Published:Updated:

நானே கேள்வி... நானே பதில்!

நானே கேள்வி... நானே பதில்!

நானே கேள்வி... நானே பதில்!

நானே கேள்வி... நானே பதில்!

Published:Updated:

'' 'தியேட்டருக்கு இளைஞர்கள் மட்டும்தான் வருகிறார்கள். அதனாலேயே அவர்களை ஈர்க்கும் கதையைப் படமாக எடுக்கிறோம்’ என்கிறார்களே திரைப்பட இயக்குநர்கள். அவர்கள் வாதமும் சரிதானே?''

நானே கேள்வி... நானே பதில்!

 ''பாலிவுட்டின் பிரபல டான்ஸ் மாஸ்டர் ஃபாரா கானும் பொமன் இரானியும் இணைந்து நடித்த படம் Shirin Farhad Ki Toh Nikal Padi. நாற்பத்திச் சொச்சம் வயதைக் கடந்த இவர்கள் காதல்கொண்டு பெற்றோரின் எதிர்ப்பைக் கடந்து, திருமணம் முடிப்பார்கள். 'காதலுக்கு மரியாதை’ படத்தில் விஜய், ஷாலினிக்குப் பதில் இவர்கள் நடித்தால்..? அதுதான் படம். ஆனால், அசட்டுத்தனமாகச் சிரிக்க வைக்காமல், ரசிக்க வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு ஃப்ரேமிலும் காதல் ததும்பி நிரம்பி வழியும் இந்தப் படத்துக்கு தியேட்டரில் விசில் பறக்கிறது. திரும்பிப் பார்த்தால் தியேட்டர் முழுக்க 'வெண்முடி வேந்தர்’களும் 'ஆன்ட்டி’ அடையாளம்கூட இழந்த பெண்களும் கைதட்டி, விசில் கொடுத்து அப்ளாஸ் கொடுக்கிறார் கள். கடவுள் நம்பிக்கை மத்திய வயதினருக்குத்தான் அதிகம். ஆனால், ஆடி வெள்ளிகளில் 'தாவணி’ தரிசனத் துக்கென அங்கும் இளைஞர்கள் குவிகிறார்களே... அப்படி நடுத்தர வர்க்கத்தினரைத் தியேட்ட ருக்கும் ஈர்த்து இழுங்கள் இயக்குநர்களே!''    

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- வி.என்.கிருஷ்ணமூர்த்தி, மதுரை.

''அரசு மருத்துவமனையில் குழந்தையை எலி கடித்ததுபற்றிக் கேட்டதற்கு சுகாதாரத் துறை அமைச்சர் விஜய், 'நானா போய் எலியைப் பிடிக்க முடியும்?’ என்று கேட்டிருக்கிறாரே?''

''ஒருவேளை, தனக்கு அமைச்சர் பதவி நிலைக்குமா என்ற 'கிலி’ பிடித்திருக்குமோ அவருக்கு?!''

- கு.விவேக், தேனி.

''ஆளும் கட்சி - எதிர்க் கட்சி. அதிகம் பொறுப்புமிக்கது என எதைச் சொல்வீர்கள்?''

'' 'ஆளும் கட்சியாக இருக்கும்போது நல்லது செய்யக்கூட யோசிக்க வேண்டும். ஆளும் கட்சியாக இல்லாதபோது தவறைக்கூடத் தைரியமாகச் செய்யலாம்!’ - தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் விடுத்துள்ள 'பொறுப்பான’ ஸ்டேட்மென்ட் இது. என்னத்த சொல்ல?!''

- எஸ்.மாலதி, திருச்சி.

''பொய்யைப் பற்றி உண்மையான தகவல்கள் ஏதும் உண்டா?''

''சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று, 'ஒவ்வொருவரும் குறைந்தது நாள் ஒன்றுக்கு நான்கு பொய்களாவது கூறுகிறோம்’ என்கிறது. அதில் அதிகம் பேர் கூறும் பொய், 'ஐ யம் ஃபைன்’ என்பதுதானாம்!''

'' 'ஜெயலலிதா ஆட்சியில் குறைகளே இல்லை’ என்கிறாரே சரத்குமார்?''

''ஜெயலலிதா ஆட்சியில் சரத்குமாருக்குக் குறை களே இல்லை என்பதுதான் அதன் பொருள்!''

- விஜயலட்சுமி, பொழிச்சலூர்.

''நம் நாட்டில் இலக்கியவாதிகள் (அ) எழுத்தாளர்களின் நிலை எப்படி உள்ளது?''

நானே கேள்வி... நானே பதில்!

''நண்பர் ஒருவரின் திருமணத்துக்குச் சென்றிருந்தேன். நண்பருக்கு இலக்கிய ஆர்வம் உண்டு என்பதால், எழுத்தாளர் கோணங்கியை அழைத்திருந்தார். மணமக்களைச் சந்தித்து வாழ்த்திவிட்டு வந்து அமர்ந்தார் கோணங்கி. அனைவரும் சாப்பிடச் செல்ல, கோணங்கி மட்டும் தனிமையில் அமர்ந்திருந்தார். அங்கிருந்த யாருக்கும் அவர் யார் என்று தெரியவில்லை. ஒரு நடிகருக்கோ, அரசியல்வாதிக்கோ... அட! ஒரு சின்னத்திரை மிமிக்ரி ஆர்ட்டிஸ்டுக்கோ நம் நாட்டில் இந்த நிலை நேருமா?''

- எம்.சுரேஷ், கடலூர்.

''இந்த வாரம் கவனம் கவர்ந்த இந்தியன் யார்?''

''யுவராஜ் சிங்! புற்று நோய்த் தாக்குதல் மற்றும் சிகிச்சை தீவிரங்களில் இருந்து மீண்டு வந்த யுவராஜ், நியூஸிலாந்துக்கு எதிரான டி-20 போட்டி யில், ஏதோ முந்தைய நாள் விட்ட இடத்தில் இருந்து விளையாடுவதுபோல சிக்சர்களைப் பறக்கவிட்டார். எதிர்வரும் டி-20 உலகக் கோப்பையில் இந்த 'சிங்’கத்தின் கர்ஜனை சிக்சர்களாக மாறட்டும்!''

கி.சிவா, மைசூர்.

''ராமதாஸ் பரபரப்பாக இருக்கிறார். ஆனால், அன்புமணி ராமதாஸ் அமைதியாகிவிட்டாரே!?''

''அசைன்மென்ட் எதுவும் சிக்கவில்லையோ என்னவோ? 'ஹீரோயின்’ பட போஸ்டர்களில் கரீனா கபூர் கையில் சிகரெட்டுடன் சிலிர்க்க வைக்கிறாரே... இது சார் தகவலுக்கு!''

- ஆகாஷ், சிவகங்கை.

நானே கேள்வி... நானே பதில்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism