Published:Updated:

தூரிகையாட்டம்!

கவின் மலர்படங்கள் : ஜெ.வேங்கடராஜ்

தூரிகையாட்டம்!

கவின் மலர்படங்கள் : ஜெ.வேங்கடராஜ்

Published:Updated:
##~##

சையாத, பேசாத உருவங்கள் மூலம் நடனத்தையும் இசையையும் ரசிக்க முடியுமா? ஓவியர் மார்க் ரெத்தினத்தின் கைவண்ணத்தில் உருவான ஓவியங்களைக் கண்டபோது என்னால் ரசிக்க முடிந்தது. கரகாட்டம், தேவராட்டம், பறையாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் என்று மக்கள் கலைகளான கிராமிய ஆட்டக் கலைகள் மட்டும் அல்லாது; மேட்டுக்குடிக் கலையான பரதத்தின் முத்திரைகள் உட்பட அனைத்து ஆட்டக் கலைகளும் ஒரு விரல் வழி தூரிகை யில் ஓவியங்களாகி இருக்கின்றன. மார்க் ரெத்தினம் இதைச் சாத்தியப்படுத்தி இருக் கிறார். அழகும் உணர்வும் பொங்கும் அந்த ஓவியங்களில், ஒரே ஆட்டத்தை ஓர் ஆண் ஆடுவதற்கும் ஒரு பெண் ஆடுவதற்குமான வேறுபாடுகளை உடலில் கொண்டுவந்திருந்த விதம் ஆச்சர்யம்!

 இந்த ஓவியங்களின் சிறப்பே இவற்றில் எவற்றுக்கும் முகத்தில் உறுப்புகள் கிடையாது. கண், மூக்கு, வாய் என்று எதுவும் இல்லாமல் முகம் இருக்க வேண்டிய இடத்தில் ஒரு வட்டம் மட்டுமே இருக்கிறது. ஆகவே, முகத்தில் உணர்வு களைக் காட்ட வாய்ப்பு இல்லை. முழுவதுமாக உடல்மொழியில் மட்டுமே உணர்வுகளைக் காட்டி இருக்கிறார் மார்க். கண்காட்சிகளில் பொதுவாக ஓவியங்கள் ஓரளவு பெரியதாக இருக்கும். ஆனால், இவருடைய ஓவியங்கள் சிறிய அளவில் இருக்க என்ன காரணம் என்று கேட்டேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தூரிகையாட்டம்!

''பொதுவாகவே, ஓவியங்களைச் சற்று தொலைவில் இருந்து பார்க்க வேண்டும். அப்போதுதான் அதன் முழுப் பரிமாணத்தையும் உணர்ந்துகொள்ள முடியும். அப்படியான ஓவியங்களைக்கொண்டு கண்காட்சிகளை நானே நடத்தி இருக்கிறேன். இந்தக் கண்காட்சியைப் பொறுத்தவரை பார்வையாளர்களுக்கும் ஓவியங்களுக்குமான உறவை மேலும் நெருக்கமாக்க, அவற்றை மிக அருகில் இருந்து காண வேண்டிய அவசியம் இருக்கிறது. இது ஒரு முக்கியமான காரணம். ஓவியங்களின் விலை அனைவரும் வாங்கும்படியாக இருக்க வேண்டும் என்பதாலும் அளவைச் சிறியதாக்கி இருக்கிறேன். ட்ராட்ஸ்கி மருது சார் கண்காட்சிக்கு வந்து பார்த்து, 'நான் செய்ய நினைத்ததை நீ முந்திக்கொண்டு செய்துவிட்டாய்!’ என்று சொன்னார். ரொம்ப சந்தோஷமாக இருந்தது'' எனும் மார்க் ரெத்தினத்துக்கு வயது 42. கும்பகோணம் நுண்கலைக் கல்லூரியில் பயின்றவர். இதுவரை 15 கண்காட்சிகளைத் தனியாகவும் 8 கண்காட்சிகளை மற்றவர்களுடன் இணைந்து நடத்தியும் இருக்கிறார்.

கண்காட்சியைப் பார்வையிட்டுவிட்டு வெளியே வருகையில் சாலையில் நடந்துபோகிறவர்களிடம் நடன முத்திரையைத் தேடுகிறது மனம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism