபாடுதான். சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் காரணிகளில் ரசாயனப் பொருட்களைக்கொண்டு தயாரிக்கப்படும் வழிபாட்டுப் பொருட்களுக்கும் பங்கு உண்டு. விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட இருக்கும் சூழலில் ரசாயனப் பொருட்கள் இல்லாமல் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் பிள்ளையார் சிலைகளைத் தயாரித்துக்கொண்டு இருக்கிறது ஒரு கிராமம். அந்தக் கிராமத்தின் பெயர் டி.எடையார்.

மார்பிள்ஸ் தயாரிக்கப் பயன்படுத்தும் கல் மாவு, பேப்பர் மாவு, மைதா மாவு ஆகியவற்றை ஒரு கிரைண்டர் போன்ற மெஷினில் போட்டு, அதனுடன் மரவள்ளிக் கிழங்கு மாவால் தயாரிக்கப்பட்ட பசையைக் கலந்து சப்பாத்தி மாவு போன்று செய்துகொள்கின்றனர். அதை அச்சுகளில் தடவிக் காயவைக்கிறார்கள். கைகள், துதிக்கை உட்பட மொத்தம் 11 பாகங்களைத் தனித்தனியாகச் செய்து, அந்தப் பாகங்களை ஒட்டவைக்கிறார்கள். காயவைத்த பின்னர், வாட்டர் பெயின்ட் மற்றும் இயற்கை வண்ணங்கள் கொண்ட டிஸ்டம்பரால் பெயின்டிங் செய்ய... பளிச் விநாயகர் சிலை ரெடி!  

இந்தச் சிலைகளைத் தயாரித்துவரும் தட்சிணா மூர்த்தி, ''இங்கே 8 முதல் 10 அடி வரையிலான சிலைகளைத் தயாரிக்கிறோம். இதில் எந்தவிதமான ரசாயனப் பொருட்களுமே கிடையாது. வாட்டர் பெயின்ட் மற்றும் டிஸ்டம்பர் மூலமாக பெயின்ட் பண்ணுவதால் சிலைகள் பார்க்க பளிச் என்று இருக்கும். சிங்கம், மாடு, மான், நந்தி, எலி, மயில், அன்னம் போன்றவற்றின் மேல் விநாயகர் அமர்ந்துஇருப்பது போன்ற சிலைகளும் செய்கிறோம்!'' என்கிறார் தட்சிணாமூர்த்தி.

வெல்கம் விநாயகா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு