Published:Updated:

நானே கேள்வி... நானே பதில்!

காமராஜர் ஏன் கர்மவீரர்?

நானே கேள்வி... நானே பதில்!

காமராஜர் ஏன் கர்மவீரர்?

Published:Updated:

''அது ஏன் பிள்ளையார் மேல் மட்டும் நம்மவர்களுக்கு அத்தனை பிரியம்?''

நானே கேள்வி... நானே பதில்!
##~##

''சென்னை பட்டினப்பாக்கத்தில் விநாயகர் சிலைகளைக் கரைக்கும் வைபவம் விமரிசையாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது முழுக்கவே பேரீச்சம்பழத்தில் செய்த விநாயகரை கடலில் கரைக்கக் கொண்டுவந்தார்கள். அங்கிருந்த சிறுவர்கள் உடனே ஓடிவந்து ஆளுக்கு ஒன்றிரண்டாக விநாயகரிடமிருந்து பேரீச்சம் பழங்களை உரித்துத் தின்னத் தொடங்கிவிட்டார்கள். பேரீச்சம்பழ விநாயகர் என்னவோ புன்னகையுடனே இருந்தாலும் அவருடைய கேர் டேக்கர் கள் அந்தச் சிறுவர்களை விரட்டியடித்து இருக் கிறார்கள். இந்த அன்பும் அந்நியோன்யமும் வேறு எந்தக் கடவுளிடம் கிடைக்கும்!''

- கி.சித்ரா, சிறுகுடி.

''கருணாநிதி, விஜயகாந்த் இருவரும் சட்டசபை நிகழ்ச்சிகளில் பங்கேற்றால் எப்படி இருக்கும்?''

''தமிழ்நாட்டில் மின்வெட்டே இருக்காது. (பின்னே... நடக்காத விஷயத்தைப் பற்றிக் கேட்டால் இப்படித்தானே பதில் சொல்ல முடியும்?)''

- எஸ்.பழனிவேல், திருமாளம்.

''அப்போதும் சரி... இப்போதும் சரி... ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட அதிகாரிகள்தான் அரசு நிர்வாகத்தை நடத்திச் செல்கிறார்கள். ஆனால், பள்ளிப் படிப்பைக்கூட முடிக்காத காமராஜர் சிறந்த நிர்வாகி என்று எப்படிச் சொல்ல முடியும்?''

''அப்போதைக் காட்டிலும் இப்போதைய அரசாங்க அதிகாரிகள் திறனுடனும் தொழில்நுட்ப நேர்த்தியுடனும் இருக்கிறார்கள். ஆனால், ஏன், காமராஜர் போல ஒரு முதல்வரை நம்மால் காண முடியவில்லை? காமராஜரின் சிறப்பு... அவரது அப்பழுக்கற்ற நேர்மை. தனக்காகவும் தன்னைச் சார்ந்தவர்களுக்காகவும் துளிகூட சகாயம் பெறாத அவரது கறாரான குணம், அவருக்குக் கீழ் உள்ளவர்களை அப்படி இருக்கவைத்தது. அதனாலேயே சீரிய நிர்வாகம் சாத்தியமானது!''

- வி.என்.கிருஷ்ணமூர்த்தி, மதுரை.

''தமிழ்நாட்டில் தாய்மொழிப்பற்று எந்த அளவுக்கு உள்ளது?''

''சூரியன்னா என்னம்மா?''

''சன் குட்டி...''

''பலாச்சுளைன்னா என்னம்மா?''

''ஜாக்ஃப்ரூட் செல்லம்...

''எதிர்பார்க்கிறதுன்னா என்னம்மா?''

''எக்ஸ்பெக்ட் பண்றது...''

''ஆராரிரோ பாட்டுன்னா என்னம்மா?''

''லல்லபிடா...''

''அப்போ... தாய்மொழின்னா?''

''மதர் டங்.''

- கீதா ஆனந்த், சென்னை.

''கூடா நட்பு எது?''

''இரு நண்பர்கள் அடர்ந்த காடு வழியாகப் போய்க்கொண்டு இருந்தார்கள். அப்போது ஒரு கரடி அந்த வழியாக வந்தது. முதல் இளைஞன் அதைப் பார்த்ததும், 'டேய்... தூரத்துல ஒரு கரடி வருது. அது நம்மைப் பாத்திருச்சி’ என்றான். உடனே அடுத்தவன் சாவகாசமாக அமர்ந்து, ஓடுவதற்கு வசதியாகத் தன்னுடைய காலணியை அணிய ஆரம்பித்தான். உடனே முதலாமவன் கேட்டான், 'நீ கரடியைவிட வேகமாக ஓட முடியும் என நினைக்கிறாயா?’ இரண்டாமவன் சொன்னான், 'இப்போது பிரச்னை நான் கரடியைவிட வேகமாக ஓட முடியுமா, முடியாதா என்பது அல்ல. உன்னைவிட வேகமாக ஓட முடியுமா, முடியாதா என்பது தான்!’ கூடா நட்பு புரிகிறதா?''

- தீ.அசோகன், சென்னை.

''உடல், பொருள், ஆவி அனைத்தும் பொது நலன்களுக்காகவே ஒருத்தர் தர முடியுமா?''

நானே கேள்வி... நானே பதில்!

''எப்போதாவது அரிதாக அப்படி ஒருவரைப் பார்க்க முடியும். சின்ன வயதில் இருந்தே சுதந்திர வேட்கை, பொதுவுடைமைச் சித்தாந்தங்களில் தீவிரப் பற்றுடையவர் அவர். கம்யூனிசக் கட்சியில் சேர்ந்து தேசத்துக்காக உழைத்தார். தன் வாழ்க்கையையே சமூகத்துக்காக அர்ப்பணித்துக்கொண்ட அவருக்கு, அவருடைய 70-வது வயது பிறந்த நாள் விழாக் கொண்டாட்டத்தின்போது, கட்சித் தொண்டர்கள் ஒரு கோடி ரூபாயைப் பண முடிப்பாகத் தந்தார்கள். அந்த மேடையிலேயே அந்தப் பணத்தைக் கட்சிக்கே நன்கொடையாகத் தந்துவிட்டார். அரசு ஊழியராகப் பணியாற்றிய அவருடைய மனைவி ஓய்வு பெற்றார். விபத்தில் அவர் உயிரிழந்தபோது அவருடைய ஓய்வுக் காலப் பலன்களாக

நானே கேள்வி... நானே பதில்!

10 லட்சம் வந்தது. அதையும் கட்சிக்கே கொடுத்துவிட்டார். தன்னுடைய 83-வது வயதில் அவர் சமீபத்தில் இறந்தார். அவரது விருப்பபடியே அவரது உடல் அரசு மருத்துவமனைக்குத் தானமாகத் தரப்பட்டது. இந்தக் காலத்தில் இப்படிப்பட்ட ஒருவரா; யார் அவர் என்று கேட்கிறீர்களா? கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஏ.எம்.கோபு.''

- ஆர்.கே.சுந்தரம், வடபழநி.

''பொய்யைத் திரும்பத் திரும்பச் சொன்னால் உண்மை ஆகிவிடுமாமே?''

''ஜெயலலிதா: மின்வெட்டு இல்லாத் தமிழகம் விரைவில் உருவாகும்.

கருணாநிதி: தமிழீழம் மலர என் உயிரையும் கொடுப்பேன்.

விஜயகாந்த்: எங்களால்தான் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தது.

ராமதாஸ்: 2016-ல் பா.ம.க. ஆட்சியைப் பிடிக்கும்.

ஞானதேசிகன்: நான் தலைவரான பின் காங்கிரஸில் அனைத்து கோஷ்டிகளும் ஒற்றுமையாக உள்ளன.

இதையெல்லாம் தலைவர்கள் திரும்பத் திரும்பக் கூறும்போது, தொண்டர்கள் உண்மை என நம்புகிறார்கள் அல்லவா?''

எஸ்.அரவிந் ராம்சுந்தர், திருமங்கலம்.

நானே கேள்வி... நானே பதில்!