Published:Updated:

அனுஷ் சிரிப்பானா?

எஸ்.ராஜாசெல்லம்படங்கள் : எம்.தமிழ்ச்செல்வன்

அனுஷ் சிரிப்பானா?

எஸ்.ராஜாசெல்லம்படங்கள் : எம்.தமிழ்ச்செல்வன்

Published:Updated:
##~##

மூன்றரை வயதில் துறுதுறுவெனத் துள்ளி விளையாடிய சிறுவன், நடக்கவே சிரமப்பட்டு முடங்கிப்போனால் எப்படி இருக்கும்? தருமபுரி மாவட்டம், பொம்மிடி அருகே இருக்கிறது கொண்டஹரஅள்ளி ஊராட்சி. இங்குள்ள சண்முகம் - ரீனா தம்பதியின் ஏழு வயதான முதல் குழந்தை அனுஷ்தான் இப்படி முடங்கிக்கிடக்கிறான்.

 அனுஷைப் பாதித்து இருப்பது முடக்குவாத நோய்களில் ஒன்றான 'ஜுவனைல் இடியோபதிக் ஆர்த்தரைட்டிஸ் சிஸ்டமிக்’ (Juvenile Idiopathic Arthiritis Systemic) முடக்குவாதங்களில் இது மிக மோசமான வாதம். சில மாதங்களுக்கு முன் இரவில் மட்டும் காய்ச்சல், மூட்டு வலி என விட்டுவிட்டு வந்திருக்கிறது. அப்படி ஆரம்பித்த பிரச்னை ஒருகட்டத்தில் அனுஷை மொத்தமாக முடக்கிவிட்டது. தங்கள் குழந்தைக்கு வந்திருப்பது என்ன நோய் என்று தெரிந்துகொள்ளவே படாத பாடுபட்டு, ஏகப்பட்ட மருத்துவமனைகளுக்கு அலைந்திருக்கிறார்கள் அனுஷின் பெற்றோர். இறுதியாக, சென்னை அரசு தலைமை மருத்துவமனையில்தான் நோயின் பெயர், தன்மை, அதற்கான சிகிச்சை ஆகியவற்றைத் தெரிந்துகொண்டு இருக்கிறார்கள்.  

அனுஷ் சிரிப்பானா?

ஆனால், 17 ஆயிரம் ரூபாய் விலையுள்ள ஊசியை மாதம் ஒன்று வீதம் 30 மாதங்களுக்குப் போட்டால்தான் சிறுவனைக் குணமாக்க முடியும் என்ற நிலை. கூலித் தொழிலாளியான சண்முகம் இதைக் கேட்டு இடிந்துபோயிருக்கிறார். அதன் பிறகு, பலரது உதவியால் இதுவரை 12 ஊசிகள் போட்டிருக்கிறார்கள். மேற்கொண்டு உதவிக்காக யாரை அணுகுவது என்று தெரியாமல் தவித்துக்கொண்டு இருக்கின்றனர் இந்த ஏழைப் பெற்றோர்.

ரீனாவிடம் பேசினேன். ''இந்த வியாதிக்கு டெல்லி, மும்பை, அகமதாபாத் மாதிரி பெரிய ஊர்கள்லதான் ஸ்பெஷல் டாக்டர் கள் நிறையப் பேர் இருக்காங்களாம். நம் ஊருல இந்த வியாதிக்கு ஒரு சில டாக்டர்கள்தான் சிகிச்சை தர்றாங்க. நோய் பாதிப்பு அதிகமா இருந்தப்போ, அனுஷ§க்கு ரெண்டு தொடையிலும் நரம்பு இழுத்துப் பிடிச்சிடும். தரையில படுத்துக்கிட்டு அவன் வலியால துடிக் கிறதை எங்களால பார்க்கவே முடியாது. உதவி கேட்டுப் பலரையும் அணுகினோம். வேலூர் மாவட்ட ரோட்டரி சங்கத்தில் இருந்து சலுகை விலையில் மருந்து வாங்கிக் கொடுத்தாங்க. இப்படிப் பலரோட உதவியால இதுவரைக்கும் 12 ஊசிகளைப் போட்டுட்டோம். நகரக்கூட முடியாம இருந்த அனுஷ் தொடர் சிகிச்சையால் இப்போ வீட்டுக்குள் நடமாடுறான். மாசத் துக்கு ஒரு ஊசி போடணும்; தவறினா மருந்து, மாத்திரை உதவியோடு அதிகபட்சம் மூணு மாசம் வரை தள்ளிப்போடலாம். அதுக்கு அப்புறமும் ஊசி போடலைன்னா, குழந்தை நிரந்தரமா நடக்கவே முடியாமப் போயிருவான். ஒரு தடவை உதவினவங்களைத் திரும்பவும் போய்ப் பார்க்க முடியாத நிலையில இருக்கோம். மீதி இருக்கும் 18 ஊசிகளைப் போட யார்கிட்ட உதவி கேட்குறதுனு தெரியலை. உதவி செஞ்சீங்கன்னா, எங்க அனுஷ் நிம்மதியா, நிரந்தரமா சிரிப்பான்'' என்கிறார் கண்ணீரைத் துடைத்தபடி.

அனுஷ§க்குச் சிகிச்சை அளித்துவரும் டாக்டர் சாமிகிருஷ்ணனிடம் பேசினேன். ''குழந்தைகளைப் பாதிக்கும் எட்டு வகை முடக்குவாதங்களில் இது மோசமான ஒன்று. ஆண், பெண் இருபாலருக்குமே இந்தப் பாதிப்பு வரும். ஆனால், பாதிப்பு வருவது மிகமிக அரிது. மாலை மற்றும் இரவில் மட்டும் அதிகக் காய்ச்சல் வரும். காய்ச்சல் வரும் போது உடல் முழுக்கக்

கொசுக்கடிபோலப் புள்ளிகள் தோன்றும். பகலில் காய்ச்சல், புள்ளிகள் இரண்டுமே மறைந்துவிடும். பகல் நேரத்தில் டாக்டர் சாதாரணமாகச் சோதித்தால் எதையுமே கண்டுபிடிக்க முடியாது. உடல் சோர்வும் செயல்பட முடியாத அளவு மூட்டுகளில் வலியும் இருக்கும். கவனிக்காமல் விட்டால், உடலில் இருக்கும் மூட்டுகள் மற்றும் எலும்புகளை உருக்கிவிடும். ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் முழுமையாகக் குணப்படுத்திவிடலாம். ஆனால், இதற்கான மருந்துகளின் விலை மிகமிக அதிகம். அதுதான் வருத்தமான, சவாலான விஷயம்!'' என்கிறார்

நல்ல உள்ளங்களின் கவனத் துக்கு!

உதவி செய்ய விரும்புபவர்கள் உங்களது விருப்பத்தை கருத்து பகுதியில் தெரிவிக்கலாம்...

உங்கள் மின் அஞ்சல் முகவரியோடு உங்களது தொடர்பு எண்ணையும் தெரிவித்தால் விகடன் உங்களை தொடர்பு கொள்ளும்..