Published:Updated:

"என்னோடு வா டேட்டிங் வரைக்கும்!"

பி. விவேக் ஆனந்த்படங்கள் : கே.தீட்ஷித்

"என்னோடு வா டேட்டிங் வரைக்கும்!"

பி. விவேக் ஆனந்த்படங்கள் : கே.தீட்ஷித்

Published:Updated:
##~##

செப்டம்பர் மாதம் வந்தால் போதும். திருச்சி கல்லூரிகள் களைகட்டிவிடும். காரணம், திருச்சி என்.ஐ.டி-யில் நடக்கும் 'ஃபெஸ்டம்பர்’ கலாசாரத் திருவிழா. இந்த வருடம் விழாவின் சிறப்பு விருந்தினர் இயக்குநர் கௌதம் மேனன். அதிரிபுதிரி உற்சாகத்துக்குச் சொல்ல வேண்டுமா?

 கல்லூரி மாணவர்களைப் பார்த்ததும் உற்சாகம் அடைந்த கௌதம், ''நான் மூகாம்பிகை பொறியியல் கல்லூரியில் படிக்கும்போது புதுக்கோட்டையில் இருந்து இங்கு வந்து சைட் அடிப்பேன். அந்தக் காலகட்டத்தில் ஒரு முறைகூட இங்கே உள்ளே நுழைய முடியவில்லை. வாசலிலேயே பொழுதைக் கழிச்சுடுவேன்'' என்றவர், ''என்.ஐ.டி. கேர்ள்ஸ் ஆர் ஸோ ப்ரெட்டி'' என்றார். உடனே, மாணவிகள் பக்கம் இருந்து செம அப்ளாஸ் வர... ''நான் படிக்கும்போது சொன்னேன்'' என்று அவர் பல்பு கொடுக்க, இப்போது பாய்ஸ் சைடில் இருந்து செம அப்ளாஸ்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"என்னோடு வா டேட்டிங் வரைக்கும்!"

எக்கச்சக்கமானவர்கள் கௌதமிடம் கேட்ட கேள்வி - யோகன் படம் என்னாச்சு? ''அந்தக் கதையை விஜய் வேண்டாம் எனக் கூறிவிட்டார். அவருடைய ரசிகர்களுக்கு அந்தப் படம் திருப்தி யாக இருக்காது என்று நினைக்கிறார்'' என்ற பதில் மூலம் படம் கைவிடப்பட்டது என மறை முகமாகக் கூறினார் கௌதம்.

வட இந்திய மாணவி ஒருவர், ''நீங்கள் யார்? உங்கள் பெருமை என்ன என்று எனக்குத் தெரியாது'' எனக் கூற, ''என்னுடன் ஒரு நாள் டேட்டிங் வந்து பாருங்கள்'' என்று கௌதம் கூலாகச் சொல்ல... மற்ற மாணவிகள் ''நாங்களும் வருகிறோம்'' என்று கோரஸ் பாட, வெடித்துச் சிரித்தார் கௌதம்.

இறுதி நாளன்று ஆண்ட்ரியா பாட வருகிறார் என்றதும் கூட்டம் குவிந்தது. ஆண்ட்ரியாவைப் பேச அழைக்கும்போது சில குறும்புக்கார மாணவர்கள், ''அனிருத் எங்கே?'' எனக் கரைச்சலைக் கொடுத்தனர். 'இதுவரை இல்லாத உறவு’ என ஆண்ட்ரியா பாட ஆரம்பிக்க... விசில் சத்தம் காதைப் பிளந்தது.

''அடுத்த ஆண்டு என்.ஐ.டி-க்குப் பொன்விழா ஆண்டு. இன்னும் சிறப்பாக நடத்துவோம்'' என்று உற்சாகமாக விடை கொடுத்தனர் என்.ஐ.டி. மாணவர்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism