Published:Updated:

எரிந்து முடிந்த துளிர்!

கே.கே.மகேஷ், இ.கார்த்திகேயன்படம் : எல்.ராஜேந்திரன்

எரிந்து முடிந்த துளிர்!

கே.கே.மகேஷ், இ.கார்த்திகேயன்படம் : எல்.ராஜேந்திரன்

Published:Updated:
##~##

விக்கவிட்டுப் போய்விட்டாள் மாரிச்செல்வி.

 பிறவிக் குறைபாடு காரணமாக திக்கித் திக்கிப் பேசிய மாரிச்செல்வி, பெற்ற தாயின் கையாலேயே தீவைத்துக் கொளுத்தப்பட்ட கொடூரம்பற்றி கடந்த 4.7.12 இதழில் 'தீக்குள் மகளை வைத்தால்...’ என்ற தலைப்பில் எழுதி இருந்தோம். சொல்லவே கஷ்டமாக இருக்கிறது. இப்போது மாரிச் செல்வி இறந்துவிட்டாள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கோவில்பட்டியைச் சேர்ந்த புரோட்டா மாஸ்டர் கோபாலின் மகள் மாரிச்செல்வி. வயதுக்கேற்ற வளர்ச்சி இல்லாததால் திக்கித் திக்கிப் பேசிய அவளை, அக்கம்பக்கத்தினர் கிண்டலடிக்க, தாய் ராஜேஸ்வரிக்கு மகள் மீது வெறுப்பாகிவிட்டது. தான் பெற்ற குழந்தையைத் தானே திட்டிக்கொண்டே இருந்திருக்கிறார்.

எரிந்து முடிந்த துளிர்!

தாயின் கடுஞ்சொல்லில் தகித்த குழந்தையை ஹாஸ்டலில் சேர்த்திருக்கிறார் கோபால். அப்பா மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்த மாரிச்செல்வி, இரவோடு இரவாக வீட்டுக்கு ஓடிவந்துவிட, 'மறுபடியும் வந்துட்டியா?' என்று கொந்தளித்த ராஜேஸ்வரி 11.6.12 காலையில் மகளை எழுப்பி, சமையலறைக்குள் அழைத் தவர், மண்ணெண்ணெயை ஊற்றித் தீவைத்துவிட்டா ராம். கோவில்பட்டி அரசு மருத்துவமனையின் தீக்காயப் பிரிவில் சேர்க்கப்பட்டாள் மாரிச்செல்வி. தீவைத்துவிட்டு ஓடிப்போன ராஜேஸ்வரி, இரண்டு நாட்கள் கழித்து மனம் இரங்கி பிள்ளையைப் பார்க்க வந்தார். போலீஸ் அவரைக் கைது செய்துவிட்டது. தீவிர சிகிச்சை அளித்தும், மாரிச்செல்வியின் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை. நான்கு மாதமாக வேதனையில் துடித்த அவள், கடந்த 1-ம் தேதி இரவு பரிதாபமாக இறந்துபோனாள்.

'உடம்போட சேர்ந்து வாயும் தொண்டையும் வெந்துபோனதால அவளால சரியா சாப்பிட முடியலை. இளநி, பாலுனு நீராகாரம் மட்டும் கொடுத்தோம். தீப்புண்ணில் இருந்து வயித்துக்குள்ளாற கிருமி பரவிடுச்சி. கை, கால்ல புண் ஆறாம நீர் கோக்க ஆரம்பிச்சிடுச்சி. நீராகாரமும் பாதியாக் குறைஞ்சிடுச்சி. உடம்பு பூராம் நீர் கோத்து, தையல் எல்லாம் பிரிய ஆரம்பிச்சிடுச்சி. ரொம்ப வீக்காயிட்டானு குளுக்கோஸ் போட முயற்சி பண்ணுனாங்க. ஆனா, தீக்காயத்தால ரத்தக் குழாய் எல்லாம் சுருங்கிட்டதால, எதுவும் ஏத்த முடியலை. கடைசியில... ஒண்ணாம் தேதி ராத்திரி 10 மணி இருக்கும். மாரிச்செல்வி எங்களை விட்டுட்டுப் போயிட்டா' என்று கதறிய கோபால், 'ராஜேஸ்வரியை இப்ப கொலை வழக்குல கைது பண்ணலாம். ஆனா, ஜாமீனில் வந்த அவளுக்கு வாழ்க்கை முழுக்க மறக்கவே முடியாத தண்டனையைக் கொடுத்துட்டா மாரிச்செல்வி. 'யம்மா... வலிக்குதா?’ என்று வாஞ்சையோடு அவள் கேட்டப்ப, மாரிச்செல்வி முகத்தைத் திருப்பிக்கிட்டா' என்கிறார் கண்ணீர் வழிய.

பாரதிநகர் 2-வது தெருவில்தான் மாரிச்செல்வியின் குடும்பம் வசித்தது. கோபால் இடம் மாறிச் சென்றுவிட்டபோதிலும், இப்போதெல்லாம் அங்கு உள்ளவர்கள் திக்குவாய் குழந்தைகளைக் கிண்டல் செய்வதில்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism