''கர்நாடக அரசு நமக்குத் தண்ணீர் தர மறுப்பது நியாயமா?''

''நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசே நமக்கு மின்சாரம் தர மறுக்கிறதே... இதை என்னவென்று சொல்ல?''

- வி.சொக்கலிங்கம், ராஜபாளையம்.

''சென்னை நகரப் பேருந்துப் பயணத்தை ஒரு வரியில் சொல்ல முடியுமா?''

''பேருந்து ஓடுவதைவிட சிக்னலில் காத்து நிற்கும் நேரம்தான் அதிகம். அண்ணா சதுக்கத்தில் இருந்து தி.நகர் செல்ல ஒரு மணி நேரம் என்றால், அதில் பேருந்து ஓடுவது 20 நிமிடங்கள் மட்டுமே. சிக்னலிலும் போக்குவரத்து நெரிசலிலும் காத்து நிற்பது 40 நிமிடங்கள்!''

- எஸ்.விவேக், சென்னை-53.

''நிறையப் பேர் என்னை முதுகுக்குப் பின்னால் திட்டுகிறார்கள். என்ன செய்வது?''

''சீக்கிரம் வண்டிய எடுங்க! க்ரீன் சிக்னல் விழுந்த பிறகும் வண்டிய கிளப்பாவிட்டால் திட்டாம என்ன செய் வாங்க?''

- விஜயலட்சுமி, பெங்களூரு-54.

''முன்னாள் தி.மு.க. அமைச்சர்கள்... இந்நாள் அ.தி.மு.க. அமைச்சர்கள்... என்ன வித்தியாசம்?''

''அவர்கள் ஒவ்வொருவராக 'உள்ளே’ போய்க்கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் ஒவ்வொருவராக 'வெளியே’ வந்துகொண்டு இருக்கிறார்கள்!''

- சிக்ஸ் முகம், கள்ளியம்புதூர்.

''மதுரையைத் 'தூங்கா நகரம்’ என்று சொல்கிறார்களே...''

''அது அந்தக் காலம்... இப்போது தமிழ்நாட்டில் சென்னை நீங்கலாக எல்லா ஊர்களும் 'தூங்கா நகரம்’தான்... அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தயவில்!''

- விஜயலக்ஷ்மி, மதுரை-9.

''ஓர் உயிருக்கு நம் சமூகத்தில் என்ன மதிப்பு?''

''சமீபத்தில் டெங்கு காய்ச்சல் சோதனையை திருவாரூரில் மேற்கொண்ட மருத்துவ அதிகாரி, தொலைக்காட்சிகளுக்கு அளித்த பேட்டியில் இப்படிக் கூறுகிறார்... '110 பேரைச் சோதித்ததில் 67 பேரை டெங்கு பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுவரை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 18 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்!’ ஓர் உயிருக்கு மருத்துவர் அளிக்கும் மதிப்பு அந்த 'மட்டுமே’ என்ற வார்த்தையில் வெளிப்படுகிறதே!''

- எம்.ஸ்டாலின் சரவணன், கறம்பக்குடி.

''நாட்டில் நடக்கும் அவலங்களைப் பற்றி அறிவுஜீவிகள் வாய் திறந்து எதுவும் சொல்வது இல்லையே?''

''ஓட்டோ ரெனி கேஸ்டிலோ என்ற ஆங்கிலக் கவிஞன் இவர்களுக்காகவே ஒரு கவிதை எழுதியிருக்கிறான்.

'ஒரு நாள்
என் நாட்டு
அரசியல் சாரா அறிவுஜீவிகள்
எளிமையான எம் மக்களால்
குறுக்கு விசாரணை செய்யப்படுவர்
தன்னைச் சிறுகச் சிறுக
இழந்துகொண்டிருந்த
தீச்சுடரென மெதுவாக
அவர்கள் தேசம்
செத்துக்கொண்டிருந்தபோது
அவர்கள் என்ன
செய்துகொண்டிருந்தார்கள்
என்று விசாரிக்கப்படுவார்கள்!’ ''

- அனார்கலி, தஞ்சாவூர்.

''தலையாட்டுவதில் வல்லவர்கள் சோனியா காந்தியின் அமைச்சர்களா, இல்லை ஜெயலலிதாவின் அமைச்சர்களா?''

''முன்னவர்கள் புரிந்துகொண்டு தலை யாட்டுவார்கள். பின்னவர்கள் என்ன சொல்கிறார் என்று புரியாமலேயே தலை யாட்டுவார்கள்.''

- தீ.அசோகன், சென்னை-19.