Published:Updated:

அருணாவுக்கு கவனம் வேண்டும்!

வீயெஸ்வி

##~##

டிசம்பருக்கு முன்னோட்டமாக அக்டோபரில் விழா.

 முதல் வருடம் சுதா ரகுநாதன். சென்ற வருடம் சஞ்சய் சுப்ரமணியன். இந்திரா சிவசைலம் அறக்கட்டளைப் பதக்கம் வென்றவர்கள் பட்டியலில் இந்த வருடம் அருணா சாய்ராம். எனில், அடுத்த வருடம் டி.எம்.கிருஷ்ணா, அதைத் தொடர்ந்து பாம்பே ஜெயஸ்ரீ என்று கழுத்துத் தேடிப் பதக்கம் போகுமோ? பெண்-ஆண்-பெண் என்று மாறி மாறித் தேர்வு செய்யப்படுவதால் இந்த யூகம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மியூஸிக் அகாடமியுடன் இணைந்து ஒவ்வொரு நவராத்திரியின்போதும் இந்திரா சிவசைலம் அறக்கட்டளை நடத்தும் இந்த விழாவில், கொலுவுக்குச் சுண்டல் கொடுப்பதுபோல் பதக்கங்களை வாரிவிடுவது இல்லை. ஒன் அட் எ டைம் ஒன்லி.

அரங்க மேடை தோட்டாதரணியின் கை வண்ணத்தில் பளீரென்று மின்னியது. பதக்கத்தை வடிவமைத்தவரும் அவரே.

விழாவில் பதக்கம் பெறுபவர் கச்சேரி செய்ய வேண்டியது இங்கே கட்டாயம்.

கச்சேரியில்...

அருணாவுக்கு கவனம் வேண்டும்!

அருணா சாய்ராம், 70-களில் இதே அகாடமியில் காலி நாற்காலிகளுக்குப் பாடியிருக்கிறார். அன்று மேடை ஏறியபோது இருந்த பரபரப்பும் பதற்றமும், இன்று நிரம்பி வழியும் ஹாலில் பாடும்போதும் அவருக்கு ஏற்படுகிறதாம். நம்புவோம்.

அடி வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்க, சுத்த தன்யாசி ராகத்தில் ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் இயற்றிய 'ஸ்ரீ ராஜமாதங்கி’யுடன் தொடங்கினார் அருணா. அசால்ட்டாகப் புறப் பட்டு வந்தது அடாணா. அவருடைய கரகரப் பான கணீர்க் குரலுக்கு இந்த ராகம் அழகாக வளைந்து கொடுத்தது.

ரசிகர்களைக் கட்டிப்போட வேண்டுமானால், பந்துவராளியை அழைத்து வந்தால் போதும். மிஸஸ் சாய்ராம் அழைத்து வந்து கட்டிப் போட்டார். மூன்று ஸ்தாயிகளில் பந்துவராளி யைப் புரட்டி எடுத்துவிட்டு, 'சிவ சிவ சிவ யநராதா’ என்று ஜபம் செய்ய தியாகராஜர் சிபாரிசு செய்யும் பாடலை அருணா எடுத்தபோது, நீண்ட நாள்

அருணாவுக்கு கவனம் வேண்டும்!

தோழனைச் சந்திக்கும் உற்சாகம் ரசிகர்களுக்கு. பின்னே, எத்தனை முறை, எத்தனை பாடகர்கள் பாடிப் பரவசப்படுத்திய பலே பாட்டு இது.

மெயினாக பைரவி. மழைக் காலத்திலும் மக்கர் செய்யாமல் கீழ் ஸ்தாயியில் அனாயாசமாகப் பயணிக்கிறது அருணாவின் குரல். கடைசி ஸ்வரம் வரை அவர் சொல்பேச்சுக் கேட்கிறது. ஆலாபனை, நிரவல், ஸ்வரங்களுடன் அருணா சாய்ராம் பாடி முடித்தபோது கூட்டம் ஆர்ப்பரித்தது. குறிப்பாக, சாமி வந்துவிட்ட மாதிரி ஸ்வரங்களை ஆவேசத்துடன் பாடினார் அவர்.

''அகாடமி கச்சேரி ஆயிற்றே... பார்த்துப் பாடினாரா அருணா?'' - வெளியே மடக்கிய நண்பர் கேட்டார். பார்த்து - கவனமாக என்று கொள்க!

''ஒவ்வொரு பாடலையும் நல்லாப் பார்த்துப் பாடினார்...'' என்றேன். இங்கே, 'பார்த்து’ கவனம் இல்லாமல், அதாவது மனப்பாடம் செய்யாமல் பேப்பர் பார்த்துப் பாடுவது.

புழக்கத்தில் இருக்கும் பழக்கப்பட்ட பாடல் களை எல்லாம், ஆதிக் காலத்து ஓலைச் சுவடி களில் இருந்து பிரதி எடுத்துவந்து பாடுவது போல் மேடம் பாடுவது... ஸாரி, 'பாப்புலர் அப்பீல்’ உடைய ஒருவருக்கு அழகு அல்ல.

வரும் டிசம்பர் சீஸனிலாவது இவர் பார்க்காமல் பாடுவாரா என்று பார்க்கலாம். இல்லை எனில், அர்விந்த் கேஜ்ரிவாலிடம் போட்டுக் கொடுத்துவிடலாம்.

டெய்ல் பீஸ்:  2011-ல் பி.பி.சி. பிரோம்ஸ், ராயல் ஆல்பர்ட் ஹாலில் கச்சேரி செய்ய அருணா சாய்ராமை அழைத்தது. பிரோம்ஸின் 117 வருட வரலாற்றில், தென் இந்திய கிளாஸிக்கல் இசைக் கலைஞரை அழைத்தது இதுவே முதல் தடவை. கங்கிராட்ஸ் அருணா!