மகாத்மா காந்திக்கு ஒயிட் வாஷ் செய்தால் எப்படி இருக்கும்? அப்படி இருக்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த 75 வயது முதியவரான பெர்னார்ட் மேயர். காந்தியைப் போலவே கதராடையுடன் உலகம் முழுவதும் சுற்றி வந்து, காந்தியச் சிந்தனைகளை விதைத்து வருபவர். திண்டுக்கல் காந்திகிராமம் பல்கலைக்கழகத்துக்கு வந்திருந்தார். இடிந்தகரையில் அணு உலை எதிர்ப்பாளர்களைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவர்களைச் சந்திக்க வந்திருந்தார்.

ஆனால், அங்கு செல்ல 144 தடை உத்தரவு இருப்பதால், பயண திட்டத்தை மாற்றி, பொது மக்களிடம் காந்திய உணர்வுகளைப் பரப்ப ஆரம்பித்துவிட்டார். அவரிடம் பேசினோம்.

''அமெரிக்காவில் பாதிரியாருக்குப் படித்து ஒரு சர்ச்சில் பணியாற்றினேன். ஆனால், அங்கும் இன பேதம் இருப்பதைக் கண்டதும் அதிர்ச்சியாக இருந்தது. கறுப்பர்களை அமெரிக்க சர்ச் நடத்திய விதம் எனக்கு உடன்பாடாக இல்லை. எனவே, வெளியேறினேன். வியட்நாம் போர் எனக்குள் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு, காந்திய சிந்தனைகளைக் கற்றேன். காந்தியம் மட்டுமே உலகத்தை உயர்த்த முடியும் என்பதைப் புரிந்துகொண்டேன். 1965 முதல் காந்தியைப் போலவே உடை அணிந்து, காந்தியத்தை உலகம் முழுவதும் பரப்பும் பணியைச் செய்து வருகிறேன். அதனால், என்னை 'அமெரிக்கன் காந்தி’ என அழைக்கத் தொடங்கிவிட்டார்கள்.

சமத்துவம், அமைதி என்பதற்காக மட்டும் அல்லாமல் அணு உலைக்கு எதிராகவும் எனது போராட்டம் இருக்கிறது. பல்வேறு நாடுகளிலும் ஊழல், இனபேதம், அணு விவகாரம் போன்றவற்றை எதிர்த்ததால் நூற்றுக்கணக்கான முறை கைது செய்யப்பட்டு இருக்கிறேன்.

உலகம் முழுவதும் அணுக் கதிர்வீச்சு பற்றிய அச்சம் இல்லாமல் இருக்க வேண்டும். அணுவைப் பொறுத்தவரை மிகமிகக் கவனமாகக் கையாள வேண்டும். அதில் மனிதத் தவறு ஏற்பட்டால் மிகப் பெரிய விபரீதம் ஏற்படும். அதனால்தான் அணு உலைகள், அணு குண்டுகள் போன்றவற்றை எதிர்க்கிறேன்.

மிக விரைவில் மீண்டும் இங்கே வருவேன். அப்போது இடிந்தகரை மக்க ளோடு சேர்ந்து நானும் அணு உலைக்கு எதிராகப் போராடுவேன்!" என உற்சாகமாகப் பேசினார்.