Published:Updated:

"அலமேலு என் ரத்த சொந்தம்!"

எஸ்.ராஜாசெல்லம்படம் : எம். தமிழ்ச்செல்வன்

"அலமேலு என் ரத்த சொந்தம்!"

எஸ்.ராஜாசெல்லம்படம் : எம். தமிழ்ச்செல்வன்

Published:Updated:

டாக்டர்களை நடமாடும் தெய்வம் என்பார்கள் - சிலரைத் தவிர்த்து. விதியுடன் போராடி தினமும் அவர் கள் காக்கும் உயிர்கள் ஏராளம். உயிருக்கு ஆபத்தான நிலையில் வந்த ஒரு பெண்ணுக்குத் தனது ரத்தத்தைக் கொடுத்து, அறுவைச் சிகிச்சையும் செய்து உயிர் காத்துள்ளார் தருமபுரியைச் சேர்ந்த டாக்டர் கவிதா.

"அலமேலு என் ரத்த சொந்தம்!"

தருமபுரி மாவட்டம் கதிரிபுரம் கிராமத்தைச் சேர்ந்த செல்வத்தின் மனைவி அலமேலுவுக்குத் திடீர் பிரசவ வலி. கதறித் துடித்த அலமேலுவை அள்ளிப் போட்டுக்கொண்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு விரைந்தார்கள் குடும்பத்தினர். வழியிலேயே ஏகத்துக்கும் ரத்தப்போக்கு. பரிசோதனையில் தொப்புள் கொடி அறுந்துவிட்டதால் குழந்தை இறந்துவிட்டிருந்தது. அறுபட்ட தொப்புள் கொடி வழியாக தாய்க்கு தொடர் ரத்தப்போக்கு ஏற்பட்டதால், அவரது ரத்தத்தின் உறையும் தன்மையும் பாதிக்கப்பட்டது. ஃப்ரெஷ்ஷான ரத்தம் கொடுத்தால் மட்டுமே அலமேலுவின் உயிரைக் காக்க முடியும். உடனடியாக டோனர்ஸ் யாரும் கிடைக்காத நிலையில், அறுவைச் சிகிச்சை செய்த டாக்டர் கவிதாவே தனது ரத்தத்தைக் கொடுத்து அலமேலுவைக் காப்பாற்றி இருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''இதுபோன்ற சமயங்களில், பாதுகாக்கப்பட்ட ரத்தத்தில் இருந்து பிரித்து எடுத்து பாதுகாக்கப் படும் 'ஃப்ரெஷ் ஃப்ரோஷன் பிளாஸ்மா’ அல்லது 'பிளேட்லெட்’ ஆகியவற்றை மட்டுமே செலுத்த வேண்டும். இதற்கான வசதி தருமபுரியில் இல்லை. ஒரே வாய்ப்பு, ஒருவரது ரத்தத்தை உடனடியாக, நேரடியாகச் செலுத்துவதுதான். சில நிமிடங்களில் ரத்தம் செலுத்தாவிட்டால் அலமேலுவின் உயிரைக் காப்பாற்ற முடியாத சூழல். என்னுடைய ரத்தமும் அலமேலுவின் ரத்தமும் 'ஓ பாசிட்டிவ்’தான். அதனால், உடனடியாக ரத்தம் கொடுத்தேன். இனி, அவர் என் ரத்த சொந்தம். எத்தனையோ உயிர்களைக் காப்பாற்றி இருக்கிறேன். அலமேலுவைக் காப்பாற்றிய அன்றைய தினம்தான் நான் டாக்டர் என்பதற்கான அர்த்தம் உணர்ந்தேன்!'' - நெகிழ்கிறார் கவிதா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism